வாழ்க்கை
போராட்டத்தை சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது. பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துக்கொண்டேத்தான் இருக்கிறது. பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்து தான் தன் தேவைகளை பூர்த்தி செய்கிறது (நேதாஜி). போராட்டத்தில் பிறந்து போராட்டத்தில் மடிவது தான் வாழ்க்கை. இன்று மனிதன் போராட்டம் இல்லாத வாழ்க்கையை வாழ ஆசைப்படுகின்றான். அதைத்தான் விரும்புகின்றான். வாழ்க்கையில் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்திக்கொள்ள ஒவ்வொரு மனிதனும் போராட வேண்டியுள்ளது.
பூந்தோட்டத்தில் தினம் தினம் புதுப்புது மலர்கள் பூப்பது உண்டு. ஆனால் அவை நிலைப்பதும் இல்லை, அது நியதியும் இல்லை. அதுப்போலத்தான் வாழ்க்கை பூந்தோட்டத்தில் இன்பம், துன்பம் வருவதும். எவ்வாறு பூந்தோட்டத்தில் மலர்ந்த ஒரு நிலைப்பது இல்லையோ அதுப்போலத்தான் வாழ்க்கையில் வரும் இன்பமும் துன்பமும். இன்பம் என்பது மேலே மட்டுமல்ல பயணிக்கும் ஒவ்வொரு படியிலும் இருக்கிறது.
வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்களைக் கொடுத்தாலும் சிரிப்பதற்கு என்னிடம் 1000 காரணங்கள் இருக்கிறது என வாழ்ந்து காட்டுங்கள்.
சரியான நேர்மையான வாழ்க்கை பயணப்பாதை முட்கள் நிறைந்த கரடுமுரடான பாதைத்தான். இந்தப் பாதையில் முட்களாகவும், கரடுமுரடான கற்களாகவும் பிறரின் அவமானப் பேச்சுக்களும், பழிச்சொற்களும் தான் நிறைந்திருக்கும். நீங்கள் இப்படிப்பட்ட பாதையில் பயணிக்கிறீர்கள் என்றால் உங்கள் நற்சிந்தனையாலும் நற்சொயல்களாலும் மலரும் புதிய பயனுள்ள மலர்களால் பாதையை நிரப்புங்கள் வாழ்க்கைப் பயணம்
இனிதாய் அமையும்.
கப்பல் வடிவமைக்கப்படுவது கரையில் நிறுத்தி வைக்கப்படுவதற்கு அல்ல.
வாழ்க்கையும் கரையில் நின்று வேடிக்கைப் பார்ப்பதற்கு அல்ல.
வாழ வாருங்கள் வாழ்க்கைக்கு வழிகள் ஆயிரம்.