shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024

1 பார்த்தது 1

கனவின் கைப்பிடியில்

"கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுகளோடு வாழ்கின்றன. அதனால்தான் அவற்றால் தூய்மையான காற்றைச் சுவாசிக்க முடிகிறது!"

-ஹிராகி முராகோமி, ஜப்பானிய எழுத்தாளர்.

இரவெல்லாம் இவன் கனவுகள் நொடிக்கு 24 ஃப்ரேம்களில் ஓடிக்கொண்டிருந்தன. அடுத்த நாள் வந்த அதிகாலைச் சூரியன், இதுவரை இவன் பார்த்திராத வகையில் அழகானதோர் ஆரஞ்சுப் பந்தை வானத்தில் வரைந்துகொண்டிருந்தது. 'வருகிறேன் சென்னையே... வருகிறேன். என் ப்ரியத்துக்குரிய கோடம்பாக்கமே!' என்று மனதுக்குள் குதூகலித்து, கனவுத் தொழிற்சாலைக்குள் கால் எடுத்து வைத்தான்.

மயிலாப்பூரில் நீல்கிரீஸ் கட்டடத்துக்குப் பின்னால், 'சாரதா நிவாஸ்' என்ற ஹோட்டலில் அறை எடுத்து, அடுத்த நாள் ஷூட்டிங்குக்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. முதன்முதலில் கடலைப் பார்த்த குழந்தையைப் போல, இவன் பிரமித்தபடி அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

"யூனிட்டுக்கு சொல்லியாச்சா? என்னென்ன லைட்ஸ் வேணும்னு கேமராமேன்கிட்ட லிஸ்ட் வாங்கிக்குங்க. ஃபஸ்ட் ஷாட் பிள்ளையார் கோயில் மரத்தடியில. இன்னிக்குக் கிரேன் வேணாம், ரெண்டு நாள் கழிச்சுத் தேவைப்படும். இந்த 'விக்' கை எடுத்துட்டுப் போயி சதாசிவம் சாருக்குப் பொருந்துதானு பார்த்து ஸ்டில்ஸ் எடுத்துட்டு வாங்க. அசிஸ்டென்ட் டைரக்டர் எங்கப்பா? டயலாக் சொல்லிக் கொடுத்தாச்சா? எடிட்டிங் ரிப்போர்ட் சொதப்பிடாதீங்க... கன்டினியூட்டி யார் பாக்கிறது?" என்று வேறு பாஷை, வேறு உலகத்துக்குள் நுழைந்தான்

கூத்துப்பட்டறையைச் சேர்ந்த குமரவேல், ஜெயக்குமார், தமிழ்நாடு திரைப்பட இயக்கம் என்ற ஃபிலிம் சொஸைட்டி நடத்தியவரும், கன்னட மொழிபெயர்ப்பாளருமான மறைந்த தி.சு.சதாசிவம், நடிகை மௌனிகா மற்றும் பல துணை நடிகர்களுடன் அடுத்த நாள் ஒரு வீட்டில் படப்பிடிப்பு தொடங்கியது. தயாரிப்பாளருக்குத் தெரிந்தவன் என்பதால், என்னென்ன எழுத வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டு, முதல் நாளே இவன் கையில் எடிட்டிங் ரிப்போர்ட் எழுதும் பணி ஒப்படைக்கப்பட்டது.

ஒரு நாவல் படமாவதை, வார்த்தைகள் குறைந்து காட்சிகளாவதை, கண்ணெதிரே கற்றுக்கொண்டான். இயக்குநர் அருண்மொழி சத்தம் போட்டுக்கூட பேச மாட்டார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சியாக, 'கரைந்த நிழல்கள்' வளர்ந்துகொண்டிருந்தது. ராஜராஜனும், தந்தைக்கு உதவியாகத் தயாரிப்பு நிர்வாகப் பணியை ஏற்றுக்கொண்டான்.

ஷூட்டிங் முடிந்து, இரவு அறைக்கு வந்ததும் சாரதா நிவாஸின் மொட்டைமாடியில், பால் நிலா வெளிச்சத்தில் நனைந்துகொண்டிருக்கும் மாமரத்து இலைகளைப் பார்த்தபடி, ராஜராஜனும் இவனும் அன்றைக்கு அறிந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

ராஜராஜனுக்கு ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற ஆசை. நாய்க்குட்டி, பனையேறும் பச்சையப்பன் அண்ணன், குத்துவிளக்குக்கு நடுவே சிரித்த செந்தில்... என இவனைப் போலவே அவனுக்குள்ளும் கோனிகா மேக்ஸி சைஸ் போட்டோக்கள் இருப்பதை இவன் அறிந்துகொண்டான். நள்ளிரவு வரை இவன் கதையாகச் சொல்ல, அவன் ஒளியாக வரைந்து பார்ப்பான்.

வாழ்ந்து கெட்ட வீடுகளில் இருந்து ஒரு வலி, மெள்ளக் கசிந்து காற்றில் பரவி நிலையற்று அலைவதை எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? கிராமத்தில் வாழ்ந்த சொந்த வீட்டை பூனைகள் உறங்கவும், அரசமரச் செடிகள் சுவர் வழி வேர் விட்டு, வெடித்துக் கிளம்ப அனுமதித்துவிட்டு மாநகரத்து வீதிகளில் பசியுடன் அலையும் கண்கள் நடுநிசியில் வந்து உங்களை அலைக்கழித்ததுண்டா? கதவு, ஜன்னல், பாத்திரங்கள்... போன்றவற்றை விற்ற பின்பு, கையிருப்புக் கரையக் கரைய மாநகரத்து சிக்னல் கம்பங்களுக்கு அருகே சிகப்பு விளக்கு விழும் வரை காத்திருந்து ஓடிவந்து வாகனங்களுக்கு இடையே நுழைந்து கார் துடைக்கும் துணியும், ஆங்கில டைம்ஸ் புத்தகமும் விற்பவர்களில் உங்கள் தூரத்து உறவினர்களின் சாயல் கண்டு துடித்ததுண்டா?

காலம், மைதானத்தில் விளையாடுபவனைப் பார்வையாளனாகவும், பார்வையாளனைப் பரிசு வெல்பவனாகவும் மாற்றிவிடுகிறது. அப்படிப் பட்ட ஓர் இளைஞனை அடுத்த நாள் இவன் சந்தித்தான். விஜயா-வாஹினி ஸ்டுடியோவில் ஒரு பிடித்துக்கொண்டிருந்தார்கள். காட்சியைப் படம்

தேநீர் இடைவேளையில் கையில் பேடுடன் இவன் இருந்தபோது, "நீங்க அசிஸ்டென்ட் டைரக்டர்தானே?" என்றபடி அவன் வந்தான்.

" ஆமாம்" என்றான். 20 வயது இருக்கும். கசங்கிய உடைகள். பஞ்சடைத்துப்போன கண்கள். வியர்வையில் நனைந்து சூழலுக்குப் பொருத்தமற்று நின்றிருந்தான்.

"எனக்கு ஏதாவது நடிக்கிறதுக்கு சான்ஸ் வாங்கிக் கொடுங்க சார்."

"

"இல்ல சார்"

ஆபீஸ்ல வந்து பாருங்க... இதுக்கு முன்னாடி நடிச்சிருக்கீங்களா?"

"அப்படின்னா கஷ்டம்... எதுக்கும் டைரக்டரை ஆபீஸ்ல வந்து பாருங்க."

சட்டென்று இவன் கைகளைப் பிடித்துக்கொண்டான். "நேத்து காலைல இருந்து சாப்பிடலை சார். ஏதாவது வேஷம் வாங்கிக் கொடுங்க. 10 ரூபா கிடைச்சாக்கூட போதும் சார்" என்றான்.

"நடிக்கிறது கஷ்டம்... வேணும்னா புரொடக்ஷன்ல சாப்பிட்டுப் போங்க"

"இல்ல சார், ஓசி சாப்பாடு வேணாம்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று தொடங்கினான். நடக்கத்

இவனுக்கு, அவன் வைராக்கியம் பிடித்திருந்தது. அவனை இயக்குநரிடம் அறிமுகப்படுத்தி, சின்னதாக ஒரு வேடம் வாங்கிக்கொடுத்தான்.

ஒரு திரைப்படத்தின் முதல் நாள் பூஜை நடக்கும் காட்சி. அந்தப் படத்தின் இயக்குநருடைய தம்பியிடம் நாவலின் முக்கியமான கதாபாத்திரத்தை ஒரு எடிட்டிங் உதவியாளன் அறிமுகப்படுத்தி, 'இவரு கானா தானாகிட்ட வேலை செஞ்சவரு. டைரக்டர்கிட்ட ஒர்க் பண்ணணும்னு பிரியப்படுறாரு' என்று சொல்ல வேண்டும். அதற்கு அவர் 'அப்பறம் பார்க்கலாம்' என்பார். இதுதான் காட்சி.

எடிட்டிங் உதவியாளனாக அவனை நடிக்கவைக்க ஏற்பாடு ஆயிற்று. நான்கைந்து முறை வசனத்தைச் சொல்லவைத்துப் பார்த்து திருப்தியாக இருந்தது. திரைப்படத்தின் பூஜைக் காட்சி என்ப தால், ஆப்பிள், சாத்துக்குடி, வாழைப் பழம், இனிப்பு வகைகள்... என நான்கைந்து பெரிய தாம்பாளத் தட்டுகளில் சாமி படத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகில்தான் மேற்சொன்ன காட்சி எடுக்க வேண்டும்.

நடிகர்கள் தயாராகி நிற்க, ஒளிப்பதிவாளர் வெளிச்சம் சரி பார்த்து 'ஓ.கே.' என்று சொல்ல, இயக்குநர் "ரெடி டேக்" என்றார். எல்லோரும் சரியாகச் செய்ய அவன் முறை வந்தபோது "இவரு... இவரு... கானா தானாகிட்ட... வேலை... வேலை" என்றான். கட் கட் என்று சொல்லிவிட்டு "என்னப்பா சொதப்பற?" என்று அலுத்துக் கொண்டார் இயக்குநர்.

"ஸாரி சார்... இப்ப சரியாப் பண்ணிடுறேன்."

"ஒ.கே. லைட்ஸ் ஆன்... டேக்" என்றார்.

மீண்டும் சொதப்பினான். கிட்டத்தட்ட ஏழெட்டு டேக்குகள் ஆயிற்று. இயக்குநர் இவனை

முறைத்தார்.

"இல்ல சார்... என்னால முடியல. வேற யாரையாவது நடிக்கவெச்சிக்குங்க" என்று சொல்லிவிட்டு

அவன் செட்டைவிட்டு அழுதுகொண்டே ஓடினான். இவன் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.

ஒரு தெலுங்குப் படத்தின் பாடலுக்காக செட் போடப்பட்டிருந்த காகித சொர்க்கத்தில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தான் அவன். இவள் மெள்ள நெருங்கி அவன் தோளைத் தொட்டு, "என்னப்பா என்ன ஆச்சு?" என்றான்.

அவள் குலுங்கிக்கொண்டே சொன்னான்.

"இல்ல சார்... எங்க குடும்பம் பெரிய குடும்பம் சார். தஞ்சாவூர்வ 100 ஏக்கர் நிலம் இருந்திச்சு. ரெண்டு தெருவைச் சேர்த்த மாதிரி வீடு. திண்ணையிலேயே 100 பேர் தங்கலாம். அப்பாவோட சீட்டாட்டப் பழக்கத்தால் எல்லாம் போயிடுச்சு. குடும்பத்தோட மெட்ராஸ் வந்து கஷ்டப்படுறோம். தங்கச்சிங்க எக்ஸ்போர்ட் வேலைக்குப் போகுதுங்க" என்று சொல்லி அழுதுகொண்டிருந்தான்.

"அது சரி, நடிச்சா காசாவது கிடைச்சிருக்குமே?!" என்று இவன் கேட்க,

"இல்ல சார்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தட்டுல ஆப்பிள், சாத்துக்குடி, ஸ்வீட்டுனு நெறைய வெச்சிருந்தீங்க."

"ஆமா, அதுக்கென்ன?"

"என் கண்ணு முன்னாடியே ஒருத்தர் அந்தத் தட்டு மேல மண்ணெண்ணெய ஊத்தினாரு... என்னால தாங்க முடியல... எங்க வீட்டுல யாருமே ரெண்டு நாளாச் சாப்பிடல சார்... இங்க என்னடான்னா..." உரையாடலை முடிக்காமல் அழுதுகொண்டிருந்தாள். இவனுக்கு விஷயம் விளங்க ஆரம்பித்தது.

சினிமாவில் இதை 'கன்டினியூட்டி' என்பார்கள். ஒரு ஷாட்டில் வைக்கப்படும் பொருள்கள் அடுத்த ஷாட்டிலும் அதே இடத்தில் அதே வடிவத்தில் இருக்க வேண்டும். அன்று எடுக்கப்பட்ட காட்சிகளின் பின்னணியாக 10 ஆப்பிள்கள் இருந்தன என்றால், இதன் தொடர்ச்சியாக அதே காட்சியை சில மணி நேரங்கள் கழித்து எடுப்பார்கள். அப்போது 10 ஆப்பிளுக்குப் பதில் எட்டு ஆப்பிள்களோ அல்லது வாழைப்பழமோ இருந்தால், படம் பார்க்கையில் உறுத்தும். உணவுப் பொருள்கள் என்பதால், தெரியாமல் யாராவது சாப்பிட்டுவிடக்கூடும். அதற்காக அதன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றுவார்கள். இதை அவளிடம் இவன் விளக்கிச் சொன்னான்.

"இருக்கட்டும் कार्य... அதுக்காக மண்ணெண்ணெய் ஊத்துவாங்களா? நாங்க ரெண்டு நாளா சாப்பிடல சார்..." என்று கைகள் நடுங்க அழுது கொண்டிருந்தான்.

"சரி, பரவாயில்ல இந்தாங்க" என்று அவன் கையில் 20 ரூபாய்

கொடுத்தான்.

"வேணாம் சார்" என்று சொல்லிவிட்டு வாசல் நோக்கி வேகமாக நடந்து காணாமல் போனான்.

அதற்குப் பிறகு செய்தித்தாள்களில் 'வறுமை காரணமாகக் குடும்பத்துடன் தற்கொலை' என்று

படிக்கும்போது புகைப்படத்தில் அவன் முகம் இருக்கிறதா என்று பல நாட்கள் இவன்

பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

இன்றைக்கும் மாநகரத்தில் ஒவ்வொரு சினிமா கம்பெனி வாசலிலும் நூற்றுக்கணக்கான

இளைஞர்கள் வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டு இருப்பதைக் கவனிக்கிறான். அவர்களுடைய

முகங்களில், அந்தத் தஞ்சாவூர் இளைஞன் முகச் சாயலின் துகள்கள் படிந்திருப்பதைப்

பார்க்கையில் பயமாக இருக்கிறது!

کا


.




நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்