மகாராஷ்டிர மாநிலம் தானேயில் 26 வயதான பிரியா சிங் என்பவரை அடித்து காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அஸ்வஜித் கெய்க்வாட் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். கெய்க்வாட் ஒரு மூத்த மகாராஷ்டிர அதிகாரியின் மகன். இச்சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) லேண்ட் ரோவர் டிஃபென்டர் என்ற காரையும் பறிமுதல் செய்தது. குற்றத்திற்கு கார் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
"முக்கிய குற்றவாளியான அஷ்வஜித் கெய்க்வாட் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளான ரோமில் பாட்டீல் மற்றும் சாகர் ஷெட்ஜ் ஆகியோரை கைது செய்தது. குற்றத்திற்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது" என்று தானே காவல்துறை தெரிவித்துள்ளது.
26 வயதான பெண், டிசம்பர் 11 ஆம் தேதி கெய்க்வாட்டை சந்திக்க சென்றதாக கூறியிருந்தார். அவன் "விசித்திரமாக" நடந்து கொள்வதைக் கண்டு அவனிடம் தனிமையில் பேசச் சொன்னாள்.
"என் காதலன் என்னை அறைந்தான், என் கழுத்தை நெரிக்க முயன்றான், நான் அவனைத் தள்ள முயன்றேன். அவன் என் கையைக் கடித்து, அடித்தான், என் தலைமுடியை இழுத்தான், அவனுடைய நண்பன் என்னைத் தரையில் தள்ளினான்" என்று ப்ரியா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறினார்.
அவள் தொலைபேசியையும் பையையும் எடுக்க அவனது காருக்கு ஓடினாள், அப்போதுதான் அஷ்வஜித் தன் டிரைவரை தன்மேல் ஏற்ற சொன்னான். அவள் கால்களுக்கு மேல் வண்டியை ஏற்றிவிட்டு பிறகு, அவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர், என்று அவர் கூறினார்.
"எனது வலது கால் உடைந்துவிட்டது, நான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது, என் வலது காலில் ஒரு தடியை வைக்க வேண்டியிருந்தது. எனக்கு உடல் முழுவதும் காயங்கள் உள்ளன, என் கைகள், என் முதுகு மற்றும் என் வயிறு பகுதி ஆழமாக கீறப்பட்டுள்ளது," என்று பிரியா கூறினார். நான்கரை ஆண்டுகளாக அஸ்வஜித்துடன் டேட்டிங் செய்வதாகக் கூறினார்.
அந்தப் பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, அஸ்வஜோத் கெய்க்வாட் மற்றும் இருவர் மீது பிரிவுகள் 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 279 (அவசரமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற தொடர்புடைய விதிகள் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது
இதற்கிடையில், அஸ்வஜித் கெய்க்வாட் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளனர். கெய்க்வாட் இந்த முழு சம்பவத்தையும் "பணம் பறிக்கும் முயற்சி" என்று ஆதாரங்களின்படி கூறினார்.
காவல்துறை துணை ஆணையர் (டிசிபி) அமர் சிங் ஜாதவ் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரி ஒருவரின் மகனான அஸ்வஜித் அனில் கெய்க்வாட், கைது செய்துள்ளது. மேலும் கைக்வாட்டின் கூட்டாளிகளான ரோமில் பாட்டீல் மற்றும் சாகர் ஷெட்ஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றத்திற்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தானே போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் துணை ஆணையர் (டிசிபி) சனிக்கிழமை பேசுகையில், "இந்த சம்பவம் திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் கோட்பந்தர் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்தது, அங்கு பாதிக்கப்பட்டவர் அஷ்வஜித்தை சந்திக்கச் சென்றார்." என்று தெரிவித்தார்.