புயல் எச்சரிக்கை கூண்டு: மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழை இரவு முழுவதும் பெய்து வருகிறது. காற்றின் வேகமும் சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக அரும்பாக்கம் பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது
தனியார் வானொலி ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியபடி 2015க்கு பிறகு மழையை சென்னை பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்று இரவு வரைக்கும் இந்த பெருமழை தொடரும் என்ற எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருக்கிறது தற்போது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி கிடப்பதை நாம் பார்க்கிறோம்.
சென்னை நகரில் மழை வெள்ளம் காரணமாக 17 சுரங்கப்பாதைகள் தற்பொழுது மூடப்பட்டிருக்கின்றன ரங்கராஜபுரம் ,வியாசர்பாடி , ஹாரிங்டன் ரோடு , சூளைமேடு , ரிசெர்வே வங்கி பாதைகள் மூடப்பட்டிருக்கின்றனர். பல தண்ணீர் நிரம்பி சுரங்கப்பாதையும் தண்ணீரும் ஒரே அளவில் இருக்கக்கூடிய சூழல்கள் பல இடங்களில் இருக்கின்றன. அதனால் அது மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலை ஏற்படுத்தும் என்பதன் காரணமாக அந்த சுரங்க பாதைகளை அரசு மூடி இருக்கிறது. அண்ணா சாலை மற்றும் வேறுபாதைகளை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தாலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
13 கி.மீட்டர் வேகத்தில்: இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெற்று 5 ஆம் தேதி முற்பகல் ஆந்திராவின் நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கு இடையேயும் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது .