shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024

1 பார்த்தது 1

வயதென்னும் ரயில் வண்டி

'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.'

ஜென் தத்துவம்

பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிடங்களே இருந்தன. எக்மோர் வந்து இறங்கி,

ஸ்டேஷன் வாசல் சங்கீதாவில் சப்பாத்தி குருமாவும் தயிர்சாதமும் வாங்கிக்கொண்டு,

பிளாட்ஃபார்ம் கண்டுபிடித்து, இவன் வண்டியை அடைவதற்கு இரண்டு நிமிடங்களே மிச்சம்

இருந்தன.

நடைபாதைக் கடையில், வாழைப்பழமும் தண்ணீர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு திரும்புகையில், ஒரு ராட்சஸ உலோகப் பாம்பாக, இவன் வண்டி தண்டவாளத்தில் ஊர்ந்துகொண்டிருந்தது. நகரத் தொடங்கியிருந்த வண்டியின் கூடவே ஓடி, இவன் பெட்டியைத்தேடி இருக்கையில் அமர்ந்தான். அதிர்ஷ்டவசமாக இந்த முறை இவனுக்கு ஜன்னல் இருக்கை கிடைத்திருந்தது.

பேருந்தோ, புகைவண்டியோ, ஜன்னல் ஓர இருக்கை என்பது இவனது தீராக் காதல். ஆனால், தொண்ணூறு சதவிகிதப் பயணங்களில் வேறு யாரோ அங்கு அமர்ந்து, வண்டி கிளம்பியதுமே. தூங்கி வழிந்துகொண்டிருப்பார்.

பார்ப்பதற்கு நிறையக் காட்சிகளும், படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்களும், பழகுவதற்கும் பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும், இந்த ஜன்னல் ஓரத்து இருக்கையிலேயே வசித்துவிட இவனுக்குச் சம்மதம். ஆயினும்...

'போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கும் பேருந்துகள் திருவிழாவுக்குத் திருவிழா

வெளியே வரும் தேர்' -கவிஞர் விக்ரமாதித் யனின் கவிதையைப் போல எப்போதாவது வந்தால்தான் ஊர்வலம். எப்போதும் வந்தால் அதில் என்ன ஆச்சர்யம்! தினம் தினம் வந்து கொண்டிருந்தால் வானவில்லை யார் அண்ணாந்து பார்ப்பார்கள்?

இந்தப் பயணம்கூட மதுரையில் ஒரு நண்பரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக கடைசி நேரத்தில் முடி வானதுதான். சாவகாசமாக இவனது லெதர் பேக்கை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு, நிமிர்ந்தபோதுதான், இரண்டு விஷயங்களைக் கவனித்தான். ஒன்று, ரயில் வழக்கமாகச் செல்லும் திசையில் இல்லாமல் பின்பக்கமாக எதிர் திசையில் சென்றுகொண்டிருந்தது. இரண்டு, இவனைத் தவிர, அந்தப் பெட்டியில் யாருமே இல்லை!

எல்லோரும் கடைசி நேரத்தில் வண்டியைத் தவறவிட்டுவிட்டார்களா? அது எப்படிச் சொல்லிவைத்தாற்போல் எல்லோரும் தவறவிடுவார்கள். இவன் இருக்கையைவிட்டு எழுந்து, எல்லா இருக்கைகளையும் சென்று பார்த்தான். அந்தப் பெட்டியிலேயே யாரும் இல்லை. 'பாண்டியன் எக்ஸ்பிரஸில்தான் ஏறியிருக்கிறோமா?' என்று இவனுக்குச் சந்தேகம் வந்தது.

பிளாட்ஃபார்ம் எண் பார்த்து, பெயர்ப் பலகை பார்த்து, எதிரில் சென்றுகொண்டிருந்த டி.டி.ஆர். ஒருவரிடம் விசாரித்துத்தானே வண்டியில் ஏறினான்?!

குழப்பத்துடன் மீண்டும் இவன் இருக்கைக்கு வந்தபோது, எதிர் இருக்கையில் ஒருவர் அமர்ந்திருந்தார். இவனைப் பார்த்து புன்னகையுடன் "வணக்கம்" என்றார். இவனும் வணக்கம் சொல்லிவிட்டு, "சார் இது பாண்டியன் எக்ஸ்பிரஸ்தானே? இந்தப் பெட்டியில் யாருமே இல்லையே..." என்றான்.

"இந்தப் பெட்டியில் மட்டுமில்லை, இந்த ரயில் முழுக்கவும் யாரும் கிடையாது. ஏன்னா, இது 'கால ரயில்"" என்றார் அவர்.

இவன் அச்சத்துடன், "கால ரயிலா? அப்படின்னா எந்த ஊருக்குப் போகுது?" என்றான்.

அவர் மீண்டும் புன்னகைத்தபடி, "எந்த ஊருக்கும் போகாது. இது கடந்தகாலத்துக்கும், எதிர்காலத்துக்கும் மாறி மாறிப் பயணிக்கிற வண்டி. இப்ப நாம இருக்கிறது நிகழ்காலப் பெட்டி" என்றார்.

இவனது அச்சம் அடிவயிற்றில் அமிலமாகவும், கைகால்களில் நடுக்கமாகவும் உருமாறத் தொடங்கியிருந்தது. நடுக்கத்துடன், "சார் நீங்க யாரு?" என்றான். இவன் குரல் இவனுக்கே கேட்கவில்லை.

"நானா..? கடவுள்!" என்றார் அதே சிரிப்புடன்.

இப்போது அச்சத்துடன் திகிலும் இனம்புரியாத ஒரு பரபரப்பும் இவனை ஆட்கொண்டது. அவரை மேலும் கீழும் பார்த்தான். அவரது தோற்றத்தை வர்ணிக்க மனசுக்குள் வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, அவரே தொடர்ந்தார்.

"என்னை வர்ணிக்க வீணா முயற்சி பண்ண வேண்டாம். பல நூற்றாண்டுகள், பல கவிஞர்கள், என் தோற்றத்தை வெவ்வேறு விதமாக வர்ணிச்சுப் பார்த்துட்டாங்க. நான் இருப்பதில் இல்லாதவன்; இல்லாதவற்றில் இருப்பவன். எனக்கு முதலும் இல்லை... முடிவும் இல்லை."

இப்போது இவனுக்கு அவரை 'சார்' என்று அழைப்பதா, 'ஐயா' என்று அழைப்பதா அல்லது 'சாமி' என்று அழைப்பதா... என்று குழப்பமாக இருந்தது.

"என்னை எதுக்கு இந்த வண்டியில ஏத்தினீங்க?" என்றான் பொதுவாக.

"ஏன்னா நீ ஒரு கவிஞன். எனக்கு குழந்தைகளையும் கவிஞர்களையும் ரொம்பப் பிடிக்கும்!"

இவன் கொஞ்சம் பயம் குறைந்து, அவரை பக்தியுடன் பார்த்தான்.

"நீ கவிஞன்கிறது மட்டும் காரணம் இல்லே. சாதாரணமா எல்லாரும் எப்போ கடந்தகால

நினைவுகளுக்குப் போவாங்க?" என்று கேட்டார்.

பதற்றத்தில் இவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவரே பதில் சொன்னார். "எல்லோருக்கும்

கல்யாண வீடு, மரண வீடு, பண்டிகை, விழாக்கள்... போன்றவற்றில் உறவினர்களையோ, பால்ய

கால நண்பர்களையோ சந்திக்கும்போது, பழைய கால ஞாபகம் பளிச்னு நினைவுக்கு வரும்."

சரிதான் என்று இவனும் ஆமோதித்தான்.

"ஆனா நீங்க கவிஞர்கள், படைப்பாளிகள் என்ன பண்றீங்க? ஒவ்வொரு நாளும் கூடுவிட்டுக் கூடு பாயிற மாதிரி, கடந்தகால நினைவுகளுக்குப் போயிட்டு வர்றீங்க. அந்த அனுபவக் கிடங்குகள்தான் உங்க படைப்புகளுக்கான கச்சாப்பொருள்!"

இவன் பிரமிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான்.

"அப்படி ஒவ்வொரு முறையும் நீங்க கடந்த காலத்துக்குப் பயணிக்கிறப்போ, காட்சிகள் சரியாப் பிடிபடாம, வார்த்தைகள்ல கொண்டு வரக் கஷ்டப்படுறதை நான் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். அதுக்காகத்தான் இந்தக் கால ரயில் கவிஞர்களுக்காகவே தயாரிக்கப்பட்டது. ஏன்னா... கவிஞர்கள் காலத்தின் கண்ணாடிகள்!"

இவன் பிரமிப்புடன், "இந்த ரயில்ல என்ன விசேஷம்?" என்று கேட்டான்.

"இடது பக்கம் போனா ஒவ்வொரு பெட்டியும் கடந்தகாலத்துக்குக் கூட்டிட்டுப் போகும். முதல் பெட்டியில் ஐந்து வயது வரை உன் மனசுல பதிந்த காட்சிகளைப் பார்க்கலாம். அடுத்த பெட்டி ஐந்தில் இருந்து பத்து வயசு வரை... இப்படி உன் நிகழ்கால வயசு வரைக்கும் உன் மனசுல இருக்கிற கடந்தகாலக் காட்சிகளை நீ திரும்பவும் பார்க்கலாம். வா போகலாம்" என்றபடி கடவுள் எழுந்து

நடக்க, இவன் பின்தொடர்ந்தான்.

முதல் பெட்டிக்குள் நுழைந்தார்கள். முதல் ஐந்து வயது வரை ஞாபகங்கள், கலைடாஸ்கோப் புக்குள் நுழைந்த வளையல் துண்டுகளைப் போல, இவனுக்கு வெவ்வேறு தோற்றங்களைக் காட்டின. சிறுகுழந்தையாகத் தவழ்ந்தபடி ஒரு கட்டெறும்பின் பின்னால் சென்றுகொண்டிருக்கிறான். அந்த எறும்பு, தாழ்வாரத்தைக் கடந்து சுவரில் ஏறுகிறது. இவனும் சுவரில் ஏற முயற்சித்து தலைகுப்புற விழுந்து அழுகிறான். யாரோ ஒரு பாட்டி ஓடிவந்து இவனைத் தூக்கி, வெற்றிலைக் கரையுடன் முத்தம் கொடுக்கிறார். அந்தப் பாட்டியை இவன் எங்கோ பார்த்திருக்கிறான். இது இவன் வீடுதானா? முதலில் இது இவனேதானா? ஏதோ ஒரு கோயில் திருவிழா. பட்டுப்பாவாடை சட்டையுடன் ஒரு சிறுமி ஓடுகிறாள். இவன், அவளது கொலுசு வேண்டும் என்று அடம்பிடிக்கிறான். முதுகில் சுளீர் என்று அடி விழுகிறது. வித்தைகாட்டுபவன் ஒரு கரடியுடன் நுழைகிறான். கதவுக்குப் பின்பக்கம் ஒளிந்தபடி, அந்தக் கரடியையும், அது செய்யும் வித்தைகளையும் இவன் பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

இப்படி ஒவ்வொரு காட்சியாக கொலாஜ் ஓவியம்போல் எதிரே தெரிந்துகொண்டிருக்க, இவன்

அம்மா இறந்துபோன நான்காம் வயதை அவசரமாகக் கடந்தபடி, "அடுத்த பெட்டிக்குப்

போகலாம்" என்றான் கடவுளைப் பார்த்து. இவன் எண்ணத்தைப் புரிந்துகொண்ட கடவுள்,

"அவ்வளவு சீக்கிரம் எந்த வலியையும் தாண்டிப் போய்விட முடியாது" என்று சொல்லியபடி

இவனை அடுத்த பெட்டிக்கு அழைத்துச் செல்கிறார்.

நண்பர்களுடன் ஆற்றங்கரையில் கபடி விளையாடிக்கொண்டிருக்கிறான். மூச்சைப் பிடித்தபடி

கோட்டைத் தொடுகையில், கீழே விழ இவன் முட்டி பெயர்ந்து ரத்தம் கொட்டுகிறது. நண்பர்கள்

மண்ணை அள்ளி, ஊதி ஊதி காயத்தின் மேல் பூசுகிறார்கள். மண்ணின் நிறத்தையும் தனக்குள்

உள்வாங்கியபடி ரத்தம் கொட்டிக்கொண்டே இருக்கிறது.

வேறு ஒரு காட்சியில் நீச்சல் தெரியாத இவனை, பையன்கள் கிணற்றில் தள்ளிவிடுகிறார்கள். தண்ணீரைக் குடித்தபடி மூச்சுத் திணறி, மேலே வந்த இவன் தலைமுடியை, செந்தில் பிடித்து இழுத்து படிக்கட்டில் அமரவைக்கிறான். கிணற்றின் செங்கல் பொந்தில் இருந்து, ஒரு பாம்பு எட்டிப்பார்க்கிறது. பள்ளி உணவு இடைவேளையில் கே.எஸ்.சித்ராவுடன் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுகிறான். மண்ணில் நீர் குழைத்துச் செய்த இட்லிகளை, அவள் ஆலம் இலைகளில் எடுத்துக் கொடுக்க, இவன் ருசித்துச் சாப்பிட்டு, 'அப்புறம் என்ன பண்ணணும்?' என்கிறான். 'அப்புறம் என்ன? அப்பா, அம்மாவுக்கு முத்தம் கொடுக்கணும்' - இவன் மூளைக்குள் முதல் காதலும் முதல் காமமும் எட்டிப்பார்க்கின்றன. கடவுள் ஒரு கள்ளச்சிரிப்பை தன் முகத்தில் தவழவிட்டபடி, இவனை அடுத்த பெட்டிக்கு அழைத்துச் சென்றார்.

இப்போது 10-ம் வகுப்பு படிக்கிறான். பள்ளியின் மைதானத்தில் அசோக மரத்தடியில், இவனுடன் அகஸ்டின் செல்லபாபு, கே.கண்ணன், பாலாஜி... எல்லோரும் அமர்ந்து பொதுத் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

2, I owe to thee my country... I owe to the my country" மக்கடித்துக்கொண்டிருக்கிறான். அதைப் பார்த்த பாலாஜி, இவன் தலையில் நங்கென்று குட்டியபடி, 'இப்படியா மக்கடிக்கிறது? எதையும் புரிஞ்சுக்கிட்டுப் படிக்கணும். அப்பத்தான் தெளிவா மனசுல பதியும். உதாரணத்துக்கு H2ன்னா என்ன? ஹைட்ரஜன். 02 ன்னா என்ன? ஆக்ஸிஜன். ரெண்டும் சேர்ந்தா H20 வரும். அதாவது வாட்டர். நாம குடிக்கிற தண்ணி. இப்பப்

படி H2 + O2 =H20'. இவன் சொல்லிப் பார்க்கிறான். மனதுக்குள் உடனே பதிகிறது.

கடவுளுடன் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இவன் கண்களில் நீர் வந்துவிட்டது. இந்த பாலாஜிதான் பின்னாட்களில் 10-ம் வகுப்பு முடித்து, பாலிடெக்னிக் சேர்ந்து, திருமணம் முடித்து, அடுத்த ஆறாவது மாதத்தில் ஒரு விபத்தில் சிக்கி இறந்துபோனவன்.

"டேய் பாலாஜி, இந்தப் பெட்டியிலயே இரு. அடுத்த பெட்டிக்குப் போனா... நீ செத்துப் போயிருவ" என்று இவன் உரக்கக் கத்தினான். கடவுள் இவன் தோளில் கை வைத்து, "இந்தக் காட்சியை நீ தள்ளியிருந்து வேடிக்கை பார்க்கத்தான் முடியும். நீ சொல்றது அவனுக்குக் கேட்காது. அப்புறம் இன்னொரு விஷயம்... இது ஏற்கெனவே போடப்பட்ட இருப்புப் பாதை. இங்க யாரோட மரணத்தையும் யாராலயும் தடுக்க முடியாது. வா, அடுத்த பெட்டிக்குப் போகலாம்!" என்றார்.

அடுத்தடுத்த பெட்டிகளின் காட்சிகளில் இவன் மனம் ஒன்றாமல் ஏனோ பாரமாகவே இருந்தது.

பிரசன்னா பஸ் சர்வீஸ் புழுதி கிளப்பியபடி வருவது, முதன்முதலில் இவன் கல்லூரிக்குள்

நுழைந்தது. இவன் எழுதிய முதல் காதல் கடிதம் கொடுக்கப்படாமல் காத்திருந்தது, கல்லூரி

முடித்து சினிமா ஆசையில் சென்னை வந்தது, பாலு மகேந்திரா சாரிடம் உதவி இயக்குநராக

உலகப் படங்கள் பார்த்துத் திரிந்தது. எழுத்தாளர் சுஜாதா இவனுடைய 'தூர்' கவிதையை ஒரு

மேடையில் வாசித்துக்காட்டிப் பரவசப்பட்டது, அறிவுமதி அண்ணனுடன் கவியரங்குகளில்

கைதட்டல்கள் வாங்கியது. சீமான் அண்ணன் அறிமுகப்படுத்த முதல் பாடல் பதிவானது, இவன்

மனைவியைப் பெண் பார்க்கச் சென்றது, அப்போதுதான் பிறந்த அணில் குஞ்சைப் போலிருந்த

இவன் மகனை ஒரு நர்ஸ் உள்ளங்கையில் கிடத்தியபோது தன் ரத்தச்சூட்டை உணர்ந்தது... என

ஒவ்வொரு காட்சியிலும் இவன் திண்டாடிக்கொண்டிருந்தான்.

கடந்தகாலத்தில் நுழைவது இவ்வளவு இன்பமா அல்லது இத்தனை துன்பமா? இல்லை இன்பம்

கலந்த துன்பமா? இவனுக்குச் சொல்லத் தெரியவில்லை.

"நாம நிகழ்காலத்துக்கே திரும்பிவிடலாம்" என்றான் கடவுளிடம்.

நிகழ்காலப் பெட்டிக்கு வந்ததும், "இந்தப் பக்கம் இருப்பது எதிர்காலப் பெட்டிகள். நாற்பது வயசுக்குப் பிறகு, உனக்கு என்ன நடக்கப்போகுதுனு தெரிஞ்சுக்க விருப்பமா? வண்டியை எதிர்ப்பக்கம் விடச் சொல்றேன்!" என்றார் கடவுள்.

"வேண்டாம். நாளைக்கு என்ன நடக்கப் போகுதுனு தெரிஞ்சுக்கிட்டா, வாழ்க்கையில சுவாரஸ்யம் இருக்காது. வண்டியை நிறுத்தச் சொல்லுங்க. நான் இறங்கிக்கிறேன்!" என்றான்.

வண்டி நின்றது. இவன் இறங்கி ஸ்டேஷன் பெயர்ப்பலகையை வாசித்தான். விழுப்புரம் ஜங்ஷன்.

"தினமும் புதுசு புதுசா ஏதாவது படைச்சுக்கிட்டே இரு. அதுதான் உன்னைத் தக்கவைக்கும்!" என்றார் கடவுள்.

இவன் புன்னகையுடன் அவருக்குக் கையாட்டி விடை கொடுத்துவிட்டு, அடுத்த மதுரை வண்டிக்காகக் காத்திருக்கத் தொடங்கினான்!

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்