சமீப காலமாக இன்ஸாடாகிராமில் பெண் ஒருவர் தனது கண் சிகிச்சை குறித்த வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதில் அவர் அறுவை சிகிச்சையோ, லேசர் சிகிச்சையோ பெறவில்லை. மாறாக அட்டை பூச்சுகளின் மூலம் சிகிச்சை பெறுகிறார்.சமீப காலமாக இன்ஸாடாகிராமில் பெண் ஒருவர் தனது கண் சிகிச்சை குறித்த வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதில் அவர் அறுவை சிகிச்சையோ, லேசர் சிகிச்சையோ பெறவில்லை. மாறாக அட்டை பூச்சுகளின் மூலம் சிகிச்சை பெறுகிறார்.
இந்த சிகிச்சையின் பெயர் ஜிருடின் விஷன் (Girudin Vision )என்று அழைக்கப்படுகிறது. இரண்டு கரு விழிகளிலும் அட்டை பூச்சிகளை விட்டு அதன் மூலம் கண் பார்வை மேம்படுவதாக கூறப்படுகிறது. இந்த அட்டை பூச்சிகள் கண்களின் கருவிழிகளில் ஊர்ந்து செல்கிறது. இதன் மூலம் அவை கண்பார்வையை மேம்படுத்தும் திரவத்தை வெளியிடுவதாக கூறப்படுகிறது.
இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இது ஆபத்தான சிகிச்சை என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அந்த பெண்ணோ அது மிகவும் சிறப்பான சிகிச்சை என்றும் முன்னதாக தனது கண்பார்வை மைனஸ் 3.5 ஆக இருந்த நிலையில் தற்போது 1.25 ஆக மாறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது முழுக்க முழுக்க இந்த சிகிச்சையின் மூலமே சாத்தியமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் எதை இடுகையிடுவது என்ற கருத்தை இப்போதெல்லாம் மக்கள் இழந்துவிட்டனர். பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க எல்லாவற்றையும் பதிவுச் செய்கின்றன. மக்கள் அருவருப்பானதாகக் கருதுவதால், இந்த உள்ளடக்கம் இங்கே பிரபலமாக உள்ளது. மேலும் இப்போதெல்லாம் நம்பகமான போஸ்டை யாரும் பதிவுச் செய்வது இல்லை. மேலும் மறுப்புக்காக, இந்த பெண் வீட்டில் செய்ததை முயற்சிக்க வேண்டாம்.