shabd-logo

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024

0 பார்த்தது 0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பயம் தட்டியது. எப்பொழுதும் அவனை விட்டு அகலாத வழக்கமாயுள்ள விவேகம், அபாயத்தின் எல் லைக் கோடுகளை அவன் அணுகிவிட்டான் என்பதைத் தெளிவாக எடுத்து உணர்த்தியது; ஆனால் அதைப் பற்றியே மனத்தைக் குழப்பி அங்கலாய்த்துக் கொண்டிருக்க அவன் வெகுவாக விரும்பவில் லை. தன் தொழிற் பெருமைக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணிப் பிரமாதமாகக் கவலை கொண்டான். அவன் அவமானப் படுத்தப்பட்டான். உயிர் தப்பியது அதிர்ஷ்டவசந்தான். ஆனால் சீர்தூக்கிப் பார்க்கும்பொழுது, அவமானம் அதைவிட எத்தனையோ மடங்கு பிரமாதமாகத் தெரிந்தது அவனுக்கு. அவனை அவமதித்தது இங்கிலீஷ்காரர்கள். இவ்விபரத்தை அவன் மறந்துவிட விரும்பினான். சகிக்கக் கூடாத சம்பவங்கள் டப்ளினில் நடந்து விட்டன; கூடிய சீக்கிரத்தில் அதை விட்டுப் புறப்பட்டால் போதும் என்று ஆகிவிட்டது அவனுக்கு. இனி திரும்பவும் வரவே கூடாது. மறுநாட் காலை தெருக்களில் செல்லும்போதெல்லாம் சர்வ ஜாக்கிரதையாக ஜனநெருக்கடி அதிகமாக உள்ள பாதைகள் வழியாகவே சென்றான். கிராப்டன் தெருவிலுள்ள ஒரு ஹோட்டலில் காப்பி; வழிநெடுக மிகுந்த உற்சாகத்துடன் செல்லும் ஜனக் கூட்டத்தைக் கண்டால் ஒரு வெறுப்புற்ற பார்வை; மத்தியானம் சாப்பிடும்பொழுது அவன் குடியிருந்த வீட்டுக்காரி, முந்திய இரவு நடந்த கலாட்டாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்புறம், அதிகாலையிலிருந்து வரப்போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்த மழை. பரீலி எங்கும் போகாமல் வீட்டிலேயே உட்கார்ந்து வாசித்துக் கொண்டும், கடிதங்கள் எழுதியும், பொழுதைக் கழித்தான். விலாசதாரர்களுக்கெல்லாம், சங்கேதமாக, இக்கலகத்தைப்பற்றிக் குறிப்பிட்டான். 'காகிதத்தில் எழுதிவைப்பது அபாயம்; நேரில் விஸ்தாரமாகச் சொல்லுவது நலம்' என்று சூசிப்பித்தான். மாலை ஆறு மணி சுமாருக்கு மழை ஓய்ந்தது. மேகத்திரை சிறிது விலகி, மேகத்தால் கழுவப்பட்ட நிர்மலமான நிலவொளியைச் சிறிது காண்பித்தது. வானத்தில் மேகப்பிளவு அகன்றது; உள்ளே சிவந்தது; நகரத்தின் சிகரங்களில் முட்டிக் கொள்ளுமோ என்ற நிலையில் காணப்பட்ட சூரியன், தன் கடைசிச் சந்தர்ப்பத்தை உபயோகித்து வான வீதியில் தன் ஒளிச் சொத்துக்களை எல்லாம் அப்படியே அள்ளிக் கொட்டினான். பளிச்சென்று சுவரில் விழுந்த ஒளித் துண்டம் பரீலியை எழுப்பியது. ஜன்னல் கதவை விரியத் திறந்து, சல்லாப்புடவை மாதிரி முகத்தில் தழுவும் மந்தமாருதத்தைப் பருகினான். வெளியே உலாவிவிட்டு, தியேட்டர் பக்கத்தில் எங்காவது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டால் போகிறது என்று தீர்மானித்து, அவசர அவசரமாக ஹாட்டையும் கோட்டையும் எடுத்துக்கொண்டு, படிக்கட்டுகளில் இறங்கியவாறே வீட்டுக்காரியிடம் வெளியே போவதாகச் சொல்லிவிட்டு, கதவைப் படார் என்று அடைத்துக் கொண்டு புறப்பட்டான். வீட்டுக்காரியின் புலம்பல் அவன் காதில் விழவில் லை. ஏதோ ஓர் உணர்ச்சி அவனை ஆற்றங்கரைப் பக்கம் தள்ளிக்கொண்டு சென்றது. நடைபாதையில் கல் பதித்த இறங்கு துறைப் பக்கம் அணுகியதும், வெறும் ஆனந்தத்தால் அவனது சுவாசம் தடைப்பட்டது. மறுபடியும் அதே மஹேந்திர ஜாலம்! வெறும் அழுக்கும் சகதியும் நிறைந்த லிப்பி நதி ஒரே ஒளிப்பாதையாக மாறிக் கிடந்தது. மற்றும் ஓர் அற்புதமும் நிகழ்ந்தது. எங்கிருந்தோ திடீரென்று பல குரல்கள் குழம்பிய கோஷம் வானத்தைப் பிளந்தது; மறுபடியும் வானைப் பிளக்கும் அந்தக் கோஷம்; இப்பொழுது வெற்றி முழக்கமாகி, சூரியனின் கடைசிக் கிரணத்துடன், அது கவிந்து மூடும் மேகப் படலத்தைக் கிழித்துத் துருவும் வெற்றி முயற்சியுடன் லயித்தது. அப்புறம் பக்கத்துத் தெருக்களிலிருந்து மடைதிறந்த வெள்ளம்போல மனிதக் கும்பல்; ஓர் எதிர்க்க முடியாத சக்தியால் உந்தித் தள்ளப்பட்டதுபோல் வந்து இறங்கு துறைத் தளவரிசைகள் மீது பரந்து நிறைந்தது. ஜனங்கள் பக்கத்துத் தெருக்களிலிருந்து விழுந்தடித்து ஓடி வந்தனர்; கும்பலாகவும், தனித்தனியாகவும், தள்ளாடிக் கொண்டும், பின்னிருப்போர் தள்ள முன்னிருந்தவர்கள் தடுமாறவும் ஓடி வந்தனர். ஆனால் துறையில் முன்னேறி ஒழுங்காகக் கால் வைத்து நடந்தனர். சிறிது நேரத்திற்கு முன் குழம்பிய வெறும் ஜனக்கும்பலாக ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு ஓடிவந்த கூட்டம், வெற்றியின் அணிவகுப்பாக மாறியது. அதே உணர்ச்சி அவர்களைத் தூண்ட, அவர்களது லயமற்ற கூச்சல் ஒழுங்குபட்டு ஐக்கியமாக, ஒரு பயங்கரத்துடன் ஓங்கியது. ஆண்களும் பெண்களுமாக ஐந்நூறு பேர், இறங்கு துறைப் பாதையின் வழியாக, தங்கள் எதிர்ப்பின் கீதமான படை வீரன் பாட்டைக் கோஷித்துக் கொண்டு சென்றனர். பாட்டு, சமுத்திர கோஷம்போல உயர்ந்து பக்கத்துச் சுவர்க் கூரைகளைத் தாக்கி, நாதக் கனல்களாகச் சிதறி, ஒலி ஒளி இவற்றின் பேய்க் கனவுகளாக உதிர்ந்தன. பரீலி தன் னையும் மீறி ஓலமிட்டான். பக்கத்துச் சுவரை எட்டிப் பார்த்தான். அவன் உள்ளத்தில் ஏதோ ஒன்று கட்டுக்களை மீறியது. கண்களில் நீர் சுரந்தது. கோஷிக்க முயன்றான்; பாட முயற்சித்தான். கோஷ்டியின் முதல் அணி இவனண் டை வந்தது. ஒரு பெண்; தலை மயிர் குலைந்து ஒரு கண் ணை மறைத்தது. வியர்வையால் மின்னியது. அவன் பாடும்பொழுது இவன் கையை எட்டிப் பிடித்தாள். இவனும் அணிவகுப்பில் கலந்தான். மகிழ்ச்சியின் - புகழின் - ஒரு பகுதியாக இழுத்துச் செல்லப்பட்டான், அவன் இதயம் உயர்ந்தது; இதுவரை நாடக அரங்க வெற்றி அளிக்காத ஓர் குதூகலத்தின் எக்களிப்பின் உச்ச நாடியை எட்டியது. பரீலி அரை மைல் வரை அந்த ஊர்வலத்தோடு இழுத்துச் செல்லப்பட்டான். மாலையில் இருக்கும் வேலை நினைவுக்கு வரவே கையை இழுத்துக்கொண்டு ஒரு பக்கத்துச் சந்தில் நழுவினான். 'எங்கிருக்கிறோம்' என்பதை உணர்ந்து கொள்ள அவனுக்குச் சிறிது நேரமாயிற்று. அவனது உள்ளம் இருந்த நிலையில் அதைப்பற்றி அவன் அவ்வளவு பிரமாதமாகக் கவலை கொள்ளவில் லை. எப்படியானாலும் உத்தேசமாக நதிக்கு நேராக, அது செல்லும் திக்கில் சென்றால் வழி பிடிபட்டுவிடும் என்பது நிச்சயம். சாப்பிடக் கூட முடியவில் லை; அவ்வளவு உணர்ச்சி வேகம். அவசர அவசரமாகச் சாப்பிட்டான். சமீபத்தில் தான் பங்கெடுத்துக்கொண்ட சம்பவங்களை நினைக்க உணர்ச்சித் தீ மூண்டெழுந்தது. அவற்றைப் பற்றி நினைக்கும்பொழுது மூச்சுத் திணறியது; நாடி அதிர்ந்தது. என்ன நடந்தது என்று அவனுக்கே இன்னும் தெரியவில் லை. ஆனால், இதுவரை தான் தன் னைத் தெரிந்து கொள்ளவில் லை என்பதை உணர்ந்தான். அவனுள் ஏதோ விடுதலை பெற்றது - அல்ல - ஏதோ அவனை விடுவித்தது. அவனது உண் மைச் சொரூபம் அன்று வெடித்துக் கொண்டு உருப்பெற்றது. இந்த உணர்ச்சியை அநுபவிக்கும்பொழுதே, இதைப்பற்றித் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பொழுதே, அவனது இரண்டாவது தன் மை, நாடக அரங்கில் தன் ஒவ்வொரு இயக்கத்தையும் அதீதமாக நின்று கவனிக்கும் தன் னை, அவனது உள்ளத்தில் ஒரு மூலையில் இருந்து அபிப்பிராயம் சொல்ல ஆரம்பித்து விட்டது. அவன் - அதாவது, அத்தன் மை - பால் பரீலி தனது தேசீய உணர்ச்சியையும், தான் பிறந்த நாட்டையும் மறுபடியும் கண்டுபிடிப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தது. பரீலி தன் வாழ்க்கையிலேயே முதன் முதலாக, இந்த 'மெய்க்காப்பாளனை' எதிர்த்து, தன் இதய பூர்வமான உணர்ச்சிக்காகவும், தன் உரிமைக்காகவும், வெறும் தனி மனித ஜீவியத்திற்காகவும் போராடினான். 'இல்லவே இல் லை' என்று சொல்லிக் குனிந்த வண்ணம் முன்னேறி நடந்தான். எதையும் இரக்கமற்ற சிந்தையுடன் மேற்பார்வை செய்யும் தொழிலையே இயற்கையாகக் கொண்ட பால் பரீலியின் நடிகத் தன் மை, அவனது உள்ளத்தில் புதிதாகப் பிறந்த தேச பக்தியைக் கேலி செய்து, இலகுவில் கொன்று விட முடியும். ஆனால், அதை எதிர்த்துப் போராடினான் பால் பரீலி. அவன் உள்ளத்தில் நடைபெற்ற போராட்டம் ஏக்கத்தையே வளர்த்தது. வானத்தை அளாவிய இரவின் குளிர் அவனது உள்ளத்தைக் கவ்வியது. "உன் உணர்ச்சி இதுவரை எதிலும் நிலைத்திருந்ததில் லை, நிலைத்திருக்கவும் செய்யாது; உனக்கு இல்லாத தன் மையை ஏன் இருப்பதாகப் பாவனை செய்கிறாய்? உனது தொழில் நடிப்பு; கடைசி வரை அதோடு இருந்துகொள், போதும்!" என்றது அந்த விகாரப் புத்தி. உள்ளத்தின் உணர்ச்சி வேகத்தைக் குளிரவைக்க முயலும் இந்த விபரீத விவேகத்தை அமுக்கிக் கொல்ல மல்லாடிக்கொண்டு நடக்கும் பரீலி ஒரு மூலையில் திரும்பினான். சோல்ஜர்களும் தனித் தனியாக அங்கொருவர் இங்கொருவராக, ரஸ்தாவின் பாதசாரித் தளங்களில் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் நிற்கின்றனர் என்ற நினைப்பு எழாமலே, பரீலி, முன் வந்த வழியில் தொடர்ந்து நடந்தான். ஆனால் அவர்கள் இருக்கும் தெருக்களை விலகிச் சென்றான். அடுத்தபடி அவன் செல்ல விரும்பிய பாதை ஒரு சிறு சந்து. வழியில் வெளிச்சம் இல் லை. ஆனால் சந்தின் மறுகோடி நன்றாகக் கண்ணுக்குத் தெரிகிறது. தைரியமாக உள்ளே நுழைந்தான். வீட்டுக் கூரைகள் சந்தின் மேல் கவிந்து அமுக்க முயல்வது போல நின்றன. பாதிவழி சென்றதும், 'ஏண்டா இந்த வழியாக வந்தோம்' என்றாகிவிட்டது பரீலிக்கு! நின்றான். வீடுகள் அவன் உள்ளத்தின் ஓட்டங்களுக்குச் செவி சாய்ப்பது போல் நின்றன. திடீரென்று மறுபடியும் நின்றான். கீழ்த் தொண் டையில் பேசும் மனிதக் குரல்களின் குழம்பிய ஒலி - இரண்டு பேர் - ஆணும்பெண்ணும். சுய திருப்தியைக் காட்டும் மனிதனின் கனத்த குரல். அப்புறம் மூச்சுத் திணறிய பெண் குரல் - அதில் பயம் தொனித்தது. இவ்விருவரும் அவனுக்கு முன்னால், இருவீடுகளுக்கிடையில் ஒரு இடத்தில் நின்றிருந்தனர். "இல் லை ஐயா! அப்படி நான் செய்ததே இல் லை! ஆணைப்படிக்கி..." "ஸ்! சத்தம் போடாதே!" பரீலி பதுங்கிப் பதுங்கி முன்னால் சென்றான். அந்த இருட்டில் என்ன நடக்கிறது என்று கடைசியாக அவன் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. ஒரு சோல்ஜர் ஒரு பெண் ணைச் சுவரோடு மடக்கி நிறுத்தியிருந்தான். அவனது ரிவால்வர் அவளது நெஞ்சில் குத்தியது. அவள் பயப்பிராந்தியால் பேச்சற்று, சுவரோடு சுவராக ஒண்டிப்போய் நின்றாள். பரீலியின் ஜாக்கிரதா புத்தி அவனை எச்சரித்தது. "அப்படியா! என்ன நடக்கிறது பார்!" என்று மனத்தில் சொல்லிக்கொண்டான். அந்த சோல்ஜரோ அவளோ பார்க்கு முன், பரீலி சோல்ஜரின் பின் பக்கமாய் பதுங்கிப் பதுங்கி நெருங்கி விட்டான். அந்தத் தடியன் குரல் கனத்தது. அந்தப் பெண்ணின் முகத்தருகில் முகம் வைத்தது போல நெருங்கி நின்று மெதுவாகப் பேசினான். அவனுக்கு இவன் நெருங்குவது காதில் விழவில் லை. அவனது தசைக் கோளங்கள் இறுகி விம்மின. பரீலி அசையாமல் பதிய வைத்து நின்றான். அந்தப் பெண்ணின் ஒரு அசைவு அவன் கண்களில் விழுந்தது. சோல்ஜரும் அதை கவனித்துவிட்டான். அவன் பேச்சு நின்றது. தலையைத் திருப்பப் போகிறான். அந்த க்ஷணத்தில் பரீலி அவன் மீது பாய்ந்தான். சோல்ஜரின் இறுகிய குரல்வளையில் ஓலமொன்று வெளிவந்தது. பின்புறமாகத் தள்ளாடி வளைந்தான்; பரீலியின் கைகளைப் பிடிக்க முயன்றான். பரீலிக்கு ஆவேசமான எக்களிப்பு மிகுந்த கோபத்தைத் தவிர, எதிரியை வீழ்த்திட வேண்டிய பிளான் ஒன்றும் கிடையாது. எலியைப் பிடித்த நாய் அதை உதறுவது போல அவனை உதறினான். வலக்கையைத் தூக்கி சோல்ஜரின் மூஞ்சியில் ஒரு இறுக்கு இறுக்கினான். சோல்ஜரின் குல்லாய் அப்புறம் போய் விழுந்தது. சோல்ஜர் கத்திக் கொண்டு, முன் பக்கம் குனிந்து, பரீலியைத் தலைக்கு மேல் தூக்கி விட முயன்றான். பரீலியின் உள்ளத்தில் பயம் எழுந்தது. சுவரோடு சுவராக ஒண்டிக்கிடந்த பெண்ணின் பக்கம் தலையைத் திருப்பினான். அவனது கண்களின் வேண்டுகோளை அறிந்து கொண்டு அவள் உதவிக்கு வர முயன்றாள். அவளால் முடியவில் லை. சோல்ஜர் தனது வலது கையைப் பரீலி பக்கம் திருப்பி அவனைச் சுட்டு வீழ்த்த முயன்றான். பயம் பரீலிக்கு பலமளித்தது. கடைசி வலிப்பு மாதிரி தன் முழு பலத்தையும் உபயோகித்து, அந்த சோல்ஜரை அப்படியே அலக்காகத் தூக்கிச் சுவர்ப்புறம் தள்ளினான். அப்பெண் விலகிக் குதித்தாள். பிடிப்பை மாற்றி, பரீலி, சோல்ஜர் தலையை, ஒரு முறை, இரண்டு முறை, மூன்று முறை சுவரில் தன் முழு பலத்தோடும் மோதினான். ரிவால்வர் கையை விட்டு வழுக்கியது; தலையைப் பிடித்த வண்ணம் தரையில் விழுந்தான் சோல்ஜர். புத்தி தெளிவற்றவன் போல, பரீலி விழுந்தவனையே ஒரு கணம் பார்த்து நின்றான். மறு நிமிஷம் அந்த பெண் ணைப் பார்த்து, "ஜல்தி! ஓடு!" என்றான். மேல் போர்வையை இழுத்து மூடிய வண்ணம் அவள் துள்ளிச் சந்தின் வழியாக ஓடினாள். பரீலி அவளைப் பற்றிய நினைவேயில்லாமல் மறு திசையை நோக்கி ஓடினான். சந்தை விட்டுப் பெரிய தெருவுக்கு வந்ததும், இரண்டு பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். ஒருவரும் இல் லை! நல்ல காலம் என்று உள்ளத்தில் மகிழ்ச்சி தட்ட வேகமாக நடக்க ஆரம்பித்தான். அவனது வலது விரல் மணிக்கட்டில் வலிக்க ஆரம்பித்தது. குனிந்து பார்த்தான். கை விரல் முழுதும், என்ன ஆச்சரியம், ஒரே ரத்தக்களரி. அங்கு நின்ற லாந்தல் கம்பத்தடியில் நின்று வெளிச்சத்தில் காயத்தைக் கவனிக்க ஆரம்பித்தான். திடீரென விறைத்து நின்றான். பூட்ஸ் சப்தம்; மனிதக் குரல். மற்றொரு சந்திலிருந்து தன்வசம் அகப்பட்டவனின் இரு சகபாடிகள் தன் னை நோக்கி வருவதைக் கண்டான். காயம்பட்ட கையைப் பையில் விட்டு மறைத்துக்கொண்டு, அவர்களை நோக்கி நடந்தான். முதலில் குமட்டலாக எழுந்த பயம், எக்களிப்பின் கூர்மை பெற்றது. "நீ அபாயத்தில் இருக்கிறாய், அபாயம்; - நிஜமான அபாயம்! இது நாடக அரங்கமல்ல; இல் லை. இது உண் மை; கடைசியாக நிஜம்; நிஜமான உணர்ச்சி; அவர்கள் உன் னை நிறுத்தினால், அடிபட்டவன் பிரக்ஞை பெற்று உதவிக்குக் கூக்குரலிட்டால், உனது அடிபட்ட விரல்களைக் கண்டால்..." அவர்கள் இருவரும் அவனைக் கடந்து சென்றுவிட்டனர். ஒரு சந்தேகமான, சண் டைக்காரப் பார்வை; ஆனால் ஒரு வார்த்தைகூடப் பேசவில் லை. அவர்கள் போய்விட்டனர். இனி அபாயமில் லை. வேகமாகச் சென்றுகொண்டே திரும்பிப் பார்த்தான். ஒரு மூலை திரும்பியதும் ஓட ஆரம்பித்தான். பயம் மறுபடியும் அவனைக் கவ்வியது. ஆனால் அவன் கவலை கொள்ளவில் லை. அவன் அதைச் செய்து விட்டான். வேஷம் போடுவதற்காக, மேஜையின் முன் சென்று உட்கார்ந்தான். அவனுடைய வாய் அந்தத் தேசீய கீதத்தை - படைவீரன் பாட்டை - முணுமுணுக்க ஆரம்பித்தது.

புதுமைப்பித்தன் மூலம் மேலும் புத்தகங்கள்

72
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
0.0
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.
1

1. ஆஷாட பூதி

2 January 2024
0
0
0

மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால

2

2. ஆட்டுக் குட்டிதான்

2 January 2024
0
0
0

ஜேம்ஸ்ஹானலி – இங்கிலாந்து  செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உற

3

3. அம்மா

2 January 2024
0
0
0

கே. பாயில்  பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வ

4

4. அந்தப் பையன்

3 January 2024
0
0
0

மாக்ஸிம் கார்க்கி  இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில் லை. அவ்வளவு எளிதானது. நான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே

5

5. அஷ்டமாசித்தி

3 January 2024
0
0
0

டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள் ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந

6

6. ஆசிரியர் ஆராய்ச்சி

3 January 2024
0
0
0

ஸின்கிளேர் லூயிஸ்  டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று

7

7. அதிகாலை ( பகுதி 1)

3 January 2024
0
0
0

நிக்கோலாய் டிக்கனோவ்  1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷ

8

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024
0
0
0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். வி

9

7. அதிகாலை ( பகுதி 3)

3 January 2024
0
0
0

"பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன் னைக் காட்டிக்கொடுப்பேன்; என் னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்ப

10

7. அதிகாலை (பகுதி 4)

3 January 2024
0
0
0

"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவ

11

8. பலி

4 January 2024
1
0
0

ஜோஸப் நையரு – ஹங்கேரி  மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல் லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்ப

12

9. சித்திரவதை

4 January 2024
1
0
0

எர்னஸ்ட் டாலர்  "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம

13

10. டைமன் கண்ட உண்மை

4 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர் (1564-1616)  ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும்

14

11. இனி

4 January 2024
1
0
0

இ. எம். டிலாபீல்ட்  இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்

15

12. இந்தப் பல் விவகாரம்

4 January 2024
1
0
0

மைக்கேல் ஜோஷெங்கோ – ருஷ்யா  எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம்.

16

13. இஷ்ட சித்தி ( பகுதி 1)

4 January 2024
1
0
0

ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி  முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எ

17

13. இஷ்ட சித்தி ( பகுதி 2)

4 January 2024
1
0
0

"பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்! "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்

18

14. காதல் கதை

5 January 2024
1
0
0

வில்லியம் ஸரோயன்  "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான். (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது

19

15. கலப்பு மணம்

5 January 2024
1
0
0

கிரேஸியா டெலாடா – இத்தாலி  அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்ட

20

16. கனவு (பகுதி 1)

5 January 2024
1
0
0

ஐவான் டர்ஜனீப் – ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலே

21

16. கனவு ( பகுதி 2)

5 January 2024
1
0
0

8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நா

22

17. காரையில் கண்ட முகம்

5 January 2024
1
0
0

இ.வி. லூக்காஸ் – இங்கிலாந்து  நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என் னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்ற

23

18. கிழவி

5 January 2024
1
0
0

ஸெல்மாலேகர்லாப் – ஸ்வீடன்  மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை

24

19. லதீபா

6 January 2024
0
0
0

மோஷி ஸ்மிலான் ஸ்கி  "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது." இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். ச

25

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024
0
0
0

1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங

26

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்(பகுதி 2)

6 January 2024
0
0
0

5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்த

27

21. மணிமந்திரத் தீவு

6 January 2024
0
0
0

ஷேக்ஸ்பியர்  நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச்

28

22. மணியோசை

6 January 2024
0
0
0

ஜப்பான்  "நான் சாவதற்குப் பயப்படவில் லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" வேதனை

29

23. மார்க்ஹீம்

6 January 2024
0
0
0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து  "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறு

30

24. மிளிஸ்

8 January 2024
0
0
0

பிரட் ஹார்ட் – அமெரிக்கா  ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இரு

31

25. முதலும் முடிவும் ( பகுதி 1)

8 January 2024
0
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த,

32

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024
0
0
0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்

33

26. நாடகக்காரி

8 January 2024
0
0
0

ஆண்டன் ஷெக்காவ் – ருஷியா  அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில் லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்

34

27. நட்சத்திர இளவரசி

8 January 2024
0
0
0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்  "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவி

35

28. ஓம் சாந்தி! சாந்தி!

8 January 2024
1
0
0

எலியா எஹ்ரன் பர்க்  (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன் னைப் பலிகொடுக்கத் தயாரானா

36

29. ஒரு கட்டுக்கதை

9 January 2024
0
0
0

பிரான்ஸ் காப்கா – ஆஸ்திரியா  எலி சொல்லுகிறது... "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே

37

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024
0
0
0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ்  மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை ந

38

31. பைத்தியக்காரி

9 January 2024
0
0
0

மொப்பஸான் – பிரான்ஸ்  "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண் டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என

39

32. பளிங்குச் சிலை

9 January 2024
0
0
0

வாலரி புருஸ்ஸாப் வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக

40

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024
0
0
0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்  "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன்

41

33. பால்தஸார்( பகுதி 2)

9 January 2024
0
0
0

ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண் டைக் கொடுத்தனர். ப

42

34. பொய்

9 January 2024
0
0
0

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா  "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள்

43

35. பூச்சாண்டியின் மகள்

10 January 2024
0
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து  அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் வ

44

36. ராஜ்ய உபாதை( பகுதி 1)

10 January 2024
0
0
0

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)  ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப

45

ராஜ்ய உபாதை( பகுதி 2)

10 January 2024
0
0
0

"அந்தக் கடிதம்..."  "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்ட

46

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024
0
0
0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா  எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூற

47

38. சாராயப் பீப்பாய்

10 January 2024
0
0
0

எட்கார் அல்லன் போ – அமெரிக்கா  அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என் னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன்

48

39. சகோதரர்கள்

10 January 2024
0
0
0

யூஜோ யாம மோட்டோ – ஜப்பான்  'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில் லை; நான் பிடுங்க

49

40. சமத்துவம்

10 January 2024
0
0
0

ஒரு ருஷிய ஆசிரியர்  நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் த

50

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024
0
0
0

ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் த

51

42. சிரித்த முகக்காரன்

11 January 2024
0
0
0

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லே

52

43. சூனியக்காரி

11 January 2024
1
0
0

ரோனால்டு ஆக்டன் – இங்கிலாந்து அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல

53

44. சுவரில் வழி

11 January 2024
0
0
0

ஆர். முரே கில்கிரைஸ்– இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று

54

45. தாயில்லாக் குழந்தைகள்

11 January 2024
0
0
0

பிரான்ஸிஸ் பெல்லர்பி – இங்கிலாந்து வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் ம

55

46. தையல் மிஷின்

11 January 2024
0
0
0

இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

56

47. தந்தை மகற்காற்றும் உதவி

11 January 2024
1
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்

57

48. தெய்வம் கொடுத்த வரம்

12 January 2024
1
0
0

பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் – ஸ்வீடன்  இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட்

58

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024
0
0
0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து  லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது.

59

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024
0
0
0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புற

60

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024
0
0
0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பய

61

50. துன்பத்திற்கு மாற்று

12 January 2024
1
0
0

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ – இத்தாலி  நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத்

62

51. துறவி

12 January 2024
0
0
0

ராபர்ட் நியூமான் – ஜெர்மனி  "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான். அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியி

63

52. உயிர் ஆசை (பகுதி 1)

13 January 2024
1
0
0

ஜாக் லண்டன் – அமெரிக்கா  அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்

64

52. உயிர் ஆசை (பகுதி 2)

13 January 2024
1
0
0

நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினா

65

52. உயிர் ஆசை (பகுதி 3)

13 January 2024
1
0
0

பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியு

66

53. வீடு திரும்பல்

13 January 2024
1
0
0

பீட்டர் எக் – நார்வே  மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுத

67

54. ஏ படகுக்காரா!

13 January 2024
1
0
0

மிக்கெய்ல் ஷோலொகோவ்  அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில் லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான்

68

55. யாத்திரை

13 January 2024
1
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை

69

56. எமனை ஏமாற்ற...

13 January 2024
1
0
0

மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள

70

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

13 January 2024
1
0
0

தாமஸ் வுல்ப் – அமெரிக்கா  ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத

71

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்(பகுதி 2)

13 January 2024
1
0
0

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்

72

58. தர்ம தேவதையின் துரும்பு

13 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர்  குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, தி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்