பாராளுமன்ற பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவையில் அத்து மீறி நுழைந்த இருவர் மஞ்சல் நிற புகைக்கும் பொருளை எம். பி.க்கள் மத்தியில் வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீவிர சோதனை....
பாராளுமன்ற மக்களவையில் அத்துமீறிய அந்த நபர்களைப் பிடிக்க ம்.பிக்களும் உதவினர். அவர்கள் இருவரையும் அவைப் பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில், பாராளுமன்ற வளாகத்தில் காவல் துறையினர் உளவுத் துறையினர் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்பின் அத்துமீறி நுழைந்தவர்களில் ஒரு வா மைசூரு தொகுதி பாஜக எம்பி பிரதாப் சிமஹா பரிந்துரையில் வந்துள்ளார் என்று வெளியான தகவலை சுட்டிக் காட்டி எதிர்க்கட்சி எம் பிக்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நிலையில் மக்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அவைக்கு வெளியே...
சரியாக 1 மணியளவில் பூஜ்ஜிய நேர நிகழ்வின்போது இந்தச் சம்பவம் நடந்தது அவைக்குள் குதித்தவர்கள் 'சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம்'என்று கோஷமிட்டுள்ளனர்.
இதேபோல் அவைக்கு வெளியே கைதான இரு பெண்களும் பாரத் மாதா கி ஜே என்று முழக்கமிட்டனர். அந்தப் பெண்களில் ஒருவர் தன் பெயர் நீலம் என்று தெரிவித்ததாகவும், மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாக காவல் துறையிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்றத்துக்கு வருகை தந்த டெல்லி காவல் ஆணையர் பாதுகாப்பு மீறல் எப்படி சாத்திய மானது என்பது தொடர்பாக விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சபாநாயகர் விளக்கம்...
இந்தச் சம்பவத்தைத்
தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை யில் பேசும்போது, “பூஜ் ஜிய நேரத்தில் நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டெல்லி போலீசாருக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன" என கூறினார்.
இதையடுத்து வழக்கமான பாராளுமன்ற அலுவலைத் தொடர அவர் முயன்றார். அப்போது குறிக்கிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் இது குறித்து அவையில் விவாதிக்க பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர், "விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டத்துக்குப் புறம்பாக அத்துமீறிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்த பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. இவர்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்துக்கு வெளியே இருந்த இருவரும்கூட கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறினார்