செல்வத்தைக் குவிப்பது எப்படி என்பது குறித்து எழுதப்பட்டுள்ள நூல்களிலேயே மிகவும் பிரபலமான நூல்! உலகெங்கும் இப்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற, செல்வத்தைக் குவிப்பதற்கான அடிப்படை விதிகளை, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய பாபிலோனியர்கள் அறிந்திருந்தனர். செல்வத்தை ஈட்டி, அதைப் பாதுகாத்து, அதைப் பன்மடங்கு பெருக்கியிருந்த பாபிலோனியச் செல்வந்தர்களின் வெற்றி இரகசியங்களை, ஜார்ஜ் எஸ். கிளேசன், சுவாரசியமான கதைகளின் வடிவில் இந்நூலில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு இன்றளவும் விற்பனையில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்ற இந்நூல், சிக்கனம், சேமிப்பு, பாதுகாப்பான முதலீடு, கடின உழைப்பு, நேர்மை போன்ற அடிப்படை விஷயங்களின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகிறது. Read more
0 பின்தொடர்பவர்கள்
3 புத்தகங்கள்