நியூ ஜீலாண்ட் மற்றும் பங்களாதேஷ் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்தில் விளையாடுகிறது. இதில் வங்கதேசம் முதல் போட்டியில் தோல்வியடைந்து நியூசிலாந்து 1-0 என முன்னிலையில் இருந்தது. புதன்கிழமை, டிசம்பர் 20 அன்று நடந்த இரண்டாவது ஆட்டம், பார்வையாளர்களுக்கு ஒரு பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சச்சினின் சாதனையை முறியடித்து புதிய சாதனைப் படைத்த சௌமியா:
இந்த போட்டியில், சௌமியா 151 பந்துகளில் 111.92 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 169 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் கிவி பந்துவீச்சை எதிர்த்து சௌமியா 22 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். இதைதொடர்ந்து, நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில், துணைக் கண்டத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரால் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த டெண்டுல்கரின் மைல்கல்லை முறியடித்தார் சௌமியா. இதற்கு முன்னர், 2009 ஆம் ஆண்டில், கிறிஸ்ட்சர்ச்சில் கிவிஸுக்கு எதிராக 'மாஸ்டர் பிளாஸ்டர்' என்னும் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 163 ரன்கள் எடுத்து அந்த சாதனையை படைதிருந்தார். இந்த சாதனை 14 ஆண்டுகளாக முறியடிக்கப்படவில்லை என்பது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். நியூசிலாந்தில் வங்கதேசத்தின் அதிகபட்ச ஸ்கோரான 291 ரன்களும் ஆகும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாட்டில் ஒரு வங்கதேச கிரிக்கெட் வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களையும் அவர் எடுத்தார். சௌமியாவின் மூன்றாவது ஒருநாள் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த "சௌமியா சர்க்கார்"?
சௌமியா சர்க்கார் ஒரு வங்கதேச கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஆவார், அவர் முக்கியமாக தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடுகிறார் மற்றும் "பெரிஸ்கோப் ஷாட்" என்ற கிரிக்கெட் ஷோட்டை உருவாக்கியவர். டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் மேலும் வங்கதேச அணிக்காக ஒருநாள் இன்னிங்ஸில் அதிக தனிநபர் ரன் எடுத்த இரண்டாவது வீரர். சர்க்கார் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் குமில்லா வாரியர்ஸ், தேசிய கிரிக்கெட் லீக்கில் குல்னா பிரிவு மற்றும் டாக்கா பிரிமியர் பிரிவில் பிரைம் பேங்க் கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடுகிறார். பங்களாதேஷ் பிரீமியர் லீக் வரைவில், அவர் டாக்கா டொமினேட்டர்களால் வரைவு செய்யப்பட்டார்.
போட்டியின் விளைவு என்ன?
முதல் இன்னிங்சில் நன்றாக விளையாடிய பங்களாதேஷ் அணி, இரண்டாவது இன்னிங்சில் பந்துவீச்சாளர்கள் ரன்களை கூடுதலாக வழங்கி, சௌம்யா சர்க்கரின் சிறப்பான சதம் இருந்தபோதிலும், வங்கதேசம் தோல்வியைத் தழுவியது. இதனால் பிளாக்கேப்ஸ் 22 பந்துகள் மீதமுள்ள நிலையில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சௌமியா சர்க்கார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.