எலினோர் ரோசலின் கார்ட்டர் (ஆகஸ்ட் 18, 1927 - நவம்பர் 19, 2023) ஒரு அமெரிக்க எழுத்தாளர், ஆர்வலர் மற்றும் மனிதநேயவாதி ஆவார், அவர் 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் முதல் பெண்மணியாக ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் மனைவியாக பணியாற்றினார். அவரது பல தசாப்தங்களாக பொது சேவையில், அவர் பெண்களின் உரிமைகள் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான முன்னணி வழக்கறிஞராக அறியப்பட்டிருக்கலாம். இவர் செவ்வாய்க்கிழமை நவம்பர் 27ஆம் தேதி அன்று டிமென்சியா நோயால் அவதிப்பட்டு காலமானார்.
இவருக்கு குடும்பத்தினர் ,நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து நினைவகம் நடத்தினர். அப்போது டோனி லாடன், கார்டர் குடும்பத்தின் சமயக்குரு இரகசிய சேவையை நன்றி செலுத்தினார், ரோசலின்க்கு பாதுகாப்பு கொடுத்ததற்கு.
சமயகுரு லாடன், நினைவகத்தில் "இரகசிய சேவையைக் கடந்த ஐந்து ஆண்டு காலம் ரோசலினிற்கு பாதுகாப்பு அளித்ததற்கு நன்றி சொல்லிவிட்டு, பின்னர் ரோசலின் இன்று இருந்திருந்தால் அவரும் நிச்சயமாக நன்றி செலுத்தியிருப்பார்" என்று விவரித்தார். அதன் பின்னர், முன்னால் முதல் பெண்மணிக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினர். அட்லாண்டா ,க்ளென் மெமோரியல் யுனைடெட் மெதடிஸ்ட் தேவாலயத்தில் தற்போதைய முதல் பெண்மணியான ஜில் பிடனுடன் - திருமதி ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் மற்றும் லாரா புஷ் ஆகிய முன்னாள் முதல் பெண்மணிகளும் சேர்ந்து திருமதி. கார்ட்டரின் நினைவுச் சேவைக்காக வந்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.