shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024

0 பார்த்தது 0

இவன் நானாகும் அத்தியாயம்

'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!'

-இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ

அன்புள்ள பாலுமகேந்திரா சாருக்கு...

தூரத்தில் இருந்து நீங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இத்தனை நாட்களாக நான் ஓடிக்கொண்டிருந்தேன். சட்டென்று நேற்று திரும்பிப் பார்க்கையில் காலம் அகாலமாகி நிற்கிறது. மரணம், ஒரு மோசமான சதுரங்கம். எத்தனை பேர் சுற்றி நின்று பாதுகாத்தபோதிலும், அது எங்கள் பிரியத்துக்குரிய அரசனை அழைத்துச் சென்றுவிட்டது. இப்போதுகூட நீங்கள் வானத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இந்தத் தொடரில் காலவரிசைப்படி ஐந்தாறு வாரங்கள் கழித்து உங்களுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவங்களை எழுதலாம் என இருந்தேன். இப்படி காலத்தை முன்னோக்கி இழுத்து, காணாமல்போனது நியாயமா? இனி ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று தொலைபேசியில் என்னை அழைத்து, 'விகடன் படிச்சிட்டேன்' என்று வேடிக்கை பார்ப்பவனை விமர்சிக்கும், கம்பீரமான குரலை எந்தக் காற்றின் அலைவரிசை என்னிடம் கொண்டு வரும்?

காலம், உங்களை ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் அடைத்துவிட்டதாகக் கர்வப்பட்டாலும், காலத்தை வென்று நிற்கப்போகும் உங்கள் படைப்புகளை அதனால் என்ன செய்துவிட முடியும்? மரணத்தின் எந்தச் சுவடுகளும் தெரியாமல் உங்கள் இறுதி உறக்கம் கம்பீரமாக இருந்தது. 'வாடா முத்துக்குமார். பாண்டிபஜார் வரைக்கும் போயிட்டு வருவோம்' என்று எந்தக் கணத்திலும் நீங்கள் கூப்பிடலாம் என்ற நம்பிக்கையில் உங்கள் தலைமாட்டிலேயே நின்றுகொண்டிருந்தேன்.

பாண்டிபஜாரின் மரங்கள் அடர்ந்த சாலையும், நடைபாதைக் கடைகளும் உங்களுக்கு அப்படிப்

பிடிக்கும். காரிலும், எந்தத் தயாரிப்பாளரும் கிடைக்காமல் நான்கு மாதங்கள் எங்களுக்குத்

தரவேண்டிய சம்பளப் பாக்கிக்காக அந்தக் காரை விற்றுவிட்டு பின்பு ஆட்டோவிலுமாக பனகல்

பார்க்கின் முனையில் இறங்கி, பாண்டிபஜாரின் வீதியில், என் கை பிடித்து நடந்தபடி எத்தனை

கடைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறீர்கள்? திரும்பி வருகையில் வடக்கு உஸ்மான் ரோட்டில்

உள்ள நியூ புக் லேண்ட்ஸ் புத்தகக் கடைக்கும் அழைத்துச் சென்று, அன்று புதிதாக வந்த அத்தனை

கவிதைத் தொகுப்புகளையும் வாங்கி, 'அன்புடன்' என்று கையெழுத்திட்டு எனக்குக்

கொடுப்பீர்கள்.

என் ஞானத் தகப்பனே! நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தானே, என் தகப்பன் ஏழு

வருடங்களுக்கு முன்பு என்னை விட்டுவிட்டு இறந்துபோனான். நீங்களும் பாதியிலேயே

விட்டுவிட்டுப்போனால், இனி நான் எங்கு செல்வது? ஒரு கூட்டுப்புழுவாக உங்கள்

அலுவலகத்துக்குள் நுழைந்த என்னை, பாட்டுப்புழுவாக மாற்றி, பட்டாம்பூச்சியாகப் பறக்கவிட்டவர் நீங்கள்.

பாலுமகேந்திரா என்கிற மகா கலைஞன் என் மனதில் விதையாக விழுந்து, மாமாக எழுந்தது எப்போது?

'அழியாத கோலங்கள்' சிறுவர்களில் நானும் ஒருவனாக இருந்தபோதா? 'மூன்றாம் பிறை' பார்த்துவிட்டு, பால்ய காலத்தில் நான் வளர்த்த 'டைகர்' எனும் நாய்க்குட்டிக்கு 'சுப்பிரமணி' என்று நாமகரணம் சூட்டியபோதா? 'நீங்கள் கேட்டவை'யின் 'பிள்ளை நிலா' என் வானத்தில் உதித்தபோதா? குடிசை வீட்டில் இருந்தபடியே, ஞாயிறு மதியம் தூர்தர்ஷனில் 'வீடு' படத்தை ரசித்தபோதா? நான் பிறக்கும் முன்பே இறந்துவிட்ட பாட்டனோடு 'சந்தியாராக'த்தில் கைகோத்து நடந்தபோதா? 'வண்ணவண்ண பூக்க'ளில் வண்டாக நுழைந்தபோதா? 'மறுபடியும்' ரேவதியின் கண்ணீரில் நனைந்தபோதா? 'சதில்ல கமலுடன் இரிக்கப்பட்ட திரிந்த போதா? 'ராமன் அப்துல்லா' வில் நெகிழ்ந்தபோதா? 'அது ஒரு கனாக்காலத்தில் அலைந்தபோதா? 'தலைமுறைகளில்

தொலைந்தபோதா?

காஞ்சிபுரத்தில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எம்.ஜி.வல்லபன் நடத்திய 'ஃபிலிமாலயா' பத்திரிகையில் உங்கள் பேட்டி ஒன்று வந்திருந்தது. அப்போதைய 'சுபமங்களா' பத்திரிகையைப் போல மிக நீண்ட பேட்டி அது. நாளைய சினிமா குறித்து, நீங்கள் அளித்திருந்த பதில் இன்னமும் பசுமையாக என் நினைவில் உள்ளது. அந்த வரிகள், 'நாளைய தமிழ் சினிமாவின் முகங்களை மாற்றியமைக்கப்போகிற இளைஞர்கள், தற்சமயம் தனி முகவரி அற்றவர்களாகத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வருவார்கள். இந்திய வெயிலின் சுட்டெரிக்கும் அனலோடும், தமிழ் யதார்த்தத்தின் புழுதிக்காற்றோடும்'! அந்த வரிகள் என்னைப் புரட்டிப்போட்டன. எங்கேயோ இருந்த என் துரோணாச்சாரியரின் விரல்களை இந்த ஏகலைவன் இப்படித்தான் பற்றிக்கொண்டான்.

நதி, மேகத்தில் உருவாகி மலையில் அருவியாகி காடுகளில்

வெள்ளமாகி எங்கெங்கோ பயணித்து கடைசியில் கடலை

வந்தடைவது இல்லையா? அப்படித்தான் உங்களிடம் நான் வந்து சேர

எட்டு ஆண்டுகள் பிடித்தன.

சூரியனைத் தள்ளி நின்று காதலிக்கும், சூரிய காந்தியைப் போல, என்

ஆசானே... இந்தக் காலங்களில் எல்லாம் உங்களை நான்

தொடர்ந்துகொண்டே இருந்தேன். 'எண்பதுகளில் கலை இலக்கியம்"

என்று முன்றில் பத்திரிகை நடத்திய விழாவில், கோமல்

சுவாமிநாதனின் சுபமங்களா நடத்திய நாடக விழாவில், ஃபிலிம்

சேம்பரில், ரஷ்ய கலாசார மையத்தில், மேக்ஸ் முல்லர் பவனில்,

அலையன் ஃபிரான்சிஸில்... என எங்கெங்கோ நடந்த உலகப் பட

விழாக்களில் உங்களை நான் தள்ளி நின்றே ரசித்துக்கொண்டிருந்தேன்.

என் கவிதைகளைத் தொகுத்து, 'பட்டாம்பூச்சி விற்பவன்' என்ற

தலைப்பில், அறிவுமதி அண்ணன் அவரது 'சாரல்' பதிப்பகத்தில்

கொண்டுவர நினைத்தபோது, யாரிடம் முன்னுரை வாங்கலாம் என்ற

கேள்வி எழுந்தது. நண்பர்கள் சொன்ன எல்லாப் பெயர்களையும் நிராகரித்து, "எங்க டைரக்டர் பாலுமகேந்திரா சார்தான் இதுக்கு முன்னுரை எழுதணும்" என்று அறிவுமதி அண்ணன் சொன்னபோது, "சார் எழுதிக் குடுப்பாரா?" என்று தயங்கியபடி கேட்டேன். "நான் ஒரு அறிமுகக் கடிதம் எழுதிக் கொடுக்கிறேன். நீ நேர்ல போயிப் பாரு" என்றார் அண்ணன்.

இன்னும் நினைவில் உள்ள அந்தக் கடிதம் இப்படித் தொடங்கும்.

'அன்பின் அப்பாவுக்கு.

தங்கள் பிள்ளை மதி எழுதும் கடிதம்.

இவன் என் தம்பி. இவன் கவிதைத் தொகுப்புக்கு முதல் குழந்தையின் பூஞ்சை மேனியில், மருத்துவச்சியின் கைரேகைப் பதிவாக உங்கள் முன்னுரை வேண்டும். உங்கள் உரைநடைக் காதலனாக, இது என் அன்புக் கட்டளை.

இப்படிக்கு தங்கள் அன்புப் பிள்ளை, மதி."

அந்தக் கடிதத்தை, அவர் கைகள் நடுங்க நின்றுகொண்டே எழுதினார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள், ஏழு படங்கள் என உதவி இயக்குநராக உங்களிடம் வேலை செய்த, மூத்தப் பிள்ளையின் முழு பக்தி அது.

அடுத்த நாள் காலை உங்கள் அலுவலகம் வந்தேன். 'கணையாழி விழாவில் உங்களின் 'தூர்' கவிதையை எழுத்தாளர் சுஜாதா படிச்ச அந்த நிகழ்வில், நான் பார்வையாளனாக இருந்தேன். நிச்சயம் முன்னுரை தர்றேன்' என்றீர்கள்.

கையெழுத்துப் பிரதியை உங்களிடம் தந்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். பேஜர், செல்போன் என்று அறிவியல் முன்னேறியிராத காலம் அது. இப்போது யோசிக்கையில் அது மிகவும் நல்ல காலம். அன்று இரவே அறிவுமதி அண்ணன் அலுவலகத்துக்கு நீங்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'நாளை காலை ஏழு மணிக்கு முத்துக்குமாரை என் அலுவலகத்துக்கு வரச் சொல்லுங்கள்' என்று சொல்லியிருக்கிறீர்கள். அடுத்த நாள் மதியம், சாவகாசமாக அண்ணனின் அலுவலகம் சென்றபோது இந்தத் தகவலை என்னிடம் சொன்னார்கள். இடைப்பட்ட நேரத்தில். என் வாழ்வின் மஞ்சள் வெளிச்சம் நான் இல்லாமல் என் மேல் விழுந்து இருந்தது.

'ராமன் அப்துல்லா' படப்பிடிப்பில் பிரச்னையாகி திரையுலகம் துண்டுபட்டு. 'இயக்குநர் இமயம்'

பாரதிராஜா தலைமையில் 'படைப்பாளிகள் இயக்கம்' என்று தனியாகச் சங்கமித்த நாள் அது.

சென்னை காமராஜர் அரங்கத்தில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள்,

நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்... எனப் பெரும் கலைஞர்கள் சங்கமித்த அந்த விழாவின்

தொடக்க உரையில் என் துரோணாச்சாரியரே... நீங்கள் இந்த ஏகலைவனின் 'தூர்' கவிதையை

'இந்தச் சூழலுக்குப் பொருத்தமாக ஒரு கவிதையுடன் என் உரையைத் தொடங்குகிறேன்' என்று

வாசித்து, 'இது என் உதவி இயக்குநர் நா.முத்துக்குமார் எழுதிய கவிதை' என்று அறிவித்ததாகப்

பின்னர் கேள்விப்பட்டேன்.

அன்று மாலை உங்களை அலுவலகத்தில் சந்தித்தபோது, "ஏன் காலையிலேயே வரவில்லை?

உன்னை மேடைக்கு அழைத்து எல்லோருக்கும் அறிமுகப்படுத்தலாம் என்று திட்டம்

இட்டிருந்தேன்" என்று கடிந்துகொண்டீர்கள். இப்படித்தான் இந்த நதி, தான் விரும்பிய கடலை

வந்தடைந்தது.

ஆஹா அந்தக் காலம்... அது ஒரு கனாக் காலம்! உலக சினிமாவின் கதவுகளைத் திறந்து என்

சிறுவிரல்கள் பிடித்து, என்னை நீங்கள் அழைத்துச் சென்ற நாட்கள் அவை. காலை அகிரா குரோசோவா, மதியம் கிஸ்லோவஸ்க்கி, இரவு மக்ஸன் மக்பல்பஃப் எனத் தேடித் தேடி உலக இயக்குநர்களின் படங்களை, எனக்கு நீங்கள் பயிற்றுவித்த பருவம் அது. சினிமா மட்டுமா? கதை நேரம் தொடருக்காக நீங்கள் படித்த கதைகளை நானும், நான் படித்த கதைகளை நீங்களும் விவாதித்த தருணங்கள் என் கண் முன் நிற்கின்றனவே!

நீங்கள் எங்களை உதவி இயக்குநர்களாகப் பார்க்கவில்லை. உங்கள் பிள்ளைகளாகவே நினைத்து வளர்த்தீர்கள். உங்களைப் போலவே உங்கள் மனைவி அகிலா அம்மாவும், துணைவி மௌனிகா வும் எங்களைத் தத்தெடுத்துக்கொண்டார்கள். என் அன்புத் தகப்பனே... பசி நிரம்பிய மதிய வேளைகளில் டைனிங் டேபிளில் அமரவைத்து, உங்கள் கையாலேயே வறுத்துக்கொடுக்கும் மீன்களின் ருசியை இனி யார் எங்களுக்குத் தரப்போகிறார்கள்? ஈழத்தின் அமிர்தகழியில் பிறந்த உங்களை, தங்கள் பிள்ளையாக நினைத்து தமிழகம் உங்கள் இறுதி ஊர்வலத்தைச் சிறப்பாக நடத்தியதை நினைத்து என் நெஞ்சம் நெகிழ்கிறது.

முதல் முறையாக ஓர் இயக்குநருக்காக தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது உங்கள் மரணத்துக்காகத்தான். இதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்சி... என அனைத்து சங்கங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

போய் வா என் தலைவா... நீ நிரந்தரமானவன். அழிவதில்லை. எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை.

இப்படிக்கு...

இந்திய வெயிலின் சுட்டெரிக்கும் அனலையும், தமிழ் யதார்த்தத்தின் புழுதிக்காற்றையும், வெள்ளித்திரையில் விதைக்கும் உங்கள் பிள்ளைகள் ஒளிப்பதிவாளர்கள் ஷங்கி மகேந்திராவுக்காக, ராஜராஜனுக்காக, நித்யாவுக்காக, கவிஞர் அறிவுமதிக்காக, இயக்குநர்கள் பாலாவுக்காக, வெற்றிமாறனுக்காக, சுகாவுக்காக, ராமுக்காக, சீனுராமசாமிக்காக, வக்கீல் சுரேஷ§க்காக, துரை செந்தில்குமாருக்காக, விக்ரம் சுகுமாரனுக்காக, அடுத்தடுத்து இயக்க இருக்கும் ஞானசம்பந்தனுக்காக, ராஜாவுக்காக, கௌரிக்காக மற்றும் இந்திய சினிமாவை மாற்றியமைக்கப்போகும் உங்கள் சினிமாப் பட்டறை மாணவர்களுக்காக, தூரத்தில் இருந்து உங்கள் வித்தையைக் கற்ற ஏகலைவர்களுக்காக...

மற்றும் ஒரு பிள்ளை

நா.முத்துக்குமார்.


நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்