திங்கள்கிழமை இரவு 11 மணி நிலவரப்படி, சென்னைக்கு வடக்கே 130 கி.மீ தொலைவில் "மிக்ஜாம் தீவிரமாக புயலாக" உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்தது. மேலும் ,மிக்ஜாம் புயல் ஆந்திராவின் தெற்கு கடற்கரையில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே பாபட்லாவுக்கு அருகில் இன்று கரையை கடக்க வாய்ப்புள்ளது. வீடுகளில் தண்ணீர் புகுந்து அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் மக்கள் திந்தாடுகின்றனர். அது மற்றும் இன்றி சுமார் எட்டு பேர் இதுவரை உயிரிழந்தனர் என்று போலீஸார் அறிவித்து உள்ளனர்.
பல்வேறு மீட்பு பணிகள் குறித்து:
தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை ,தொப்பை விநாயகர் கோவில் தெரு, கண்ணகி நகர், விராகுட்டி தெரு பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வெளியே வர முடியாத மக்களுக்கு வழங்குவதற்காக 40000 பேருக்கு உணவு தயாரித்து வழங்கியுள்ளது சென்னை மாநகராட்சி.
இதை அடுத்து பல இடங்களில் இருந்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மக்கள் மீட்பு சையப் பட்டனர். நேற்று பெய்த கனமழையால் பல சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சென்னை போக்குவரத்துக் கிளை இன்று அனைத்து புறநகர் சேவைகளையும் ரத்து செய்வதாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மின்சாரம் வழங்க பணிகள் தீவிரம்:
சென்னை புறநகர் பகுதிகளில் புயல் எதிரொலியாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மின்சாரம் வழங்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழைநீர் தேங்காத இடங்களில் மின் ஊழியர்கள் சரிசெய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளையும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ( டிச. 6) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் இறப்புகள் பற்றிய செய்திகளால் மனவேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். சூறாவளி முன்னேறும் போது, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசாவின் தொழிலாளர்கள், தங்கள் அரசாங்கத்தின் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு அனைத்து ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று ராகுல் காந்தி ANI இடம் பேசினார்.
தமிழகத்தில் 2 நாட்களில் 3 மாத மழை பெய்துள்ளதாக தமிழக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.