சென்னையில் பல்வேறு இடங்களில் பிரபலங்கள் சிலர் மக்களுக்கு சில அடிப்படை வசதிகளைப் பெற உதவினார்கள். முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நகரில் உள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே, வெள்ளத்தால் பாதிககப்பட்ட மக்களுக்கு நிவார்ணப் பொருட்கள் வழங்கினார்.
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம் மற்றும் முடிச்சூர் பகுதி மக்களுக்கு, நாடு திரைப்படத்தின் இயக்குநர் சரவணன் மற்றும் நாயகன் தர்ஷன் ஆகியோர் இணைந்து நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.
நடிகர் பாலா மற்றும் அமுதவணன் சேர்ந்து , பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ₹1,000 நிவாரணமாக வழங்கினார்கள்.
இதை தொடர்ந்து நடிகர் விஜய் தனது x( டிவிட்டர் )பக்கத்தில் " சென்னை மறறும் புறநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் சிரமதிற்கு உள்ளாகி உள்ளனர். இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் த்தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளைச் செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்." கைகோர்ப்போம் துயர்துடைப்போம் என்று பதிவு செய்தார். இதை தொடர்ந்து x இல் கைகோர்ப்போம் என்ற சொல் திரெண்டிங் ஆகியது.