shabd-logo

தேவை அனுபவக் கல்வியா? ஏட்டுக் கல்வியா?

21 September 2023

0 பார்த்தது 0

அன்றைய கல்வியும், இன்றைய கல்வியும் :

Fees கட்டவில்லையா? வீட்டுக்குப் போ என்கிறது இன்றைய கல்வி.                    என்னது, அவன் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லையா?                 இரண்டுபேர் போய் அழைத்து வாருங்கள் என்றது அன்றையக் கல்வி.

வயிற்றுப்பசியைப் போக்குவதற்கும், ஆடம்பரமாக வாழ்வதற்குமான வழித்தான் கல்வியா?

              கல்வி கற்றால்தான் நல்ல வேலை கிடைக்கும். கார், அப்பார்ட்மென்ட் வாங்கலாம். வளமாக வாழலாம் என்றே நினைக்கிறது இன்றைய தலைமுறை. அந்த அளவுக்கு கல்வி ஒரு வணிக நிலைக்கு மாறிவிட்டது.

இன்றைய பள்ளிகளிலும், படி, கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகு, சம்பாதி, வீடு, கார் வாங்கு வசதியாக வாழ்க்கையை வாழ் என்றுத்தான் இன்றைய கல்விச் சாலைகள் கல்வியை போதிக்கிறது. எந்தக் கல்விச்சாலையும் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ளவேண்டும், மற்றவரை எப்படி மதித்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைக் கல்வியை கற்பிக்க மறந்துவிடுகின்றது.

              கல்வி என்பது வெறும் புத்தகங்களை படிப்பதோ அல்லது பலவிதமானவற்றை குறித்த அறிவோ இல்லை.

கல்வியைக் குறித்து விவேகானந்தர் பின்வருமாறு கூறுகிறார்.

எத்தகைய பயிற்சியின் மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்பாடும், தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு பயன்தரும் வகையில் அமைகிறதோ அந்தப் பயிற்சித்தான் கல்வி என்று.

மின்னொளி மூலம் மேலும் புத்தகங்கள்

3
கட்டுரைகள்
மின்னொளி
0.0
வாழ வருங்கள் வழிகள் ஆயிரம்.

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்