டிசம்பர் 1, 2023 5:00 பி. ம்
புயல் மிக்ஜாம் சென்னை நேரடி அறிவிப்புகள்:
வட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான தெற்கு ஆந்திரப் பிரதேசம் மைச்சாங் சூறாவளியை எதிர்கொள்கிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் டிசம்பர் 4-ம் தேதி கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மழை நிலவரம் குறித்து இன்று(டிச 1) வானிலை ஆய்வு மையம் வெளியிடூ செய்துள்ளது . இந்த நிலையில், டிசம்பர் 3-ம் தேதி புயலாக வலுப்பெற்று டிசம்பர் 4-ம் தேதி சென்னை மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வார தொடக்கத்தில் மிக்ஜாம் சூறாவளியை , எதிற்ப்பார்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது, மேலும் துல்லியமாகப் எங்கு கடகும் என்றும் பகிரவில்லை.
இந்தியா வானிலைஆய்வு மையம் 'ஆரஞ்சு' எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, கடலோர மற்றும் உள்பகுதியில் ஆந்திரப் பிரதேசம் கடற்கரைக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை, சூறாவளி நெருங்கும் வாய்ப்பு உள்ளது. அதிகமான மழைப்பொழிவு, கடுமையான காற்று மற்றும் கரடுமுரடான கடல் நிலைமைகள் மேலோங்கும் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடந்த பிறகு, லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் புதன்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழையால் , வீடுகளில் தண்ணீர் புகுந்து விட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், பிரதிநிதிகள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்பு தொழிலாளர்கள் தண்ணீரை வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் .
முதல்வர் அறிக்கையின்படி, எட்டு அணிகள் மாநில பேரிடர் மீட்புப் படை(SDRF) 200 உறுப்பினர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) 225 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களுக்கு விரைந்துள்ளனர்.
மேலும் 4967 மீட்பு தங்குமிடங்கள் தயார் நிலையில் உள்ளன மக்களின் பாதுகாப்பிற்கு என்பது குறிப்பிடத்தக்கது.