shabd-logo

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024

0 பார்த்தது 0

1

அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங்கினார்கள். அதிலே ஒரு நல்ல வீடு கட்டினார்கள்; வெளியே பார்த்தால் 'மேற்கத்தி' மோஸ்தர்; ஆனால் வீட்டுக்குள்ளே எல்லாம் ஜப்பானிய 'வளமுறைதான்'; - தரையில் பாய், கடுதாசித் திரை எல்லாம். ஆனால் முன்கூடத்தை மட்டும் மேற்கத்தி மோஸ்தரில் ஜோடித்து நாற்காலி மேஜை போட்டிருந்தார்கள். தரையில் மரப்பலைகையைப் பாவி இருந்தார்கள். அதற்கு மேலே சீனக் கம்பளத்தை விரித்தார்கள். தற்காலத்தில் பிரபலம் பெற்ற ஜப்பானிய சிற்பிகள் செய்த சிலைகள், சித்திரக்காரர்கள் தீட்டிய படங்கள் எல்லாவற்றையும் வாங்கி முன்கூடத்தை அலங்கரித்தார்கள். "இந்தக் காலத்திலே எல்லோரும் பியானோ ஒன்று வாங்கி இந்த மாதிரி அறைகளில் வைத்திருக்கிறார்களே" என்று கொண்டு ஒரு பியானோ வாத்தியத்தையும் வாங்கி வைத்தார்கள். மூத்த பெண்ணுக்கு இனிமேல் பியானோ கற்றுக் கொடுப்பது என்றால் முடியாது. ஆகையால் மூன்றாவது பெண் ணையும் கடைசிப் பெண் ணையும் (ஒன்பது வயசு) பியானோ கற்றுக் கொள்ள அனுப்பினார்கள், இன்னும் கொஞ்ச நாளில் வீட்டில் பியானோ சத்தம் கேட்கும்; அப்படிக் கேட்பதும் பெரிய குடும்பத்துக்கு அடையாளம் என நினைத்து திருப்தி அடைந்தார்கள். வீட்டுக்கு டெலிபோன் வைக்கவும் மறக்கவில் லை; டெலிபோன் நம்பரை கொட்டை எழுத்தில் வீட்டுவாசல் கதவில் பதிக்கவும் மறக்கவில் லை. இனிமேல் மக்களை போட்டோ எடுக்கவேண்டும். எடுத்த எடுப்பிலேயே வெற்றி கிடைத்துவிடுமா? பெண்கள் படங்களைப் பிடிப்பதில் ரொம்பக் கெட்டிக்காரன் என்று டோ க்கியோ முழுவதிலுமே பேர்வாங்கிய ஒரு புகைப்படக்காரனிடம் மக்களை அழைத்துக்கொண்டு போனார்கள். ரொம்பக் காக்கப் போட்டுவிட்டான்; அழகழகான பூங்கொத்துக்கள் மாதிரி உடையுடுத்து அலங்காரம் செய்து கொண்டு பல பெண்கள் இவர்களுக்கு முன்பே வந்து காத்திருந்தார்கள். கடைசியாக அவர்கள் முறையும் வந்தது. அவர்கள் மக்கள் சிரித்த முகத்தோடும் மலர்ச்சியோடும் இருக்க வேண்டும்; தவிரவும் குளுமையும் களங்கமற்ற தன் மையும் முகம் நிறைந்தாற் போல் இருக்க வேண்டும். படத்திலே உடம்பு புஷ்டியாக - கூடுமானவரை புஷ்டியாகத் தெரிய வேண்டும்; ஏனென்றால் அவள் கொஞ்சம் ஒன் றை நாடி; 'நோஞ்சான் என்று நினைத்து விடக்கூடாது.' போட்டோ பிடிக்கிறவன் இதை எல்லாவற்றையும் புரிந்து கொண்டான். ஐந்து வாரங்கள் கவலையோடு காத்திருந்த பிற்பாடு டோ க்கியோவிலேயே ரொம்பப் பெரிய 'பில்' - எதுக்கென்றாலும் அவ்வளவு பெரிசு இருக்காது - அவர்களுக்கு வந்து சேர்ந்தது. படம் வந்தது; படமும் பாதகமில் லை; இதுதானே முதல் தடவை. பெண் ணைக் கலியாணம் செய்து கொடுப்பது என்றால் பெற்றோர் யார் என்று பார்க்கமாட்டார்களா? அதற்காக நல்லபடி உடுத்துக் கொள்ள வேண்டும்; கூடியவரை அன்னியோன்னியமாக நடந்து கொள்ளுவது போலக் காட்டிக் கொள்ள வேண்டும். சண் டை போட்டுக் கொள்ளுவதை நிறுத்திக் கொண்டார்கள். இரண்டு பேரும் அடிக்கடி குழந்தையைக் கட்டிக்கொண்டோ , அல்லது இரண்டு பேர் மட்டும் தனியாகவோ உலாவப் போனார்கள். புருஷன் இரண்டு வருஷத்திற்கு முன் செய்தது மாதிரி பெண்டாட்டி கருப்பு 'பர்' மயிர் வாங்குவதைத் தடுக்கவில் லை. ஒரு வைர மோதிரம் கூட வாங்கிக் கொடுத்து விட்டான். நாடகம் பார்க்கப் போனார்கள்; மூத்த மகளையும் அழைத்துக்கொண்டு போனார்கள்; அவர்கள் பேஸ் பால் விளையாட்டு, நாடகம், சினிமா எல்லாவற்றிற்கும் போனார்கள். தாங்கள் தற்காலத்திய நாகரிகப் பெற்றோர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளுவதற்குப் பேச விஷயங்களாவது வேண்டாமா? மூத்த மகளை அதே போட்டோ கிராபர் இடண்டாந் தடவையும் எடுத்தான்; மூன்று மாசம் கழித்து எடுத்தார்கள்; அது ரொம்ப நன்றாக வந்திருந்தது. பழைய காலத்து நீண்ட கிமோனோ அங்கியும், 'ஒபி' ஜரிகை காலரும் போட்டிருந்தாலும் புஷ்டியாக ஆரோக்கியமாக, மலர்ந்த முகத்துடன் படத்தில் விழுந்திருந்தாள். பன்னிரண்டு காப்பிகள் (நகல்கள்) எடுக்கும்படி உத்திரவு கொடுத்து அவைகளை வாங்கி நண்பர்கள், சொந்தக்காரர்கள் முதலியோரிடை வினியோகித்தார்கள்.

 2

படம் கிடைத்த இரண்டு மூன்று நாட்களுக்கு அப்புறம் "உங்களுக்கு ஒரு நல்ல சமாச்சாரம் சொல்லப் போகிறேன்" என்றார் அவர்களுடைய நண்பர்களில் ஒருவர். இப்பொழுதுதான் பாசாகி பட்டம் பெற்று சர்வகலாசாலையிலிருந்து வெளிவந்திருக்கிறான். தகப்பனார் பணக்காரர். ஆணும் பெண்ணுமாக எட்டுக் குழந்தைகள் அதில் மூத்த பையன் இந்த வாலிபன்; பையன் சர்வகலாசாலையில் பட்டம் வாங்கியவுடனேயே சர்க்கார் நிதி இலாகாவில் வேலை கிடைத்து விட்டது. வேலை கிடைக்காத இந்தக் காலத்தில் இது அதிசயமல்லவா! ஆணும் பெண்ணுமாக எட்டு அண்ணன் தங்கைமாரா? மூத்தவன் என்றால் நல்லதுதான்; ஏனென்றால் பாரம்பரிய சொத்தில் அவனுக்குத்தான் பங்கு ஜாஸ்தி; இருந்தாலும் மற்ற குழந்தைகள் கஷ்டத்தில் மாட்டிக் கொண்டால் அவனும் அவன் மனைவியும்தானே குடும்பத்துக்குப் பெரியவன் என்ற ஹோதாவில் தலையிட வேண்டியிருக்கும். நம்ம பொண் ரொம்ப சிறிசு; கல்யாணமாகி பெரிய குடும்பத்தை நடத்த அதற்கு திறமை போதாது; மேலும் இப்பொழுது தானே ஹைஸ்கூல் படிப்பை முடித்திருக்கிறாள்; கலியாணம் பண்ணி வைப்பது என்றால் இன்னும் எவ்வளவோ சொல்லி வைக்க வேண்டும்; "இப்பொழுது அந்த யோசனையில் லை" என்று சொல்லி மரியாதையாகத் தட்டிக் கழித்து விட்டார்கள். மகளும் சர்வகலாசாலையில் பட்டம் வாங்கினாள்; பெற்றோர்கள் நன்றாக நாஸூக்காக உடை உடுத்திக் கொண்டார்கள்; ஒரு மோட்டார் காரை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அவள் வாசித்த ஹைஸ்கூல்களுக்கெல்லாம் போய் சொல்லிக் கொடுத்த வாத்திமார்களுக்கெல்லாம் திருப்தியான பரிசு, ஒவ்வொருவருக்கும் கொடுத்து விட்டு வந்தார்கள். காரணம், உபாத்தியாயர்கள் தம் பெண் ணைப் பற்றி நல்லபடியாகவே சிபாரிசு செய்வார்கள் என்பதுதான். பிறகு அவளுக்கு தேநீர்ச் சடங்கு, பூ அலங்காரம், நோஹ் பாடுவது (நலங்கு பாட்டு மாதிரி), பின்னல் வேலை, எழுத்து வேலை, மேற்கத்தி சுயம்பாகம், தையல் வேலை எல்லாம் கற்றுக் கொடுத்தார்கள். அவளுக்கு மேற்கத்தி, ஜப்பானிய வள முறைகள் இரண்டும் தெரிந்திருக்க வேண்டாமா? யார் மாப்பிள் ளையாக வரப் போகிறான் என்று என்ன கண்டார்கள். ஜப்பானிய தேநீர் விருந்தென்றால் நீள கிமோனோவைப் (ஜப்பானிய பெண்கள் அணியும் நீள அங்கி) போட்டுக் கொண்டு போனாள்; பேஸ் பால் விளையாட்டுக்கு அழைப்பு வந்தால் தானே தைத்து வைத்துக் கொண்டிருக்கும் அன்னிய மோஸ்தர் உடைகளை அணிந்து கொண்டு சென்றாள்; விருந்தாளிகள் வீட்டுக்கு வந்தால், பிரஞ்சு முறையில் மகள் செய்து வைத்த பக்ஷணத்தை அவர்கள் முன்னிலையில் புகழ்ந்தார்கள்; அதுவும் பியானோ மேல் ஜோடித்து வைத்த புஷ்பமும், திரைகளும், குஷன்கள் மேல் போட்டுள்ள பூ வேலைகள் எல்லாம் அவள் செய்தது தான். அவள் திறமைகளை எல்லாம் எடுத்துக் காட்ட வேண்டாமா; கூடுமானவரை எல்லாவிதமான திறமைகளையும் பெறும்படி செய்ய வேண்டாமா? இரண்டாம் முறை ஒரு வரன் வந்தது. அவன் ஒரு என்ஜினியர். அவனும் பணக்காரக் குடும்பத்தில் மூத்த பையன்; ஆனால் வேலை காரணமாக அவன் எப்பொழுதும் பிரயாணம் செய்து கொண்டிருக்க வேண்டும்; அதனாலே அவன் மனைவி அவனது பெற்றோருடன் இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்க வேண்டியிராது. விவரங்களைப் பார்த்தால் நட்புத் தட்டுகிறது; ஆனால் ஐந்தடி மூன்றங்குலந்தான் உயரமாம். அவளும் அதே உயரம். "பெண்ணுக்கு ஏற்ற வளர்த்திக்கு மேல் இருக்கிறார்" என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு பேச்சை நிறுத்திக் கொண்டார்கள். அப்புறம் நெட்டை அபேட்சகரும் வந்தார். ஐந்தடி எட்டங்குளம்; அனிகாவா வம்சத்தைச் சேர்ந்த பிரபு. கேட்டபொழுதே மகிழ்ச்சி தாங்க முடியவில் லை. மகளுக்கு இந்தப் பேறு கிடைப்பதென்றால் சும்மாவா? அவருக்கு நந்தவனம் போடுவதிலும், புஷ்பச் செடி வளர்ப்பிலும் அபாரப் பித்தாம். தம்முடைய மாளிகையில் நந்தவனமும், உஷ்ணப் பிரதேசப் பூச்செடிகளுக்கு என்று செயற்கை உஷ்ணம் கொடுக்கும் 'பூ வீடும்' வைத்து நடத்துகிறாராம். தாயாருடனும் சகோதரிகளுடனும் வசிக்கிறாராம். பேச்சு ஆரம்பிக்கலாம் என்று நினைத்தார்கள். மாப்பிள் ளை வீட்டார்கள் நிபந்தனைகள் என்னவோ? ஜமீன்தாரணியம்மாள், பெண் வீட்டுக்கு வரும்பொழுது சீர் வகைகளில் எட்டுச் சொருகு உள்ள அலமாரி, மூன்று பெரிய பெட்டி, இதுக்கேற்ற துணிவகைகள் கொண்டு வரவேண்டும் என்பதாகத் 'தரகன்' சொன்னான். அன்னிய மோஸ்தர் உடைகள் கூடவே கூடாதாம். அவள் கொண்டு வரும் சாமான்கள் அவள் இஷ்டம்போல் விற்கக் கூடியதாக இருக்க வேண்டுமாம். தவிரவும் வருஷத்திற்கு இரண்டு தடவை பெற்றோரைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாமாம்; வருஷப் பிறப்பின்போதும், வருஷ மத்தியிலுமாக இரண்டுதரம் அவர்களுக்குக் கடுதாசி எழுதலாமாம்; வருஷத்திற்கு ஒரு தடவை ரொம்பவும் அன்னியோன்னியமான சிநேகிதைகளைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாமாம். இதற்குமேல் இஷ்டப்படி வெளியே போகவோ எழுதவோ அனுமதி கிடையாதாம். "இந்த மாதிரி பிடிவாதம் பிடித்த பழம் பசலிகளுக்குப் பெண் ணைக் கொடுக்க முடியாது" என்று சொல்லிவிட்டார்கள். பொறாமை பிடித்த, குருட்டுத்தனமான தங்களது பெருமையாலும் ஞான விருத்தி விவகார ஞான சூன்யத்தாலும் படிப்படியாக வறுமையில் அழுந்திக் கொண்டிருக்கும் பிரபுக் குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொள்ள உலகத்தில் உள்ள செல்வம் பூராவும் கொடுத்தாலும் முடியாது என்று விட்டுவிட்டார்கள். 

3

அப்புறம் புதுசாப் பணம் படைத்த குடும்பம் பெண் கேட்டு வந்தது. தகப்பனார் ஒரு பெரிய தொழிற்சாலை வைத்து நடத்துகிறார். பத்து லட்சம் 'என்' (ஜப்பானிய நாணயம்) ஆஸ்தி என்று தரகன் சொன்னான். மாப்பிள் ளை இப்பொழுதுதான் இம்பீரியல் சர்வகலாசாலையிலிருந்து ஹானர்ஸ் பட்டத்துடன் வெளியே வந்திருக்கிறான். பார்க்கிறதுக்கு அழகாக இருப்பான்; நெட்டையாகவும் இருப்பான். பையனும் தகப்பனார் கூட அதே தொழிலில் ஈடுபட்டிருக்கிறான். இரண்டு தங்கைகள் உண்டு. சகோதரன் கிடையாது. சொத்து முழுவதும் அவனைத்தான் சேரும். தரகனிடம் மகளின் படத்தையும் பள்ளிக்கூட மார்க்குகளையும் கொடுத்தனுப்பினார்கள். ஒரு வாரம் கழித்து தரகன் திரும்பி வந்து மாப்பிள் ளையும் பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதை அந்தக் குடும்பம் விரும்புவதாகச் சொன்னாள். 'அவசரப்படாதே' என சிறிது அச்சத்தோடு சொன்னார்கள். ஒவ்வொருவர் அந்தஸ்தையும் அறிந்து சொல்லும் இரகசிய விசாரணை இலாகாவுக்கு மனுச் செய்து கொண்டிருந்தார்கள். அது வரட்டும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும் என தரகுகாரியிடம் சொன்னார்கள். தகவல் வந்தது. அவருக்கு சுமார் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் 'என்' இருக்கலாம். அவருக்கு இரண்டு வைப்பாட்டிமார் உண்டு. அந்த வழியில் ஐந்து குழந்தைகளும் உண்டு. சொத்துக்கு வாரிசான வாலிபன் ஒரு ஹோட்டல் பணிப்பெண்ணிடம் 'சம்பந்தம்' வைத்துக் கொண்டிருந்தான். அது போதாதா? பார்த்ததும் நடுநடுங்கினார்கள். ஆதி முதலே தரகர்மேல் சம்பந்தம். அவள் முழுக்கிற முழியைப் பார்த்தாலே பழைய காலத்து நினைப்புள்ளவள்; அவளுக்குக் கலியாணம் என்றால் இரண்டு குடும்பங்களுக்குள் ஏற்படும் வெறும் தொடர்புதான். கலியாணத்திற்கு அப்புறம் கமிஷன் வாங்கிய பின் அந்தப் பொறுப்பைப் பற்றி அவள் ஜவாப்தாரியல்ல. 'தரகச்சி' வார்த்தையில் சவாரி செய்வதா' என நினைத்தார்கள். அப்புறம் பல அபேட்சகர்கள் வந்தார்கள். ஒரு கெட்டிக்கார ஏழை வாலிபன்; அவனுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. கொஞ்சம் கனமாகவே ஸ்ரீதனம் கொண்டு வந்தால் பொருட்படுத்துவான்; ஆனால் இப்பொழுதுதான் எத்தனையோ பேர் அந்த மாதிரி கிடைக்குமே. பெண்டாட்டியின் பணத்தை வைத்துக்கொண்டு முன்னுக்கு வருவது, பிறகு அதை மறந்துவிட்டு வைப்பாட்டிகளை விலைக்கு வாங்குவது. அப்புறம் ஒரு வாலிப நீதிபதி. வயசு இருபத்தி ஒன்பதுதான். இருந்தாலும் ஒன்பது வருஷ வித்தியாசம் இருக்குமே. ஒன்பது அதிர்ஷ்டம் கெட்ட எண். ஒன்பது வயசு வித்தியாசமுள்ள தம்பதிகள் வயசாகும் வரை ஒன்றாக வாழ்ந்ததில் லை. அப்புறம் ஒரு காலேஜ் புரொபஸர். சம்பளமும் ரொம்பக் கொஞ்சந்தான். பிறகு ஒரு ராணுவ உத்தியோகஸ்தர்; ஒரு பேரன் (பிரபு அந்தஸ்து) வேண்டாம் ஐயா; சோல்ஜர்கள் பேச்சே நமக்கு வேண்டாம். "பொண் ணைக் கலியாணம் செய்து கொடுப்பது என்றால் என்ன சிரமம்" என பெற்றோர்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள். மூன்று வருஷமாக ஆகிறதே. இன்னும் எத்தனை நாள் இந்த மன உளைச்சல். இரண்டாவது பெண்ணுக்கும் கலியாணத்துக்கு வயதாகிவிட்டது. குழந்தைகளை வேனிற்காலம் முழுவதும் கடல் கரை சுகவாசஸ்தலத்திற்கு அழைத்துக்கொண்டு போவது என்று தீர்மானித்தார்கள். மூத்த பெண் ரொம்ப ஒற்றை நாடியாகவும் இளைத்துப் போனவள் போலவும் காணப்பட்டாள். வேனிற்காலத்தில் இந்த மாதிரிப் பெண்களே நாஸுக் இல் லை. 

4

இப்படியாகத் தாயார்  குழந்தைகளை அழைத்துக்கொண்டு நாஸுக்கான கடல்கரை சுக வாசஸ்தலத்திற்குச் சென்றாள். வேனிற்காலம் முழுமையும் அங்கேயே தங்கினார்கள். தகப்பனார் மட்டும் வாரக் கடைசியில் வந்து போய்க் கொண்டிருந்தார். புருஷனை விட்டுத் தனியாக இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. ஏவின வேலைக்கு ஏன் என்று கேட்க ஹோட்டலில் பணியாட்கள். சுகமாகத்தான் இருக்கிறது என நினைத்தாள் தாயார். மகள் கலியாண வயசில் இருப்பதினால் அல்லவா இந்தப் பாக்கியம். "வெயிலிலே உடம்பைக் கருக வைத்துக் கொள்ள வேண்டாம்; மாப்பிள் ளைக்கு ஏற்ற வாலிபன் வருகிறானா என்று கவனி!" என்று தகப்பனார் தாயாருக்கு உத்தரவு போட்டார். ஆனால் தாயாருக்கு அங்கு தென்பட்ட வாலிபர்களிடம் பேசவோ அல்லது பழக்கப்படுத்திக் கொள்ளவோ தைரியம் போதவில் லை. அவளால் செய்ய முடிந்தது எல்லாம் இதுதான்; மகளை அழகாகச் சீவி சிங்காரித்து கடல்கரைக்கு 'உலாவ' அழைத்துக்கொண்டு போவாள். நல்ல வம்சத்தில் பிறந்த கற்பனை மிகுந்த வாலிபன் யாராவது மகளைக் கண்டதும் காதல் கொள்ளுவான் என்று நம்பினாள். மகளுக்கு ஸ்நான உடை ஏற்றதாக இல் லை; தகப்பனார் ரொம்ப பணத்திற்குத்தான் வாங்கிக் கொடுத்தார்; ஆகையால் வாலிபர்கள் தென்பட்டால்தான் அதை உடுத்துக்கொண்டு குளிப்பதற்கு மகளை அனுமதிப்பாள் தாயார். உடன் பலன் ஏதும் ஏற்படவில் லை; ஆனால் தகப்பனாரும் தாயாரும் 'குழந்தையை' மறுபடியும் ஊருக்கு அழைத்துக் கொண்டு போகையில் கொஞ்சம் திடமாக இருப்பது கண்டு திருப்தி அடைந்தார்கள். ரொம்பச் செலவில் குஷியாகக் கழிந்த 'விடுமுறை'யைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள். செலவைக் கொண்டு வந்த வேனில் நல்ல பலனைத்தான் அளித்தது என்று பேசிக் கொண்டார்கள். "வாஸ்தவமாகவே நல்ல சமாசாரம்" என்று சொன்னார் அவர்களுடைய நண்பர்களில் ஒருவர். வாலிபன் பாங்கி குமாஸ்தா; ஆனால் தகப்பனார் தென்கடல் வர்த்தகக் கம்பெனி ஒன்றில் டைரக்டர்; குடும்பத்தில் மூன்று ஆண் குழந்தைகள்; இவர் இரண்டாவது; தவிர ஒரு பெண்ணும் உண்டு. அவன் இம்பீரியல் சர்வகலாசாலையில் பட்டதாரி; இருபத்தியேழு வயசு. நெட்டையாக, அழகாக இருப்பான். அவனுடைய அண்ணா ஒரு பேரனுடைய மகளைக் கலியாணம் செய்து கொண்டு சமுத்திரக் கரையருகில் உள்ள தங்கள் சிறு வீட்டில் மனைவியுடனும் மகனுடனும் வசித்து வருகிறான்; ஏனென்றால் மோட்டார் விபத்தில், நிரந்தர வியாதியஸ்தனாக ஆகிவிட்டான். "இரண்டாவது பிள் ளை; மூத்தவன் வியாதியில் படுத்துவிட்டான்..." தகப்பனார் இரண் டையும் எடைபோட்டுப் பார்த்தார். சொத்தில் முக்கால்வாசி மூத்தவனுக்குப் போகும்; அவன் இறந்தால் அவனுடைய மகனுக்குப் போகும். இரண்டாவது மகனும் தன் மனைவியும் டோ க்கியோவில் பெற்றோருடன் வசித்து அவர்களுக்குப் பணிவிடை செய்யவேண்டும்; ஆனால் குடும்பச் சொத்து கிடைக்காது. இது நியாயமா. தகப்பன் தான் நல்ல சொத்தும் பிரபலமும் வாய்ந்தவராச்சே. யோசித்துப் பார்க்கிறோம்... அந்தஸ்து விவர அறிவிப்பு ஸ்தாபனத்திற்கு மனுச் செய்து கொண்டார்கள்; தகவல்கள் வருமாறு; குடும்ப சொத்து ஐந்து லட்சம். உறவினரும் நல்ல செயலில் இருக்கிறார்கள்; வைப்பாட்டியோ, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்துவரும் குடும்ப வியாதியோ கிடையாது. பையனும் யோக்கியமாகவே நடந்து வந்திருக்கிறான். எல்லாம் விரும்பத்தக்கதாகத்தான் இருந்தது. அந்த ஐந்து லட்சத்தில் எவ்வளவு இந்தப் பையனுக்குக் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினார்கள்; அதைப்பற்றிக் கேட்பது மரியாதையா? எல்லா அம்சங்களிலும் பூரணமாகத் திருப்தி ஏற்படுகிறது என்றால் நடக்கிற காரியமா? மகள் கலியாணமாகும் பருவத்தை இப்பவும் பரிசீலனையிலேயே கழித்துவிடுவதா? நான் கையும் யோசித்துவிட்டு வாலிபனைப் பார்க்க வேணும் என்றனர்; அதன் அர்த்தம் என்ன; மகளை அவனுக்குக் கலியாணம் செய்து கொடுக்கத் தயார் என்பதுதான். எதிர்த்தரப்பிலிருந்தும் 'சரி' என்றே பதில் வந்தது.

புதுமைப்பித்தன் மூலம் மேலும் புத்தகங்கள்

72
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
0.0
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.
1

1. ஆஷாட பூதி

2 January 2024
0
0
0

மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால

2

2. ஆட்டுக் குட்டிதான்

2 January 2024
0
0
0

ஜேம்ஸ்ஹானலி – இங்கிலாந்து  செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உற

3

3. அம்மா

2 January 2024
0
0
0

கே. பாயில்  பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வ

4

4. அந்தப் பையன்

3 January 2024
0
0
0

மாக்ஸிம் கார்க்கி  இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில் லை. அவ்வளவு எளிதானது. நான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே

5

5. அஷ்டமாசித்தி

3 January 2024
0
0
0

டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள் ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந

6

6. ஆசிரியர் ஆராய்ச்சி

3 January 2024
0
0
0

ஸின்கிளேர் லூயிஸ்  டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று

7

7. அதிகாலை ( பகுதி 1)

3 January 2024
0
0
0

நிக்கோலாய் டிக்கனோவ்  1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷ

8

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024
0
0
0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். வி

9

7. அதிகாலை ( பகுதி 3)

3 January 2024
0
0
0

"பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன் னைக் காட்டிக்கொடுப்பேன்; என் னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்ப

10

7. அதிகாலை (பகுதி 4)

3 January 2024
0
0
0

"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவ

11

8. பலி

4 January 2024
1
0
0

ஜோஸப் நையரு – ஹங்கேரி  மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல் லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்ப

12

9. சித்திரவதை

4 January 2024
1
0
0

எர்னஸ்ட் டாலர்  "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம

13

10. டைமன் கண்ட உண்மை

4 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர் (1564-1616)  ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும்

14

11. இனி

4 January 2024
1
0
0

இ. எம். டிலாபீல்ட்  இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்

15

12. இந்தப் பல் விவகாரம்

4 January 2024
1
0
0

மைக்கேல் ஜோஷெங்கோ – ருஷ்யா  எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம்.

16

13. இஷ்ட சித்தி ( பகுதி 1)

4 January 2024
1
0
0

ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி  முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எ

17

13. இஷ்ட சித்தி ( பகுதி 2)

4 January 2024
1
0
0

"பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்! "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்

18

14. காதல் கதை

5 January 2024
1
0
0

வில்லியம் ஸரோயன்  "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான். (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது

19

15. கலப்பு மணம்

5 January 2024
1
0
0

கிரேஸியா டெலாடா – இத்தாலி  அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்ட

20

16. கனவு (பகுதி 1)

5 January 2024
1
0
0

ஐவான் டர்ஜனீப் – ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலே

21

16. கனவு ( பகுதி 2)

5 January 2024
1
0
0

8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நா

22

17. காரையில் கண்ட முகம்

5 January 2024
1
0
0

இ.வி. லூக்காஸ் – இங்கிலாந்து  நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என் னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்ற

23

18. கிழவி

5 January 2024
1
0
0

ஸெல்மாலேகர்லாப் – ஸ்வீடன்  மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை

24

19. லதீபா

6 January 2024
0
0
0

மோஷி ஸ்மிலான் ஸ்கி  "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது." இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். ச

25

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024
0
0
0

1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங

26

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்(பகுதி 2)

6 January 2024
0
0
0

5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்த

27

21. மணிமந்திரத் தீவு

6 January 2024
0
0
0

ஷேக்ஸ்பியர்  நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச்

28

22. மணியோசை

6 January 2024
0
0
0

ஜப்பான்  "நான் சாவதற்குப் பயப்படவில் லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" வேதனை

29

23. மார்க்ஹீம்

6 January 2024
0
0
0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து  "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறு

30

24. மிளிஸ்

8 January 2024
0
0
0

பிரட் ஹார்ட் – அமெரிக்கா  ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இரு

31

25. முதலும் முடிவும் ( பகுதி 1)

8 January 2024
0
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த,

32

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024
0
0
0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்

33

26. நாடகக்காரி

8 January 2024
0
0
0

ஆண்டன் ஷெக்காவ் – ருஷியா  அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில் லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்

34

27. நட்சத்திர இளவரசி

8 January 2024
0
0
0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்  "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவி

35

28. ஓம் சாந்தி! சாந்தி!

8 January 2024
1
0
0

எலியா எஹ்ரன் பர்க்  (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன் னைப் பலிகொடுக்கத் தயாரானா

36

29. ஒரு கட்டுக்கதை

9 January 2024
0
0
0

பிரான்ஸ் காப்கா – ஆஸ்திரியா  எலி சொல்லுகிறது... "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே

37

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024
0
0
0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ்  மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை ந

38

31. பைத்தியக்காரி

9 January 2024
0
0
0

மொப்பஸான் – பிரான்ஸ்  "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண் டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என

39

32. பளிங்குச் சிலை

9 January 2024
0
0
0

வாலரி புருஸ்ஸாப் வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக

40

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024
0
0
0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்  "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன்

41

33. பால்தஸார்( பகுதி 2)

9 January 2024
0
0
0

ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண் டைக் கொடுத்தனர். ப

42

34. பொய்

9 January 2024
0
0
0

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா  "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள்

43

35. பூச்சாண்டியின் மகள்

10 January 2024
0
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து  அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் வ

44

36. ராஜ்ய உபாதை( பகுதி 1)

10 January 2024
0
0
0

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)  ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப

45

ராஜ்ய உபாதை( பகுதி 2)

10 January 2024
0
0
0

"அந்தக் கடிதம்..."  "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்ட

46

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024
0
0
0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா  எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூற

47

38. சாராயப் பீப்பாய்

10 January 2024
0
0
0

எட்கார் அல்லன் போ – அமெரிக்கா  அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என் னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன்

48

39. சகோதரர்கள்

10 January 2024
0
0
0

யூஜோ யாம மோட்டோ – ஜப்பான்  'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில் லை; நான் பிடுங்க

49

40. சமத்துவம்

10 January 2024
0
0
0

ஒரு ருஷிய ஆசிரியர்  நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் த

50

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024
0
0
0

ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் த

51

42. சிரித்த முகக்காரன்

11 January 2024
0
0
0

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லே

52

43. சூனியக்காரி

11 January 2024
1
0
0

ரோனால்டு ஆக்டன் – இங்கிலாந்து அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல

53

44. சுவரில் வழி

11 January 2024
0
0
0

ஆர். முரே கில்கிரைஸ்– இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று

54

45. தாயில்லாக் குழந்தைகள்

11 January 2024
0
0
0

பிரான்ஸிஸ் பெல்லர்பி – இங்கிலாந்து வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் ம

55

46. தையல் மிஷின்

11 January 2024
0
0
0

இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

56

47. தந்தை மகற்காற்றும் உதவி

11 January 2024
1
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்

57

48. தெய்வம் கொடுத்த வரம்

12 January 2024
1
0
0

பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் – ஸ்வீடன்  இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட்

58

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024
0
0
0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து  லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது.

59

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024
0
0
0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புற

60

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024
0
0
0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பய

61

50. துன்பத்திற்கு மாற்று

12 January 2024
1
0
0

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ – இத்தாலி  நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத்

62

51. துறவி

12 January 2024
0
0
0

ராபர்ட் நியூமான் – ஜெர்மனி  "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான். அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியி

63

52. உயிர் ஆசை (பகுதி 1)

13 January 2024
1
0
0

ஜாக் லண்டன் – அமெரிக்கா  அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்

64

52. உயிர் ஆசை (பகுதி 2)

13 January 2024
1
0
0

நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினா

65

52. உயிர் ஆசை (பகுதி 3)

13 January 2024
1
0
0

பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியு

66

53. வீடு திரும்பல்

13 January 2024
1
0
0

பீட்டர் எக் – நார்வே  மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுத

67

54. ஏ படகுக்காரா!

13 January 2024
1
0
0

மிக்கெய்ல் ஷோலொகோவ்  அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில் லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான்

68

55. யாத்திரை

13 January 2024
1
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை

69

56. எமனை ஏமாற்ற...

13 January 2024
1
0
0

மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள

70

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

13 January 2024
1
0
0

தாமஸ் வுல்ப் – அமெரிக்கா  ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத

71

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்(பகுதி 2)

13 January 2024
1
0
0

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்

72

58. தர்ம தேவதையின் துரும்பு

13 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர்  குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, தி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்