shabd-logo

துன்பங்களும் துயரங்களும்

21 September 2023

0 பார்த்தது 0

நம்முடைய தலைக்கு மேல் பறவைகள் பறப்பதை யாராலும் தடுக்க இயலாது. அதுப்போலவே நம்முடைய வாழ்வில் துன்பங்களும் துயரங்களும் வந்துச் செல்வதையும் யாராலும் தடுக்க இயலாது. துன்பங்களும் துயரங்களும் நம் வாழ்க்கைக்கு உரமாக வருகின்றதே தவிர வாழ்க்கையை அழித்துவிடுவதற்கு அல்ல.

ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது எல்லா துன்பங்களையும் துயரங்களையும், சோதனைகளையும், பிரச்சனைகளையும் எதிர்த்து நின்று போராடி அதில் வெற்றிக்காண்பதில் தான் உள்ளது.

ஒருக் கப்பலானது கடலில் தனது பயணத்தை மேற்க்கொள்ளும் போது சீறி எழும் அலைகளையும், வீசியடிக்கும் காற்றையும் எதிர்க்கொண்டு செல்வதால் தான் அதன் இலக்காகிய மறுக்கரையை சென்றடைகிறது. ஒருவேளை அங்கே பிரச்சனை என்றாலும் அந்தக் கப்பலைக் கரைசேர்க்க மாற்றுவழி அங்கு செயல்படுத்தப்படுகிறது. எந்தக் கப்பலும் ஆபத்து என்றவுடனே அங்கே விட்டுவிட்டு வரப்படுவது இல்லை. அதன் இலக்காகிய கரையை சென்றடைகிறது. அப்படியிருக்க நாம் ஏன் ஒருச் செயலை செய்ய துவங்கும் போது பிரச்சனைகள் வந்தவுடன் அந்தச் செயலை விட்டுவிடுகின்றோம்அந்தச் செயலை செய்வதால் பிறரால் நமக்கு இடையூறாக உருவாக்கப்பட்ட பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாதவர்களாய் தற்கொலை முடிவுகளை எடுக்கின்றோம்.

இன்னல்கள் வரும் போது

இறக்க நினைத்தால்நாம்

பிறந்ததில் அர்த்தமில்லை.

 

இன்னல் (துன்பம்) என்றதும்  வேலையை பாதியில் விட்டுவிடுவதும், தற்கொலை முடிவுகளை எடுப்பதும் கோழைத்தனமே. சாவி இல்லாமல் எந்தப் பூட்டும் தயாரிக்கப்படுவது இல்லை. பிரச்சனை என்ற ஒன்று இருப்பின் தீர்வு என்ற ஒன்றும் நிச்சயம் இருக்கும். பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று காண்பது தான் மனிதனின் அழகு.

              துன்பங்களைக் கண்டு எந்த உயிரினமும் சோர்ந்துப் போவதும் இல்லை. தற்கொலை செய்துக் கொள்வதும் இல்லை. வாழ்வில் வரும் துன்பங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் அனுபவத்தின் வாயிலாக பல பாடங்களை கற்றுத் தந்து மீண்டும் அந்தச் செயலை மாற்றுப்பாதையில் தொடர வழிகாட்டுகிறது. துன்பங்களையும், சோதனைகளையும் கண்டு ஓய்வதால் வாழ்க்கையில் ஏதையும் சாதித்துவிடப்போவதில்லை. சோதனைகளை எதிர்த்து துன்பங்களை விரட்டுவதில் தான் வாழ்க்கையின் சாதனை இருக்கிறது.

வாழ்க்கை என்பது பிரச்சனைகள் நிறைந்தது தான். பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. இதனை விவேகானந்தர் இவ்வாறு கூறுவார்.

உன் வாழ்க்கையின் எந்த ஓரு நாளில் நீ ஏந்தப் பிரச்சனையையும் சந்திக்காமல், நீ முன் செல்கிறாயோ அப்பொழுது நீ தவறான பாதையில் பயணிக்கிறாய் என்று அறிவாய்.”

ஆம், என்ன செய்தாலும் குறை கூறும் உலகு நல்லது செய்ய தடையாக பிரச்சனைகளை எழுப்பாதா என்ன?

சோதனைகள் வளர்ச்சிக்கே. சோதனைகளும், துன்பங்களும் இல்லாத வாழ்வு நிச்சயம் வளர்ச்சியைத் தராது. இந்தத் துன்பங்களும், சோதனைகளும், தடைகளும், வாழ்வை பண்படுத்தவே.

வருஷம் முழுவதும் பாடுபட்டும் பலன் கிடைக்காமல் பயிர்கள் திடீர் மழையாலும், புயலாலும், திடீர் வறட்சியாலும் பாதிக்கப்பட்டதால் மனம் வெறுத்துப்போன விவசாயி கடவுளிடம் கேட்டான்,

ஏன் கடவுளே உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா? மழையை அளவா பெய்யவச்சாத்தான் என்ன? ஏன் இப்படி காட்டாற்று வெள்ளமா பெருக வச்சு பயிர்களை எல்லாம் அழிக்கின்றாய்? அதே மாதிரி காற்று வீசினா பத்தாதா? புயலாத்தான் வீசணுமா? வெயில் அடிச்சா பரவாயில்லஇப்படி ஓரேயடியா வறட்சியை வரவைக்கணுமா? பஞ்ச பூதங்களை எப்படி மேனேஜ் பண்றதுன்னு உனக்கு தெரியல்ல. எங்கிட்ட அந்த சக்தியை கொடு. உற்பத்தியை பெருக்கி நாட்டில் எப்படி வளர்ச்சியை உருவாக்குறேன்னு பாரு அப்டீன்று சவால் விட்டான். கடவுளும் சரி, இனி உன் இஷ்டம். இயற்கை உன் சொல்படி நடக்கும் அப்டீனு சொல் இயற்கையை கட்டுப்படுத்துற சக்தியை அந்த விவசாயிடம் கொடுத்தார். அன்றிருந்து விவசாயி போட்ட கட்டளைக்கு மழை, வெயில், ஆகாயம், வெப்பம், காற்று என இயற்கை அவனுக்கு கட்டுப்பட்டது. மழை அளவா பொழிஞ்சது. காற்று மிதமா வீசிச்சு, வெப்பம் போதுமான அளவோட இருந்தது. பயிர்கள் ஆமோகமாக விளைந்திருப்பதைப் பார்த்து அவனுக்கு பெரும் மகிழ்ச்சி. மகிழ்ச்சியை அடக்க முடியாதவனாய் கடவுளைக் கூப்பிட்டு, பாத்தீங்களா கடவுளே! நான் எப்படி விளைச்சலைப் பெருக்கி இருக்கேனு, பெருமிதத்தை அடக்க முடியாதவனாய் கடவுளிடம் கூறினான். கடவுளும் அவன் பேசியதைக் கேட்டுக்கொண்டே, சரிஅறுவடைச் செய், என்றுக் கூறிவிட்டு அவன் அவன் அறுவடைச் செய்வதை வேடிக்கைப் பார்த்தார். விவசாயியும் ஆறுவடைச் செய்துவிட்டு முற்றிய நெற்கதிர்களை உதிர்த்துப்பார்த்தான். நெல் சிதறியது. ஆனால், அதில் அரிசி இல்லை. எல்லாமே பதராக இருந்தது. அவன் திகைத்துப்போய் கடவுளை ஏறிட்டுப்பார்த்தான்.

கடவுள் அவனிடம் மகனே, இது தான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நான் புயல் வீசச் செய்யும் போது பயிர் தனது வேர்களை பலப்படுத்தும், மழையை கொடுக்கும் போது பயிர் தன் வேரை நீரிருந்து அழுகாமல் பாதுக்காக்கும், தன் வேர்க்கால்களை வலுவாக்கிக்கொள்ளும், வறட்சியை கொடுக்கும் போது பயிர் தன் வேரை நன்கு பரவவிட்டு வளரும். இப்படி அதன் வளர்ச்சி எல்லா பருவ நிலைகளுக்கும் ஏற்றப்படி மாறி நல்லதொரு பலன் கொடுக்கும் பயிராய் அது வளரும். இனால் நீ வளர்த்தப் பயிரைப் பார்த்தாயா? எல்லா வசதிகளும், தேவைப்பட்ட காலங்களில் கிடைத்தப்போதும் அவை சோம்பேறியாய் வளர்ந்து பலன் கொடுக்காமல் பதராய் மாறிவிட்டது.

ஆம், இது ஓர் கற்பனை கதையாக இருந்தாலும் சோதனைகளும், துன்பங்களும் நம் வாழ்வை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்பதை உணர்த்துகிறது இல்லயா?.

மின்னொளி மூலம் மேலும் புத்தகங்கள்

3
கட்டுரைகள்
மின்னொளி
0.0
வாழ வருங்கள் வழிகள் ஆயிரம்.

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்