இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ஐந்து டி 20 போட்டிகள் கொன்ற தொடர் ஆடி வருகிறது. இந்நிலையில் மூன்று போட்டிகள் முடிவு பெற்று 2-1 என்ற எண்ணிக்கையில் இந்தியா முன்னிலையில் இருந்தது. நேற்று ராய்ப்பூர் மைதானத்தில் நடந்த நான்காவது போட்டி விறுவிறுப்பாக அமைந்தது.
முதலில் டாஸ்சை வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவிசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கெய்க்வாட் களம் இறங்கினர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார் .
இதையடுத்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன், சூர்யகுமார் யாதவ் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ரிங்கு சிங் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார்.
பின்பு கெய்க்வாட் அட்டம் இழக்க , அதை தொடர்ந்து வந்த வீரர்கள் எவரும் சரியக ஆட வில்லை. ரிங்கு சிங் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்தியா அணி மொத்தம் 20 ஓவர்களுக்கு 174 ரன்கள் 9 விக்கெட் இழப்பிற்கு எடுத்தநர்.
அதையடுத்து அடிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் மற்றும் ஜோசப் ஃபிலிப் ஒரு நல்ல தொடர்க்கதிற்க்கு பின்னர் ஆட்டமிழந்தனர். டிராவிஸ் 31 ரங்களுகும், ஜோசப் 8 ரங்களுகும் அக்சர் படெல் பந்துக்கு அவுட்டனர். இறுதி வரை போராடிய கேப்டன் மேத்யூ வேட் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்சர் படெல் 3 விக்கெடுள் எடுத்து 16 ரன்கள் மட்டுமே வழங்கி ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்க பட்டார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.