shabd-logo

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024

0 பார்த்தது 0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புறம் லண்டன்; அங்கு வந்தவுடன் புகழ் இன்னும் பன்மடங்கு பெருகி ஓர் உறுதியான அஸ்திவாரத்தில் அமைந்தது. ஏனென்றால் அவனுடைய ஹாஸ்ய ஐரிஷ் வெய்ட்டர் (வேலைக்காரன்) நடிப்பை லண்டன் ஒரு வருஷம் முழுவதும் ஒரு நாள் விடாது சளைக்காமல் பார்த்தது. பிறகு நெடுநாள் நடைபெற்ற நீண்ட சம்பாஷணைகளுக்கப்புறம் டப்ளினில் நடிக்க ஒப்புக் கொண்டு வந்திருக்கிறான். தற்போதிருக்கும் இலகுவான வாழ்க்கை நிலையை இயற்கையாகப் பரீலியின் மனது நினைத்து அப்படியே சுழல ஆரம்பித்து விட்டது. அவன் சுதேசத்திற்குத் திரும்பும்பொழுது, ஏதோ நன் மை இயற்றியதால் அடையும் தற்பெருமையுடன் கலந்த மகிழ்ச்சியைப் பெற்றிருந்தான். பாவனையொன்றுமில் லை. தானும் அயர்லாந்திற்காக ஏதோ நல்ல சேவை செய்திருப்பதாக நினைத்தான். பல வருஷங்களாகத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும் நாஸூக் தெரியாத ஒரு கட்சி அவளுக்கு (அயர்லாந்துக்கு) எப்பொழுதும் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால், பரீலி, தனது சொந்த விஷயங்கள் பலவற்றைத் தியாகம் செய்து, பொதுமக்களுக்கு மனக் கசப்பு ஏற்படா வண்ணம், அவர்கள் மனத்தில் அயர்லாந்தைப் பற்றி இனிமையான எண்ணம் நிரந்தரமாக இருந்து வரும்படியாகச் சலியாது உழைத்து வந்திருக்கின்றான். ஈஸ்டர் புரட்சி, பதுங்கித் தாக்கல்... இப்பொழுது! இங்கு வந்த பிறகும் அந்தச் சிறுபான் மைக் கட்சியின் இடைவிடாத தொந்தரவுகளினால் தியேட்டருக்கு எவ்வளவு நஷ்டம்! பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே வீட்டுக்குப் போக வேண்டும் என்ற கட்டுப்பாடு. தெருக்களில் இங்கிலீஷ் சோல்ஜர்கள் நிறைந்த லாரிகளின் ஆதிக்கம். அந்த சோல்ஜர்களில் ஒருவன் நேற்று முந்திய நாள் இரவு, மரியாதையாக, ஆனால் உறுதியாக, அவனை வீடுவரையிலும் கொண்டு விட்டுச் சென்றான். அப்புறம், இப்பொழுது! அவமதிப்பின் சிகரமாக இருக்கிறதே! தன் னை நடிக்கும்படி பிரத்யேகமாக வரவழைத்துவிட்டு, அதற்காகத் தான் அமைதியாகப் போகும் அந்தத் தெருவிலா வெடி குண் டை எறிவது! நிலைக்கண்ணாடியின் முன்பு சாய்ந்து, கண் ஓரத்தில் வயோதிகத் தன் மையைக் காட்டும் காலத்தின் கீறல்களை வர்ண மையினால் தீட்டிக் கொண்டே, "அடுத்த முறை இவர்கள் என் னை அழைத்தால், ஏமாந்து போகவேண்டாம் என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்டான். எத்தனை பிரபலஸ்தர்கள், தாய்நாட்டின் அசட்டுத் தனங்களைச் சகியாது, அயர்லாந்தை விட்டு வெளியேறி வசிக்கின்றனர்! அந்த லிஸ்ட்டில் இன்னும் ஒரு பெயர் அதிகமாகும் என்று நினைத்துக் கொண்டான். அன்று இரவு நாடகம் தடங்கல் ஏதுமில்லாமல் நடைபெற்றது கூட்டம் குறைச்சல்தான்; ஆனால் யாவரும் ரஸிகர்கள். வெளியில், யாரோ வாண வேட்டுக்களை விடுவது போல, இரண்டொரு சமயம் டபார் டபார் என்று சப்தம் கேட்டது. ஆனால் நடிப்பில் மனத்தைச் செலுத்திய பரீலி அவற்றைப் பொருட்படுத்தவில் லை. நாடகம் முடிந்ததும், வந்திருப்போரின் ஆசைகளைத் திருப்திப்படுத்த ஐந்து முறை திரைகளை உயர்த்த வேண்டியிருந்தது - இரண்டு முறை கோஷ்டி முழுமைக்கும்; ஒரு முறை நாடகத்தின் நான்கு பிரதம நடிகர்களுக்கும்; ஒரு முறை முக்கிய ஸ்திரீ நடிகருக்காக; இன்னும் ஒரு முறை பரீலிக்காக; ஐந்து முறையும் கரகோஷம் வானைப் பிளந்தது. வேஷத்தைக் கலைப்பதற்காகப் பக்கத்து அறைக்குச் செல்லும் பொழுது, "அவ்வளவு மோசமில் லை!" என்று நினைத்துக் கொண்டான் பரீலி. "இதென்ன கூட்டம்? அந்தப் பயல்கள் மட்டிலும் வெளியே ஒழுங்காக இருந்தால் எவ்வளவு கூட்டம் வந்திருக்கும்!" முகத்தைக் கழுவிக் கொண்டிருக்கும்பொழுது சகோதரத் தொழிலாளியான பாயினிடம் இவ்விஷயத்தை விளக்கிப் பேச ஆரம்பித்தான். "இந்தப் பசங்களெல்லாத்தையும் ஒன்றுமில்லாமல் சாகடிக்கிறார்கள்! தொழில், வியாபாரம் எல்லாம் நாசமாகிறது. அவன்களாலே கெடுதலைத் தவிர வேறே என்ன செய்ய முடியும்! இதுக்குள்ளே அவன்களுக்குப் புத்தி வந்திருக்கும் என்று நினைக்கிறேன்." பாயின் முனங்கினான். எது எப்படிப் போனால் என்ன என்பது அவன் மனநிலை. வயசும் கொண்ட மட்டும் ஆகிவிட்டது. தொழிலில் அவ்வளவு திறமைசாலியுமில் லை. அவனைப் பொறுத்தவரை மாதாமாதம் கிடைக்கும் சம்பளந்தான் குறி. அதுமட்டிலும் தட்டில்லாமல் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும். தலையைச் சீவிக்கொண்டே, வீணாய்ப் போன வியாக்யானத்தை நினைத்துப் பரீலி பெருமூச்சு விட்டுக் கொண்டான். 'பாயின் கலைஞன் இல் லை. நல்லவன். சொன்னதைச் செய்யக் கூடியவன். ஆனால் கலைஞனல்லன்' என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டான். பரீலி, தன் வாழ்வை பாயின் ஜீவியத்துடன் ஒப்பிட ஆரம்பித்தான். நல்ல ஸ்வாரஸ்யமான பகற்கனவு. "வரலியா?" ஓவர் - கோட் அணிந்து கொண்டு பாயின் நடைப்பக்கம் நின்று கொண்டிருந்தான். அவன் கேள்வி பரீலியைச் சொப்பன லோகத்திலிருந்து இழுத்தது. "இல்லெ! கொஞ்சம்." "அப்பொ - நான் வரேன்!" "உம், சரி!" பழைய சம்பவங்களை ஒவ்வொன்றாக எண்ணிக்கையிட்டுக் கொண்டே, மெதுவாக உடைகளை அணிந்து கொள்ள ஆரம்பித்தான். வெளியே வருவதற்குப் பதினைந்து நிமிஷம் ஆயிற்று. தெருக்களில் ஒரே இருட்டு. ஜனநடமாட்டம் இல் லை. பரீலி ஓவர் - கோட் காலரையும் உயர்த்திப் பொத்தான்களை மாட்டினான். என்ன மோசமான ஊர்! சரியான வெளிச்சங்கூட இல் லை. முனகிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான். பக்கத்துத் தெருவில் 'விர்ர்' என்று சப்தம் கேட்டது. துருப்புக்கள் நிறைந்த லாரி செல்லுகிறது என்று அவனுக்குத் தெரியும். 'அதுவும் நல்லதுதான். அவர்கள் நடமாட்டமிருந்தால் பயமில்லாமல் நிம்மதியாக வீடு போய்ச் சேரலாம் - அதாவது யாரும் தன் மீது வெடிகுண்டு எறியாவிட்டால்' என்ற நினைப்பு. முன்பு வெடிகுண்டு எறியப்பட்ட தெருமுனை வந்தது. அதில் நுழையச் சிறிது தயக்கம். "என்ன அசட்டுத்தனம். மறுபடியும் நடக்காது!" என்ற திடநம்பிக்கை. ஒரேயிடத்தில் இரண்டு தடவை திரும்பத் திரும்ப எப்படி இடி விழும் என்ற தர்க்கத்தை நினைவுக்கு வருவித்துக் கொண்டு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான். மறுபடியும் 'விர்ர்' என்ற சப்தம். இந்த முறை சப்தம் வரவர ஓங்கி நெருங்கியது, சிறிது நின்றது, அதிகமாயிற்று, மறுபடியும் நின்றது, மறுபடியும் ஓங்கியது. பக்கவாட்டில் 'கிரீச்' சென்ற பிரேக் சப்தம். மனிதக்குரலும் யந்திர ஓலமும் குழம்பி அவன் மீது முட்டி நின்றன. பேய்க் கனவு கண்டவன் போல் பரீலி பரக்கப் பரக்க விழித்தான். அவனைப் பார்த்துப் பல குரல்கள் ஏகோபித்து அதிகாரத் தொனியில் உறுமின; அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத உத்தரவுகளை விதித்தன. ஏதோ ஒன்று இவனுக்குப் பின்புறச் சுவரில் மோதியது. 'டிரஞ்ச் கோட்' போட்ட உருவங்கள் லாரியிலிருந்து குதித்து இவனை நோக்கி வந்தன. ஒரு ரிவால்வர் இவன் வயிற்றைக் குத்தியது. என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளுமுன், தலைக்கு மேல் கைகளை உயர்த்திய வண்ணம், பின்புறமாகக் கால் வைத்து கிராதிக் கம்பி வேலிவரை செல்ல வேண்டியதாயிற்று. "அந்தப் பயலிடம் துப்பாக்கியிருக்கிறதா என்று பார்!" எல்லோரும் சேர்ந்து அவனைத் தடவித் தடவி, பைகளைத் தட்டிச் சோதிக்க ஆரம்பித்தனர். அவர்களுடைய குரல்களிலிருந்து, அவர்கள் கைப்பக்கத்திலிருந்து, முகத்தின் பக்கம் அடிக்கும் வாடையிலிருந்து, 'முழுக்குடி' என்ற உண் மை, விளம்பரப் பலகையின் எழுத்துக்கள் போல் பரீலியின் மனத்தில் எழுந்தது. அவர்களுடன் எப்படி நடந்து கொள்ளுவதென்பது, எச்சரிக்கைக் குறிப்புப் போல, வார்த்தை வார்த்தையாக மனக்கண்முன் நின்றது. அவன் மனம் சுறுசுறுப்பாக இருந்தது. அவர்களுடைய மனங்களைவிட அவனுடையது திறமை வாய்ந்தது. வேட்டைப் பழக்கமில்லாத நாய்க்குட்டிகளின் நடுவில் நின்று இரு திசைகளையும் திரும்பிப் பார்க்கும் மான் குட்டி மாதிரி நின்றான். "நீ இங்கே என்ன செய்கிறாய்?" "தியேட்டரிலிருந்து வீட்டுக்குப் போகிறேன்." "தியேட்டரிலிருந்து வீட்டுக்கா போறே! நல்லா அளக்கிரியே!" ஒன்றுள் ஒன்று குழம்பி ஒலிக்கும் பல குரல்கள் எழுந்தன. பல ஜோடிக் கண்கள் அவனைக் கூர்ந்து நோக்கின. அவன் மீது துர்நாற்றமடிக்கும் உச்சுவாச நிச்சுவாசம். ரிவால்வரை வயிற்றுக்கு நேராகப் பிடித்திருந்தவன், எல்லாம் ஓய்வதற்காகக் காத்திருந்தான். "எல்லாத் தியேட்டருந்தான் அரைமணி நேரத்துக்கு முந்தியே மூடியிருக்குமே!" "நான் ஒரு நடிகன்; வேஷத்தைக் கலைத்துவிட்டு உடுத்திக் கொண்டு வர நேரமாகும்." "வேஷங் கலைத்து உடுத்த அரைமணி நேரமா?" "சில சமயத்தில் அதற்கு மேலும் பிடிக்கும்." "சரிதாண்டா! இனிமே உனக்கு நேரமாகமே செய்கிறேன்!" என்றான் வேறொருவன். இதைக் கேட்டதும் கொஞ்சம் சிரிப்பு. அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன், விசாரணை நடத்திக் கொண்டிருந்தவன் கையைப் பிடித்து இழுத்து காதில் என்னவோ சொன்னான். இதைக் கண்ட பரீலிக்கு வயிற்றைக் கலக்கியது. கேள்வி கேட்டுக் கொண்டிருப்பவன் கையை உதறித் தள்ளினான். மற்றவர்களைவிட அவனுக்குக் கொஞ்சம் புத்தி தெளிந்திருந்தது. பரீலி தன் முழு மனத்தையும் அவன் மீது லயிக்க விட்டான். தான் பிழைத்துக் கொள்வது அவனைப் பொறுத்துத்தான் இருக்கிறது என்று உறுதி கொண்டான். "நீ நடிகன் என்று சொல்லுகிறாயே, உன் பேரென்ன?" "பால் பரீலி." "அப்படிப் பேரே கேட்டது கூட இல் லையே!" என்றான் முன்பு இடைமறித்துப் பேசியவன். மறுபடியும் விசாரணை நடத்துபவன் காதில் குசுகுசுவென்று பேசினான். "அப்படி ஒரு நடிகனும் இங்கே கிடையாது; எனக்கு எல்லோரையும் தெரியும்" என்றான் மீண்டும். "எனக்கு இந்த ஊரில் லை. லண்டனிலிருந்து இப்போதான் இங்கு வந்தேன்" என்றான் பரீலி. முகக் குறி மூலம் ஒவ்வொருவர் மனப்போக்கும் என்னவென்பதை அறிந்து கொள்ள ஒவ்வொரு முகமாகக் கவனித்தான். தன் புத்தி தெளிவாக இருப்பது எவ்வளவு சௌகரியம் என்பதை உணர்ந்தான். ரிவால்வர் வைத்திருப்பவன் தயங்குகிறான் என்பது தெளிவாயிற்று. அவன் மறுபடியும் பேசும்பொழுது தொனியில் முன்பிருந்த உறுதியில் லை. "இங்கே சுற்றுப் பிரயாணம் செய்கிறாயா? இப்பொழுதுதான் வந்தாயா?" "ஆமாம்! இங்கே வந்து நடிப்பதே இப்பொழுதுதான் முதல் தடவை." "லண்டனில் இருந்தா?" "ஆமாம்." "பிக்காடில்லி எப்படி இருக்கிறது?" அந்த கும்பலிலிருந்த ஒரு குரல் அவனைப் பார்த்துக் கேட்டது. பரீலி அத்திசையில் திரும்பினான்; மீறி எழும் ஆசையைக் காண்பிக்கும் அவசரத்துடன் அல்ல; அந்தக் கூட்டத்துக்குத் தலைவன் என்று இவன் ஊகித்த ஒருவனைக் கோபப்படுத்த அஞ்சினான். அந்தத் தலைவனை மரியாதையாகப் பார்த்துவிட்டு - அதாவது, அனாவசியமாக இடைக் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்பவனைப் போல, மரியாதையாகப் பார்த்துவிட்டு... "சுகமாகத்தான் இருந்து வருகிறது" என்றான். "இப்போ, அங்கேயிருந்தா நல்லது!" என்றது அக்குரல். "என்னுடைய இடம் லெஸ்டர் ஸ்கொயர்டா!" என்றது மற்றொரு குரல். "அடே, உன் துருத்தியெ நீ ஊது, தெரியுமா!" என்றது முதல் குரல். அபிப்பிராய பேதம் ஏகக்குழப்பத்தில் கொண்டு விடும்போல் இருந்தது. அவர்கள் தயங்குகின்றனர்; அவனிருப்பதை மறக்கின்றனர். 'தலைவன்' மறுபடியும் அவன் வயிற்றில் ரிவால்வர் முனையால் இடித்தான். "நடிகனோ, எவனோ - யாராயிருந்தாலும் இந்த நேரத்தில் நீ தெருக்களில் அலைந்து கொண்டிருக்கக் கூடாது. இது இன்னம் உனக்குத் தெரியாதா?" "மன்னிக்க வேண்டும். நான் இப்போதான் வந்தேன் என்று சொல்லுகிறேன். வேஷத்தைக் கலைத்துவிட்டு நேராகத் தியேட்டரில் இருந்து வருகிறேன்!" "அதெல்லாம் உனக்குத்..." "டேய்!" - கும்பலுக்குப் பின்புறமிருந்த ஒரு முரடன் நெட்டித் தள்ளிக்கொண்டு வந்தான். "அவதான் அவ பேரென்ன - கோரா... அவகிட்ட எங்களைக் கூட்டிக்கிட்டுப் போரியா - அவதாண்டா - அவ, இப்படி இப்படி ஆட்றாளே!" என்று இடுப்பை நெளித்துக் காண்பித்தான். எல்லோரும் ஒரே குரலாக இடியிடி என்று சிரித்தனர். "என்னால் முடியாது என்று அஞ்சுகிறேன்" என்றான் பரீலி, ஜாக்கிரதையாக, "நான் அந்தத் தியேட்டரில் நடிக்கவில் லை. நான்..." "அப்படின்னாக்கா ஒன்னாலே தம்பிடிக்கிப் பிரயோஜனமில் லை." தலைவனைத் திரும்பிப் பார்த்து, "அந்தப் பயலெ தீத்துப்புடு; அவனாலே தம்பிடிக்கிப் பிரயோசனமில் லை!" என்றான். தலைவன் தயங்கினான். "எங்கே குடியிருக்கே?" என்றான் பரீலியைப் பார்த்து. "நோலான் தெருவிலே. இந்தச் சந்துக்கு இரண்டாவது சந்திலே." "அப்படியா சரி." ரிவால்வரைப் பைக்குள் வைத்துக்கொண்டு, விலகி நின்றான். "நோலான் தெருவுக்குப் போ! மூன்று நிமிஷம் கொடுக்கிறேன்; அதற்குள்ளே போகாட்டா ஜாக்கிரதை! சரிதாண்டா, போ!" "டேய்! இங்கே வாடா!" அந்த முரடன் பரீலி தோளைப் பிடித்து நெட்டித் தள்ளிக்கொண்டு சென்றான். தன் னை விடுவித்துக் கொள்ளப் பரீலி முயன்றான். "தெரு இந்தப் பக்கமில்லே, அப்படிப் போ..." பின்புறத்தில் படார் என்று ஒரு பூட்ஸ் கால் அடித்துக் குப்புறத் தள்ளியது. நல்ல காலம், சமாளித்துக்கொண்டு விழாமல் ஓடினான். அவர்களது சிரிப்பும், அசங்கிய வார்த்தைகளும், நடமாட்டமற்ற அந்தத் தெருவில் எதிரொலித்தன. அவன், அடுத்து எதிர்ப்பட்ட சந்தில் நுழைந்து திரும்பி, நான் குடியிருந்த வீட்டை நோக்கி ஓடினான். ஓடும்போது மறுபடியும் லாரி புறப்படும் சப்தம் கேட்டது.

புதுமைப்பித்தன் மூலம் மேலும் புத்தகங்கள்

72
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
0.0
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.
1

1. ஆஷாட பூதி

2 January 2024
0
0
0

மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால

2

2. ஆட்டுக் குட்டிதான்

2 January 2024
0
0
0

ஜேம்ஸ்ஹானலி – இங்கிலாந்து  செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உற

3

3. அம்மா

2 January 2024
0
0
0

கே. பாயில்  பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வ

4

4. அந்தப் பையன்

3 January 2024
0
0
0

மாக்ஸிம் கார்க்கி  இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில் லை. அவ்வளவு எளிதானது. நான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே

5

5. அஷ்டமாசித்தி

3 January 2024
0
0
0

டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள் ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந

6

6. ஆசிரியர் ஆராய்ச்சி

3 January 2024
0
0
0

ஸின்கிளேர் லூயிஸ்  டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று

7

7. அதிகாலை ( பகுதி 1)

3 January 2024
0
0
0

நிக்கோலாய் டிக்கனோவ்  1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷ

8

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024
0
0
0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். வி

9

7. அதிகாலை ( பகுதி 3)

3 January 2024
0
0
0

"பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன் னைக் காட்டிக்கொடுப்பேன்; என் னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்ப

10

7. அதிகாலை (பகுதி 4)

3 January 2024
0
0
0

"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவ

11

8. பலி

4 January 2024
1
0
0

ஜோஸப் நையரு – ஹங்கேரி  மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல் லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்ப

12

9. சித்திரவதை

4 January 2024
1
0
0

எர்னஸ்ட் டாலர்  "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம

13

10. டைமன் கண்ட உண்மை

4 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர் (1564-1616)  ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும்

14

11. இனி

4 January 2024
1
0
0

இ. எம். டிலாபீல்ட்  இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்

15

12. இந்தப் பல் விவகாரம்

4 January 2024
1
0
0

மைக்கேல் ஜோஷெங்கோ – ருஷ்யா  எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம்.

16

13. இஷ்ட சித்தி ( பகுதி 1)

4 January 2024
1
0
0

ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி  முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எ

17

13. இஷ்ட சித்தி ( பகுதி 2)

4 January 2024
1
0
0

"பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்! "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்

18

14. காதல் கதை

5 January 2024
1
0
0

வில்லியம் ஸரோயன்  "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான். (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது

19

15. கலப்பு மணம்

5 January 2024
1
0
0

கிரேஸியா டெலாடா – இத்தாலி  அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்ட

20

16. கனவு (பகுதி 1)

5 January 2024
1
0
0

ஐவான் டர்ஜனீப் – ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலே

21

16. கனவு ( பகுதி 2)

5 January 2024
1
0
0

8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நா

22

17. காரையில் கண்ட முகம்

5 January 2024
1
0
0

இ.வி. லூக்காஸ் – இங்கிலாந்து  நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என் னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்ற

23

18. கிழவி

5 January 2024
1
0
0

ஸெல்மாலேகர்லாப் – ஸ்வீடன்  மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை

24

19. லதீபா

6 January 2024
0
0
0

மோஷி ஸ்மிலான் ஸ்கி  "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது." இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். ச

25

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024
0
0
0

1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங

26

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்(பகுதி 2)

6 January 2024
0
0
0

5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்த

27

21. மணிமந்திரத் தீவு

6 January 2024
0
0
0

ஷேக்ஸ்பியர்  நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச்

28

22. மணியோசை

6 January 2024
0
0
0

ஜப்பான்  "நான் சாவதற்குப் பயப்படவில் லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" வேதனை

29

23. மார்க்ஹீம்

6 January 2024
0
0
0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து  "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறு

30

24. மிளிஸ்

8 January 2024
0
0
0

பிரட் ஹார்ட் – அமெரிக்கா  ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இரு

31

25. முதலும் முடிவும் ( பகுதி 1)

8 January 2024
0
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த,

32

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024
0
0
0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்

33

26. நாடகக்காரி

8 January 2024
0
0
0

ஆண்டன் ஷெக்காவ் – ருஷியா  அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில் லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்

34

27. நட்சத்திர இளவரசி

8 January 2024
0
0
0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்  "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவி

35

28. ஓம் சாந்தி! சாந்தி!

8 January 2024
1
0
0

எலியா எஹ்ரன் பர்க்  (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன் னைப் பலிகொடுக்கத் தயாரானா

36

29. ஒரு கட்டுக்கதை

9 January 2024
0
0
0

பிரான்ஸ் காப்கா – ஆஸ்திரியா  எலி சொல்லுகிறது... "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே

37

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024
0
0
0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ்  மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை ந

38

31. பைத்தியக்காரி

9 January 2024
0
0
0

மொப்பஸான் – பிரான்ஸ்  "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண் டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என

39

32. பளிங்குச் சிலை

9 January 2024
0
0
0

வாலரி புருஸ்ஸாப் வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக

40

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024
0
0
0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்  "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன்

41

33. பால்தஸார்( பகுதி 2)

9 January 2024
0
0
0

ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண் டைக் கொடுத்தனர். ப

42

34. பொய்

9 January 2024
0
0
0

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா  "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள்

43

35. பூச்சாண்டியின் மகள்

10 January 2024
0
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து  அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் வ

44

36. ராஜ்ய உபாதை( பகுதி 1)

10 January 2024
0
0
0

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)  ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப

45

ராஜ்ய உபாதை( பகுதி 2)

10 January 2024
0
0
0

"அந்தக் கடிதம்..."  "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்ட

46

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024
0
0
0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா  எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூற

47

38. சாராயப் பீப்பாய்

10 January 2024
0
0
0

எட்கார் அல்லன் போ – அமெரிக்கா  அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என் னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன்

48

39. சகோதரர்கள்

10 January 2024
0
0
0

யூஜோ யாம மோட்டோ – ஜப்பான்  'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில் லை; நான் பிடுங்க

49

40. சமத்துவம்

10 January 2024
0
0
0

ஒரு ருஷிய ஆசிரியர்  நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் த

50

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024
0
0
0

ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் த

51

42. சிரித்த முகக்காரன்

11 January 2024
0
0
0

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லே

52

43. சூனியக்காரி

11 January 2024
1
0
0

ரோனால்டு ஆக்டன் – இங்கிலாந்து அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல

53

44. சுவரில் வழி

11 January 2024
0
0
0

ஆர். முரே கில்கிரைஸ்– இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று

54

45. தாயில்லாக் குழந்தைகள்

11 January 2024
0
0
0

பிரான்ஸிஸ் பெல்லர்பி – இங்கிலாந்து வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் ம

55

46. தையல் மிஷின்

11 January 2024
0
0
0

இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

56

47. தந்தை மகற்காற்றும் உதவி

11 January 2024
1
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்

57

48. தெய்வம் கொடுத்த வரம்

12 January 2024
1
0
0

பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் – ஸ்வீடன்  இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட்

58

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024
0
0
0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து  லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது.

59

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024
0
0
0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புற

60

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024
0
0
0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பய

61

50. துன்பத்திற்கு மாற்று

12 January 2024
1
0
0

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ – இத்தாலி  நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத்

62

51. துறவி

12 January 2024
0
0
0

ராபர்ட் நியூமான் – ஜெர்மனி  "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான். அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியி

63

52. உயிர் ஆசை (பகுதி 1)

13 January 2024
1
0
0

ஜாக் லண்டன் – அமெரிக்கா  அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்

64

52. உயிர் ஆசை (பகுதி 2)

13 January 2024
1
0
0

நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினா

65

52. உயிர் ஆசை (பகுதி 3)

13 January 2024
1
0
0

பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியு

66

53. வீடு திரும்பல்

13 January 2024
1
0
0

பீட்டர் எக் – நார்வே  மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுத

67

54. ஏ படகுக்காரா!

13 January 2024
1
0
0

மிக்கெய்ல் ஷோலொகோவ்  அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில் லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான்

68

55. யாத்திரை

13 January 2024
1
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை

69

56. எமனை ஏமாற்ற...

13 January 2024
1
0
0

மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள

70

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

13 January 2024
1
0
0

தாமஸ் வுல்ப் – அமெரிக்கா  ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத

71

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்(பகுதி 2)

13 January 2024
1
0
0

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்

72

58. தர்ம தேவதையின் துரும்பு

13 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர்  குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, தி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்