கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாரதிய ராஷ்டிரிய சமிதி, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், மாநிலத்தில் இரட்டை இலக்க தொகுதிகளை குறிவைத்து களமிறங்கிய பாஜக மற்றும் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டப்பேரவை தேர்தலில் முன்னணியில் இருந்தன. சந்திரபாபு நாயுடுவின் தெலங்கு தேசம் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளது.
கடந்த, 2014ல் உருவான தெலுங்கானாவில், தொடர்ந்து நடந்த இரண்டு தேர்தல்களிலும், சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி அபார வெற்றி பெற்றது. தேசிய அரசியலில் கண்வைத்து, தன் கட்சியின் பெயரை தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி என்பதை பாரத்ராஷ்டிர சமாதி என சந்திரசேகர் ராவ் மாற்றினார்.தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.
மாநிலத்தில் மற்ற கட்சிகள் எதுவுமே இல்லை என்ற பிம்பம் உருவாகியது. ஆனால் மிகக் குறுகிய காலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக அந்த தீவிரமாக களம் இறங்கின.
மற்ற மூன்று மாநிலங்களில் தோல்வியை அடைந்தாலும் தெலுங்கானாவில் ஆபர சாதனையுடன் காங்கிரஸ் வென்றுள்ளது. இதன் வழியாக கர்நாடகாவை தொடர்ந்து, தென் மாநிலங்களில் இரண்டாவது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.
119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவிற்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
இதற்கு முன்னர் தெலுங்கானாவில் பி. ஆர்.எஸ் கட்சி 88 இடங்களை பிடித்திருந்தது தற்போது 39 இடங்களாக மாறிவிட்டது. பாஜக இதற்கு முன்னர் வெறும் ஒரே ஒரு இடத்தில் தான் வெற்றி பெற முடிந்தது தற்போதைய தேர்தலில் கூடுதலாக ஏழு இடங்களை பிடித்து 8 தொகுதிகளை பிடித்துள்ளது. ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 9 இடங்களில் போட்டியிட்டு ஏழு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று காங்கிரஸ் இதற்கு முன்னர் 19 இடங்களில் தனது ஆட்சியை அமைத்திருந்தது தற்போதைய சட்டசபை தேர்தலில் 64 தொகுதிகளை பிடித்து ஆட்சியைப் பிடித்துள்ளது.
தெலுங்கானாவில் யார் அடுத்த முதல் அமைச்சர் ?
தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ஏ. ரேவந்த் ரெட்டி தெலுங்கானாவின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என்றும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி (சிஎல்பி) கூட்டம் தற்போது ஹைதராபாத் தனியார் விடுதியில் நடந்து வருகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) திரு. ரெட்டிக்கு ஆதரவாக உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.அதிகபட்ச எண்ணிக்கையிலான எம்எல்ஏக்களின் ஆதரவையும் அவருக்கு தான் என்று எண்ணப்படுகிறது.