shabd-logo

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024

0 பார்த்தது 0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். விவசாய நிபுணரையும் தபால் உத்யோகஸ்தரையும் பாக்ஷா, கூபூவில் வைத்தே விடுதலை செய்து விட்டார். உதவித் தளபதி 'டிமிக்கி' கொடுத்துவிட்டுக் கம்பி நீட்டினான். மலை ஜாதிப் பையன் ஒருவனிடம் குத்துக்கத்தி ஒன் றை குருட்டிக்காவ் வாங்கி பூட்ஸுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டான். ஆலி ஹஸன் வெகுமானத்திற்கு மேல் வெகுமானமாக, டாஷாவுக்குக் கொடுத்துக் குவித்துக் கொண்டிருந்தான். பாசிமணி, பழைய அபூர்வ நாணயங்கள், மலர்கள், அபூர்வமான ரத்தினக் கல்லுகள் எல்லாம் கைமாறின. "வாங்கிக் கொள்ளாமல் இருப்பாயா மாட்டாயா" என்று குருட்டிக்காவ் கோபாவேசத்துடன் கத்தினான். "அவனை ஏன் சங்கடப்படுத்த வேண்டும்? அவன் யோக்கியஸ்தன்" என்றாள் டாஷா. "ஆமாம் ரொம்ப யோக்கியஸ்தன்" என்று பதிலுக்கு இரைந்துகொண்டு தொலைக் கண்ணாடியைத் தூக்கிப் பயமுறுத்தினான். "நீ அவன்கூடக் கண்ணடித்துக் கொண்டிருந்தால் நூஹூஹரைப் பார்க்கமாட்டே" என்றான். "நானும் அங்கே போவேன். நீயும் அங்கே என்கூட வரத்தான் போறே" என்றாள் டாஷா. கூட வந்த ரஷ்யர்கள் எங்கோ வாங்கிவந்த மட்டமான வோட்கா சாராயத்தைக் குருட்டிக்காவ் குடித்துவிட்டு போதையுடன் டாஷாவிடம் போனான். "என்கிட்ட வராதே. போ. எங்கிட்ட வராதே. குடிகாரனுக்குப் பொறக்கிற கொழந்தை குடிகாரனாகத்தான் இருக்கும்" என்றாள். "ஆமாம் அதுவும் நெசந்தான்" என்று சொல்லிவிட்டு அகன்று போய் போடாவியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். இந்த மாதிரியாக இவர்கள் எத்தனையோ கிராமங்களைத் தாண்டிச் சென்றார்கள். வழியிலே எல்லாருக்கும் சளிபிடித்துக் கொள்ளத் தும்மிக் கொண்டும் இருமிக்கொண்டும் நடந்தார்கள். வாய் குழற குருட்டிக்காவ், போடாவியிடம், "அந்தத் துருக்கிப் பயலை எனக்காகத் தொலைத்துப்போடு" என்றான். "அப்படியே தீத்துப்புடவா? அவன் உன் னை என்ன செய்தான்?" "என் பெண்டாட்டியைத் தட்டிக்கொண்டு போகப் பார்க்கிறான்." "ஆஹா, டாஷா" என்று பல்லிளித்தான் போடாவி. "அவனை விரட்டிப்புடு, கொல்ல வேண்டாம்" என்றான் குருட்டிக்காவ். "அவனை வழியில் எங்காவது தங்க வைத்துவிடு. அந்தப் பயல் தொல் லையில்லாமல் நூஹூவுக்குப் போய்ச் சேருவோம்." "இப்பவே செய்கிறேன்" என்றான் போடாவி. போகிற வழிநெடுக அவன் நாள் முழுதும் பாதையில் எதையோ தேடிக்கொண்டு வந்தான். அன்று மாலை காரட் கிழங்கு போன்ற ஒரு வேரைக் குருட்டிக்காவிடம் கொடுத்து, "இதை இடித்துக் காபியில் போட்டுக் கொடுத்துவிடு. அப்புறம் டாஷா நமக்குத்தான்" என்றான். கண் ணை ஒரு சொருகுச் சொருகிச் சுழற்றிவிட்டு வெளியே போனான். குருட்டிக்காவ் நினைவு ரொம்ப ஆழமாகப் பாய்ந்து யோசித்தது. "டாஷா நமக்குத்தான்" என்றானே அதற்கு என்ன அர்த்தம்? டாஷா, ஆலி ஹஸனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். துருக்கியன், குடிசையின் நடுத்தூணில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான். அவன் பல்லும் கண்ணும் மகிழ்ச்சியைத்தான் கொப்பளித்துக் கொண்டிருந்தன. நீலக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டான். "காலையிலே எங்ககூடக் காப்பி சாப்பிட வா" என்றாள் டாஷா. "உன் புருஷன் தான் சங்கடப்படுகிறானே" என்றான் துருக்கியன். அவள் திரும்பிக் குருட்டிக்காவ் முகத்தில் பார்வையைப் பதிய வைத்துச் சிரித்தாள். மறுநாள் காலை குருட்டிக்காவ் உட்கார்ந்து காப்பிக் கிண்ணத்துக்குள் பார்வையைச் சொருகிக் கொண்டிருந்தான். அவன் எதிரே காப்பி சுடச்சுட வரிசையாக ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. டாஷா கண்ணாடி எதிரில் நின்று தலைவாரிக் கொண்டிருந்தாள். வேலைக்காரி, அவளுடைய உடையைத் தொட்டுப் தொட்டுப் பார்த்துச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். குருட்டிக்காவ் வெளியே ஆளரவம் கேட்டுக் கோப்பைக்குள் பொடித்த வேரைப் போட்டான். நான்கு பேர் மூலை திரும்பி வந்தார்கள். அவர்கள் ஆலி ஹஸனைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அவன் பல் லை நெறநெறவென்று கடித்துக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான். "பே கீழே விழுந்து காலை ஒடித்துக்கொண்டார்" என்றான் அந்த நால்வரில் ஒருவன். ஹஸன், டாஷாவைப் பார்த்து, அவள் சார்பாகத் தன் கைகளை முத்தம் கொடுத்துக் கொண்டான். போடாவி ஊருக்குள் போய், ஒரு நாட்டு வைத்தியனை அழைத்து வந்தான். வைத்தியனுக்குத் தலைகால் தெரியவில் லை. இவ்வளவு பெரிய மனிதனுக்கு வைத்தியம் செய்வதா? மகிழ்ச்சியில் திக்குமுக்காடி விட்டது. நோயாளியைத் தன் வீட்டுக்கே தூக்கிக்கொண்டு போய்விடவேண்டும் என்று உத்தரவு போட்டான். ஆலி ஹஸன் தாகத்துக்குக் கேட்டான். குருட்டிக்காவ், பொடி கலந்த காப்பியைத் தன் காலடியில் ஊற்றிவிட்டான். "உன்னுடைய புருஷன் கொடுமைக்காரன்" என்று சொல்லிக்கொண்டே தன் பதவியை உதவி உத்தியோகஸ்தன் வசம் ஒப்புக் கொடுத்தான். ஆலி ஹஸனைப் பின்னால் தங்க வைத்துவிட்டு இவர்கள் புறப்பட்டபின், "டாஷா, உன்கிட்ட ஒரு விஷயம் பேசியாகணும். என் இஷ்டப்படி வாழணும். இந்த மலையும் காடும் எனக்குப் பிடிக்கவே பிடிக்கலை. எனக்கு நன்றாகக் கணக்குப் பதியத் தெரியும். இந்தா எனக்கு இந்த ஜெனரல் உத்தியோகம் பார்க்கத் தெரியாது. நான் நம்பக்கூடிய பெண் எனக்கு வேண்டும். எதிர் வருகிற பயல்களிடம் எல்லாம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறவள் அல்ல" என்றான். "வாயைப் பொத்திக்கோ அன்ட்ரீய்; லொழ்கோ மொயெவை மறந்து போனியா?" என்று சொல்லிக்கொண்டு கைகளை வைத்து அவன் வாயைப் பொத்தினாள். "அவனைப்பத்தி என்ன இப்போ, மறைத்து மறைத்து என்ன சொல்லுகிறாய்" என்று அவள் கையைத் தட்டிவிட்டுக் கத்தினான் குருட்டிக்காவ். "லொழ்கோ மொயெவ் பத்தி என்னவா? அவன் ரொம்ப சரஸமாப் பேசுவான். சோல்ஜர், துரோகி, துருக்கியர்கூடச் சேர்ந்துகொண்டான்" என்று மீண்டும் இரைந்தான் குருட்டிக்காவ். "அவன் ஒரு காலத்திலே என்னெக் கலியாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்பட்டான். ஆனால் வேறு ஒரு பொக்கிஷத்தை எனக்கென்று எடுத்துக்கொண்டேன்." இந்தச் சமயம் பார்த்துப் போடாவி வண்டியை ஓட்டிச் செல்லும்படி உத்தரவு போட்டான். வண்டி திரும்பும் ஒவ்வொரு மூலையிலும் எங்கே அந்தத் துருக்கிப்பயல் வந்துவிடப் போகிறானோ என்று சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே இருந்தான். "நீயெல்லாம் இந்த இயற்கையழகைப் பார்த்து ஆனந்தப்பட வேண்டும். அந்த அபூர்வமான தழைகளைப் பாரு" என்றாள் டாஷா. "ஊருக்கு ஊர் மரம் மட்டை ஒவ்வொரு மாதிரியாகத்தான் இருக்கும். உன் மரத்தையும் சோலையையும் பார்த்தாச்சு. அப்புறம் வேறே என்னத்தைப் பார்க்க வேண்டும்?" "அந்த மேகத்தைப் பார்; எவ்வளவு அழகாக இருக்கிறது? கவுத்துவச்ச வாணலிச் சட்டி மாதிரி வட்டமா இருக்கு பாரு." "மேகம் என்றால் நீராவி எல்லாம் சேர்ந்து குவியலாகச் சேர்ந்திருப்பதுதான். அதைத்தவிர அங்கொன்றுமில் லை." "போ, போ, உனக்கு என் பேரில் பிரியமே இல் லை" என்று பெருமூச்சு விட்டாள் டாஷா. அவன் மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கொண்டு தன்னுடைய குதிரையை முன்னால் ஓட்டிச் சென்றுவிட்டான். போடாவி அவனுக்குக் கொடுத்தது ஒரு நொண்டிக் குதிரை. அவனுக்குக் குதிரைச் சவாரியில் நல்ல பழக்கமில்லாததினால் அதைப்பற்றி அவன் கவலைப்படவில் லை. ஒவ்வொரு நாளும் அவன் சொப்பனத்தில் எல்லாம் பாங்கியையும் பெட்டியடியையும் கணக்குப் புத்தகத்தையுமே கண்டு ஏங்கினான். "உனக்கு ஒரு பெண்ணின் மேல் ஆசை என்றால் அவளுக்காக நீ சண் டைப் போடத் தயாராக இருக்க வேண்டும்" என்று அவன் முகத்தைத் தடவிக் கொடுத்தாள் டாஷா. "யாருகூடச் சண் டைபோட? என்ன சொல்றே? புரியலியே. நான் தான் உயிரோட இருக்கிறதற்காக மல்லாடினேன். அப்பறம் ரஷ்யாவுக்காக, தாயான ரஷ்யாவுக்காகச் சண் டை போட்டேன். அப்புறம் புரட்சிக்காகச் சண் டைப் போட்டேன். அப்புறந்தான் சிறைபிடித்துக் கொண்டார்கள். அங்கே கூட எனக்கு ஓய்வு கிடையாதா? இனிமே நான் ஒரு பெண்ணுக்காக வேறே சண் டை போட வேண்டும் போலிருக்கிறது. எவளுக்கு?" "எனக்காகத்தான்" என்றாள் டாஷா. "உனக்காகவா? அந்தத் துருக்கிய ஜாதி அமிஞ்சிப் பயல்தான் காலை ஒடித்துக் கொண்டானே?" "அடெ, என்ன முட்டாளாட்டம் பேசுகிறே. நான் அந்தத் துருக்கியனைப் பத்தியே யோசிக்கலே. போடாவி என்ன...?" "போடாவிக்கு என்ன? போடாவிக்கு என்ன இப்போ? அவனும் விளையாட ஆரம்பிச்சுட்டானா? நீயே ஒப்புக் கொள்ளுகிறாயா? அட கர்மமே..." டாஷா அவன் கன்னத்திலறைந்துவிட்டு ஓடிவிட்டாள். "இவள் கூத்தே ஒரு கூத்துத்தான். என் னை இவள் ஒரேடியாக நாசமடிக்கப் போகிறாள். ஏன் இவள் கையில் சிக்கிக் கொண்டேன். கையிலிருப்பதோ குறுங்கத்தி. அப்படி இருந்தாலும் இவளுக்காக நான் சண் டை போட்டு ஆக வேணுமாம். இதுவும் நல்ல கூத்துத்தான்" என்று நினைத்தான் குருட்டிக்காவ். மறுநாள் முழுவதும் வண்டியைச் சுற்றி வட்டமிட்டான் போடாவி. டாஷாவுடன் வாய் ஓயாமல் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தான். அவளுக்கு மலர்கள், அதிசயமான கல்லுகள், கிராமத்திலிருந்து பால் முதலியவற்றை அடிக்கடி கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் கீச்சுக் கீச்சு என்று குருவி மாதிரி பேசுவதைக்கண்டு விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே வந்தாள் டாஷா. "இதென்னடா கதையா இருக்கு. குடியும் குடித்தனமுமாக வளர்ந்த பெண் இப்படியும் இருப்பாளோ? இவளுக்கு இதற்கெல்லாம் எங்கேயிருந்து தெம்பு வருகிறது. கண்ட கண்ட பேரையெல்லாம் பார்த்துப் பல் லை இளித்துக் கொண்டுதான் நிற்க வேண்டுமோ? நானோ வாடி வதங்கிப் போகிறேனே. கொஞ்சமேனும் ஏறெடுத்துப் பார்த்தாளா" என்று ஏங்கினான் குருட்டிக்காவ். மந்திரத்தில் கட்டுண்டவன்போல் போடாவி வண்டிக்குப் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்தான். அவன் வண்டியை ரொம்பவும் நெருங்கிச் சவாரி செய்துகொண்டு வருகிறான் என நினைத்துக் கொண்டால், "டேய் போடாவி" என்று குருட்டிக்காவ் கூப்பிடிவான். "என் னைக் கூப்பிட்டாயா? என்ன?" என்று குதிரையை நிறுத்திக்கொண்டு திரும்புவான் போடாவி. "சரி சரி, இப்போ ஒன்றுமில் லை" என்பான் குருட்டிக்காவ். அடுத்த நிமிஷம் "அடே போடாவி" என்று கூப்பிட்டுவான். இப்படியாக ஒரு வாரகாலம் பிரயாணம் செய்தபின் நூஹூவுக்கு வந்து சேர்ந்தார்கள். கவசம் அடித்துக் கொடுக்கும் பட்டறை ஒன்றிற்கு மேல் உள்ள மாடியறை ஒன்று குருட்டிக்காவுக்கும் டாஷாவுக்கும் ஒழித்து விடப்பட்டது. போடாவி வழி சொல்லிக்கொள்ள அங்கே வந்தான். அவனுக்குப் பாலேடும், தர்பூஸ் பழமும், ரொட்டியும் கொடுத்திருந்தார்கள். யுத்தகளத்துக்குப் போகும்படி அவனுக்கு உத்தரவு. "உன் சின்ன சிங்காரக் கையைக் கொடுத்து அவனுக்குப் போக விடை கொடுத்து வழிஅனுப்பிக்கோ" என்றான் குருட்டிக்காவ். அவன் மனத்தில் பாரம் கொஞ்சம் இறங்கிய மாதிரி இருந்தது. "அவன் வேண்டுமானால் எனக்காகக் கொஞ்சம் சண் டை போடட்டுமே. எப்பொழுதும் நான் தானா சண் டைக்குப் போகவேண்டும்?" குருட்டிக்காவ், கொஞ்சம் காலாற நடந்துவிட்டு வரத் தெருவில் இறங்கினான். வழியிலே கமாண்டரின் உதவி உத்தியோகஸ்தனாக இருந்த ஒரு ஜெர்மன் ஆபீஸரைச் சந்தித்தான். "என் பேர் ஆட்டோ ஸ்டர்னர்" என்று ஞாபகமூட்டிக்கொண்டு கையை நீட்டினான் அந்த ஜெர்மானியன். "யாரு, எனக்குத் தெரியவில் லையே?" என்று கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்தான் குருட்டிக்காவ். "எனக்கு ஒரு அட்சரம் ஜெர்மன் பாஷை தெரியாது என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது" என்றான் மீண்டும். "என் பெயர் ஆட்டோ ஸ்டர்னர். உன் னைப் பார்க்கத்தான் வந்து கொண்டிருந்தேன்" என்று சுத்தமான ரஷ்ய பாஷையில் இரைந்தான் அந்த ஜெர்மானியன். "என் பெயர் குருட்டிக்காவ். உனக்கு எப்படி இந்த மாதிரி சுத்தமாக ரஷ்ய பாஷை பேசத் தெரிந்தது. ரொம்ப அதிசயமாக இருக்கே. அரசியல் தோரணையில் உன் னைச் சந்தேகப்பட்டு நான் கேட்கவில் லை. நான் ஒரு பாங்கி குமாஸ்தா. அதுதான் இந்தச் சிரத்தைக்குக் காரணம். எங்க பாங்கிலே நாலைந்து பாஷைகள் பேசக்கூடியவர்கள் இருந்தார்கள்" என்றான். "நீ எப்பொழுதாவது பெட்ரோகிராடில் இருந்ததுண்டா?" என்றான் அந்த ஜெர்மானியன். இருவருமாகத் திரும்பி குருட்டிக்காவ் இருந்த இடத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். "சண் டைக்கு முன்னாலே கொஞ்ச காலம் அங்கே இருந்ததுண்டு." "ஆர்க்கெட் என்ற இடத்துக்கு எதிராக பாஸேஜ் என்று ஒரு கட்டடம் இருந்ததே ஞாபகம் இருக்கா? பெரிய கண்ணாடிக் கடை." "ஆமாம், ஆமாம். லொட்டு லொஸுக்கு எல்லாம் விற்றுக் கொண்டிருப்பார்களே அந்தக் கடை. தொப்பி முதல் தேக்கரண்டிவரை அங்கே கிடைக்கும்..." "அந்தக் கடைதான்" என்று உற்சாகத்தோடு எதிரொலித்தான் அந்த ஜெர்மானியன். "ஒனக்கு அந்த இடம் நன்றாக ஞாபகத்திலிருக்கிறது போலிருக்கே. பாஸேஜிலிருந்து வெளியே வரும் போது இடது பக்கமாகத் திரும்பினால், முதல் கடை என்னுடையதுதான். எங்கப்பா பெயர் ஸ்டர்னர். எனாமல், செப்புப் பாத்திரங்கள் விற்றுக்கொண்டிருப்பார்." டாஷா பொழுதைக் கழிக்கத் தனியாகச் சீட்டாடிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததுமே ஜெர்மன்காரன் முகம் மலர்ந்தது. "நீ எப்படி ஜெர்மன் ராணுவத்தில் சிக்கிக் கொண்டாய்? உன் னையும் சிறைப்பிடித்துக் கொண்டார்களா?" என்று கேட்டான் குருட்டிக்காவ். "என் னை ஒருவரும் சிறைப்பிடிக்கவில் லை. நான் பிறந்ததும் வளர்ந்ததும் பீட்டர்ஸ்பர்க்தான். இருந்தாலும் நான் ஜெர்மானியன். அதுக்காக ஜெர்மனிக்குப் போனேன். அப்புறம் பெல்ஜியம், பிரான்ஸ், ஸெர்பியா, போலந்து, ருமேனியா, கிரிமியா, காகஸஸ் எல்லாத்தையும் ஜெயித்தேன். பெர்ஷியாவையும் ஜெயிக்கத்தான் ஆசை. ஆனால் அவ்வளவு தூரம் முடியாது என்றுதான் நினைக்கிறேன்" என்றான் ஆட்டோ ஸ்டர்னர். "நானும் அப்படித்தான் நினைக்கிறேன்" என்றான் குருட்டிக்காவ் கவலையோடு. "உனக்குச் சண் டை போடுவது என்றால் ரொம்பப் பிரியம் போலத் தெரிகிறது" என்றான் தொடர்ந்து. "என் தந்தையார் நாட்டைப் பாதுகாக்கச் சண் டை போடத்தான் செய்வேன். வாழ்விலேயே மகாவஸ்து அழகுதான்" என்று சொல்லிவிட்டு டாஷாவையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்டர்னர். "என்னப்பா என்னமோ சொல்லுகிறாய்? நீ பிறந்தது பெட்ரோகிராடில் இல் லையா, உன் தந்தையர் நாடு..." "அன்ட்ரீய் பேசத் தெரியாமல் பேத்தாதே. நீ சும்மா வாயை மூடிக்கொண்டு கிட, காப்டன் ஸ்டர்னர் எத்தனையோ அழகிகளைப் பார்த்திருப்பார்" என்றாள் டாஷா. "இதோ நாங்க புறப்பட்டாச்சு. தர்பூஸ் பழத்தை அறுக்க ஏதாவதிருந்தால் கொடு" என்று சொன்னான் குருட்டிக்காவ். "சிரமப்பட வேண்டாம். என்னிடம் மடக்குக் கத்தியிருக்கிறது; பெண்களைப் பற்றிக் கதை கதையாகச் சொல்லுகிறேன் கேளு." ராணுவ தர்பார் கோலாகல வெடிச் சத்தங்களுடன் நூஹு நகருக்குள் பாக்ஷாவும் பிரவேசித்தார். வந்து களைப்பாறினார். இன்னும் கொஞ்சம் பீரங்கிவாணம் விட்டார். சிப்பாய்கள் சம்பளத்தை உயர்த்தினார். நிம்மதியாகக் குருட்டிக்காவ் அறையில் பொழுது கழிந்தது. டாஷா இடுப்பில் சுற்றிப் போட்டிருந்த கைகளை அகற்றிவிட்டு, பாக்கூவுக்குப் போனதும் பாங்கியில் வேலை பார்க்கப் போவதாகவும், குருட்டிக்காவ் குஞ்சு கிடக்கும் தொட்டிலை அவள் ஆட்டிக் கொண்டிருப்பாள் என்றும் சொன்னான். ஒருநாள் நல்ல மழை பெய்து கொண்டிருந்தபோது போடாவி திரும்பி வந்தான். வீட்டுக்குள் நுழைந்தபோது தொப்பலாக நனைந்து போயிருந்தான். குருவிக் குஞ்சு மாதிரி வாயைத் திறந்து சிரித்துக்கொண்டு சட்டைப்பையுள் இருந்த கடிதம் ஒன் றை வெளியே எடுத்தான். "லொழ்கோ மோயெவ் என்ற ஒரு உத்தியோகஸ்தர், ஸுல்தானுக்குக் கீழே வேலை பார்க்கிறார். பிறப்பில் ரஷ்யர். அந்த மனிதன் உன் னைப்பற்றி பாக்ஷாவுக்குக் கடிதம் கொடுத்தனுப்பியிருக்கிறார். வாசித்துப்பார்" என்றான் போடாவி. கடுதாசி முத்திரையை உடைத்துப் பார்க்கக் குருட்டிக்காவுக்குக் கை நடுங்கியது, தலை சுழன்றது. டாஷா கடுதாசி உறையைக் கிழித்து அதை எடுத்துக் கீழே விட்டெறிந்தாள். "அதிலே பிரமாதமாக ஒன்றுமில் லை. ராணுவ முகாம் பொக்கிஷத்தைக் கொள் ளையடித்து விட்டாய் என்றும், ஐயாயிரம் தங்கம் உன் பையிலிருக்கிறது என்றும் அதில் எழுதியிருக்கிறது. என் னை மனதில் வைத்துக்கொண்டு இந்தக் கதை கட்டியிருக்கிறான்" என்றாள் டாஷா. "நானா திருடன்! அயோக்கிய ராஸ்கல்" என்று உறுமிக்கொண்டு ஆவேசத்துடன் அறையைச் சுற்றிச் சுற்றி நடக்க ஆரம்பித்தான். "இனிமேல் என்ன செய்வேன். இந்தப் பயல்கள் என் னைச் சுட்டுத் தள்ளிவிடுவார்களே. பாத்தியா. வரவன் போறவனையெல்லாம் பாத்து நீ பல்லிளிக்கப் போய், என் தலையில் வந்து விடிகிறது. நான் அப்பவே சொன்னேன். இப்போ உனக்குத் திருப்திதானே. என் னைச் சுட்டுத் தள்ளுவார்கள்; என் காரியம் முடிஞ்சது" என்றான் குருட்டிக்காவ். டாஷா கண்ணீர் விட்டு அழுதாள். "நான் தான் அந்தக் கடுதாசியைக் கொண்டு வந்து விட்டேனே. அதைக் கிழித்துப் போட்டாச்சே" என்று போடாவி மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கொண்டு கடுதாசியைச் சுக்குச் சுக்காகக் கிழித்தெறிந்தான். திக்பிரமை தெளிந்து குருட்டிக்காவ், "அதைக் கிழித்துப் போட்டு விட்டாயே! இனிமேல் அதற்குப் பதில் கொண்டு போக வேண்டாமா? என்ன செய்யப் போகிறாய்?" என்றான். "பதிலா? நான் திரும்பிப் போகும்பொழுது பதில் எதுவும் பார்த்துக்கொள்வேன்" என்றான் போடாவி மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கொண்டு. டாஷா அப்படியே அவன்மேல் விழுந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு முகமெல்லாம் முத்தமிட்டாள். "டாஷா, நன்றியைக் காட்டிக்கொள்ள, அது கொஞ்சம் அனாவசியந்தான்" என்றான் குருட்டிக்காவ். ஆவேசத்தில் உடம்பு நடுங்கியது. இருந்தாலும், "போடாவி, நான் உனக்குக் கடமைப்பட்டவன் தான். இந்த மாதிரி அநியாயமாக அந்த அயோக்கியன் குற்றம் சாட்டுவான் என்று யார் நினைத்தார்கள்? அவனே இங்கு வந்துவிட்டானானால்?" என்றான் மீண்டும். "அப்படி வரமாட்டான், எனக்காகக் காத்திருப்பான். அங்கே ஓயாமல் சண் டை நடந்துகொண்டுதான் இருக்கிறது" என்றான் போடாவி. அன்று சாயங்காலம், பாக்ஷாவின் சிப்பந்தி ஒருவன் வந்து சாப்பிடக் குருட்டிக்காவை பாக்ஷா அழைத்திருப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். "போச்சு, குடிகெட்டதா? அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். கிழக்கு நாட்டார் பேமாளங்கள்தான் உனக்குத் தெரியுமே. முதலிலே ஒரு கோப்பை சாயா, அப்புறம் சித்திரவதைதான். பெற்ற தாய்க்கும் அடையாளம் தெரியாதபடி குதறித் தள்ளி விடுவார்கள். எனக்கோ பலமில் லை. அழுது விழுந்து கொண்டு தங்கத்தைக் கொட்டிக் கொடுத்து விடுவேன்" என்று கண்ணீர்விட்டான் குருட்டிக்காவ். "நம்மகிட்ட தங்கம் ஏது? அதெல்லாம் பொய்யில் லை?" என்றாள் டாஷா.

புதுமைப்பித்தன் மூலம் மேலும் புத்தகங்கள்

72
கட்டுரைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச் சிறுகதைகள்
0.0
புதுமைப்பித்தன் மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது.
1

1. ஆஷாட பூதி

2 January 2024
0
0
0

மோலியர் (1622-1673) பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால

2

2. ஆட்டுக் குட்டிதான்

2 January 2024
0
0
0

ஜேம்ஸ்ஹானலி – இங்கிலாந்து  செக்கச் செவேலென்றிருக்கும் அந்த பஸ், ஏக இரைச்சலுடன் அந்த வளைவைத் திரும்பியது. சூழ்நிலை தாங்கிய அமைதியான வண்ணக் கலவைகளுக்குச் சவால் கொடுப்பது மாதிரி அந்தச் சிகப்பு கண்களை உற

3

3. அம்மா

2 January 2024
0
0
0

கே. பாயில்  பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல் லை. மலை வ

4

4. அந்தப் பையன்

3 January 2024
0
0
0

மாக்ஸிம் கார்க்கி  இந்தச் சின்னக் கதையை எப்படிச் சொல்லுவது என்று புரியவில் லை. அவ்வளவு எளிதானது. நான் வாலிபப் பருவத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக் குழந்தைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு ஊருக்கு வெளியே

5

5. அஷ்டமாசித்தி

3 January 2024
0
0
0

டென்ஷொ வம்சத்தின் ஆதிக்கத்தின்போது, கியாட்டோ என்ற வடக்குப் பிராந்தியத்தில் குவான்ஷின் கோஜி என்ற வயோதிகன் வாழ்த்து வந்தான். நீண்டு நெஞ்சை மறைக்கும் வெள் ளைத் தாடியுடன், ஷிண்டோ குருக்கள்மார் போல உடையணிந

6

6. ஆசிரியர் ஆராய்ச்சி

3 January 2024
0
0
0

ஸின்கிளேர் லூயிஸ்  டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று

7

7. அதிகாலை ( பகுதி 1)

3 January 2024
0
0
0

நிக்கோலாய் டிக்கனோவ்  1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷ

8

7.அதிகாலை (பகுதி 2)

3 January 2024
0
0
0

இராத்திரி ஒரு ஊரில் தங்கினதும், ஆலி ஹஸன், டாஷா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சளசளவென்று மணிக்கணக்காகப் பேசிக் கொட்டினான். உத்யோகஸ்தரின் விதவை மெய்ஸ் அரிசி ரொட்டியை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். வி

9

7. அதிகாலை ( பகுதி 3)

3 January 2024
0
0
0

"பொய்யாயிருக்கலாம், ஆனால் சித்திரவதையில், உன் னைக் காட்டிக்கொடுப்பேன்; என் னைக் காட்டிக்கொடுத்துக் கொள்வேன்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பேன். உனக்குச் சித்திரவதை என்றால் எப்ப

10

7. அதிகாலை (பகுதி 4)

3 January 2024
0
0
0

"ஆஹா அப்படியா. பாக்ஷாதான் வயிற்றுக் கடுப்பால் கழிந்து கொண்டிருக்கிறாரே. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அவரைப் பற்றித் தொந்திரவில் லை. தவிரவும், உன்னுடைய ஆயுதங்களை உன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்று உத்திரவ

11

8. பலி

4 January 2024
1
0
0

ஜோஸப் நையரு – ஹங்கேரி  மோல்டேவியா நோக்கி நிற்கும் மலைச் சிகரங்களிலே அந்த வருஷத்தில் மந்தைகளுக்குக் கரடிகளால் வெகு தொல் லை ஏற்பட்டு வந்தது. வில் - பொறி வைத்து எல்லாம் முயன்று பார்த்ததும் ஒன்றும் பயன்ப

12

9. சித்திரவதை

4 January 2024
1
0
0

எர்னஸ்ட் டாலர்  "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம

13

10. டைமன் கண்ட உண்மை

4 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர் (1564-1616)  ஆங்கில நாடகாசிரியர், ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள். உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும்

14

11. இனி

4 January 2024
1
0
0

இ. எம். டிலாபீல்ட்  இதுவரை நடக்காததைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன?... அந்தக் கதையின் போக்கில் அறிந்து கொள்ள முடியுமானால்... பதினைந்து இருபது வருடங்களுக்கப்புறம்: ஓல்ட் பெய்லியில் (நியாயஸ்தலம்) நடக்

15

12. இந்தப் பல் விவகாரம்

4 January 2024
1
0
0

மைக்கேல் ஜோஷெங்கோ – ருஷ்யா  எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம்.

16

13. இஷ்ட சித்தி ( பகுதி 1)

4 January 2024
1
0
0

ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி  முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எ

17

13. இஷ்ட சித்தி ( பகுதி 2)

4 January 2024
1
0
0

"பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்! "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்

18

14. காதல் கதை

5 January 2024
1
0
0

வில்லியம் ஸரோயன்  "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான். (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது

19

15. கலப்பு மணம்

5 January 2024
1
0
0

கிரேஸியா டெலாடா – இத்தாலி  அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்ட

20

16. கனவு (பகுதி 1)

5 January 2024
1
0
0

ஐவான் டர்ஜனீப் – ருஷியா அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலே

21

16. கனவு ( பகுதி 2)

5 January 2024
1
0
0

8 என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நா

22

17. காரையில் கண்ட முகம்

5 January 2024
1
0
0

இ.வி. லூக்காஸ் – இங்கிலாந்து  நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என் னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்ற

23

18. கிழவி

5 January 2024
1
0
0

ஸெல்மாலேகர்லாப் – ஸ்வீடன்  மலைப்பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டிருந்தாள். மெலிந்து குறுகியவள்தான். எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை. சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை

24

19. லதீபா

6 January 2024
0
0
0

மோஷி ஸ்மிலான் ஸ்கி  "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது." இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். ச

25

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்( பகுதி 1)

6 January 2024
0
0
0

1 அவர்களுடைய மூத்த பெண்ணின் படிப்பு அடுத்த மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. வயசும் 'அப்படி இப்படி' என்று சீக்கிரத்தில் பதினெட்டு ஆகிவிடும். டோ க்கியோவிலேயே நாகரீகத்திற்குப் பெயர் போன இடத்தில் நிலம் வாங

26

20. மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்(பகுதி 2)

6 January 2024
0
0
0

5 வரன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு 'கபூக்கி' நாடகக் கொட்டகையில் தரகர் இரண்டு 'பாக்ஸ்' களை அமர்த்தினார்; இரண்டு குடும்பங்களும் பக்கத்த

27

21. மணிமந்திரத் தீவு

6 January 2024
0
0
0

ஷேக்ஸ்பியர்  நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச்

28

22. மணியோசை

6 January 2024
0
0
0

ஜப்பான்  "நான் சாவதற்குப் பயப்படவில் லை" என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. "இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?" வேதனை

29

23. மார்க்ஹீம்

6 January 2024
0
0
0

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் – இங்கிலாந்து  "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறு

30

24. மிளிஸ்

8 January 2024
0
0
0

பிரட் ஹார்ட் – அமெரிக்கா  ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இரு

31

25. முதலும் முடிவும் ( பகுதி 1)

8 January 2024
0
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த,

32

25. முதலும் முடிவும் ( பகுதி 2)

8 January 2024
0
0
0

"பிரேதத்தின் மேலிருந்த எதையும் எடுத்தாயா?" "நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது இது அவன் பையிலிருந்து விழுந்தது." அது வெறும் தபால் கவர். தென் அமெரிக்கத் தபால் குறியிட்டு, "பாகட்ரிக் வாலன், ஸைமன் ஓட்

33

26. நாடகக்காரி

8 January 2024
0
0
0

ஆண்டன் ஷெக்காவ் – ருஷியா  அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில் லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்

34

27. நட்சத்திர இளவரசி

8 January 2024
0
0
0

ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள்  "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவி

35

28. ஓம் சாந்தி! சாந்தி!

8 January 2024
1
0
0

எலியா எஹ்ரன் பர்க்  (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன் னைப் பலிகொடுக்கத் தயாரானா

36

29. ஒரு கட்டுக்கதை

9 January 2024
0
0
0

பிரான்ஸ் காப்கா – ஆஸ்திரியா  எலி சொல்லுகிறது... "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே

37

30. ஒருவனும் ஒருத்தியும்

9 January 2024
0
0
0

லூயிகய்ல்லூ – பிரான்ஸ்  மச்சுப் படிக்கட்டு முற்றத்தில் இறங்கியது. அங்கே, அதாவது கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, அன்று காலை முழுவதும் அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ரொம்பவும் நெட்டை. ஒற்றை ந

38

31. பைத்தியக்காரி

9 January 2024
0
0
0

மொப்பஸான் – பிரான்ஸ்  "ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண் டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது" என்று கூறத் தொடங்கினார் முஸே டி' என

39

32. பளிங்குச் சிலை

9 January 2024
0
0
0

வாலரி புருஸ்ஸாப் வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக

40

33. பால்தஸார் (பகுதி 1)

9 January 2024
0
0
0

அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்  "கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன்

41

33. பால்தஸார்( பகுதி 2)

9 January 2024
0
0
0

ஜனநடமாட்டமில்லாத பாலைப் பிரதேசங்களில் மத்தியானம் வரை நடந்தனர். உச்சியில் சூரியன் வந்ததும், திருடர்கள் கைதிகளை விடுவித்து, பாறையின் நிழலில் உட்காரச் சொல்லி, கெட்டுப்போன ரொட்டித் துண் டைக் கொடுத்தனர். ப

42

34. பொய்

9 January 2024
0
0
0

லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா  "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!" "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது." இப்பொழுதும் பொய் சொன்னாள்

43

35. பூச்சாண்டியின் மகள்

10 January 2024
0
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து  அவள் பெயர் பத்தேமா. அவள் பாக்தாத் நகர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் நீலத்தாடிவாலாவின் புதல்வி. கண்டதும் காம வெறியை எழுப்பும் மோகனாங்கி. அவளது மதி முகத்தின் வ

44

36. ராஜ்ய உபாதை( பகுதி 1)

10 January 2024
0
0
0

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)  ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப

45

ராஜ்ய உபாதை( பகுதி 2)

10 January 2024
0
0
0

"அந்தக் கடிதம்..."  "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்ட

46

37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

10 January 2024
0
0
0

நதானியேல் ஹாதார்ண் – அமெரிக்கா  எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூற

47

38. சாராயப் பீப்பாய்

10 January 2024
0
0
0

எட்கார் அல்லன் போ – அமெரிக்கா  அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என் னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன்

48

39. சகோதரர்கள்

10 January 2024
0
0
0

யூஜோ யாம மோட்டோ – ஜப்பான்  'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில் லை; நான் பிடுங்க

49

40. சமத்துவம்

10 January 2024
0
0
0

ஒரு ருஷிய ஆசிரியர்  நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் த

50

41. ஷெஹர்ஜாதி - கதை சொல்லி

11 January 2024
0
0
0

ஹென்றி டிரெக்னியர் – பிரான்ஸ்அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில் லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் த

51

42. சிரித்த முகக்காரன்

11 January 2024
0
0
0

அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லே

52

43. சூனியக்காரி

11 January 2024
1
0
0

ரோனால்டு ஆக்டன் – இங்கிலாந்து அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல

53

44. சுவரில் வழி

11 January 2024
0
0
0

ஆர். முரே கில்கிரைஸ்– இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று

54

45. தாயில்லாக் குழந்தைகள்

11 January 2024
0
0
0

பிரான்ஸிஸ் பெல்லர்பி – இங்கிலாந்து வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் ம

55

46. தையல் மிஷின்

11 January 2024
0
0
0

இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

56

47. தந்தை மகற்காற்றும் உதவி

11 January 2024
1
0
0

லூயி கௌப்ரஸ் – ஹாலந்து டான் ஜுவான் தன் மாளிகையில் விருந்து மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று தரை வெடித்தது. நரக தூதர்கள் வந்து அவனை இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்

57

48. தெய்வம் கொடுத்த வரம்

12 January 2024
1
0
0

பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் – ஸ்வீடன்  இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட்

58

49. தேசிய கீதம் (பகுதி 1)

12 January 2024
0
0
0

எல்.ஏ.ஜி. ஸ்டராங் – இங்கிலாந்து  லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில் லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது.

59

49. தேசிய கீதம் (பகுதி 2)

12 January 2024
0
0
0

ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புற

60

49. தேசிய கீதம் (பகுதி 3)

12 January 2024
0
0
0

இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பய

61

50. துன்பத்திற்கு மாற்று

12 January 2024
1
0
0

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ – இத்தாலி  நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத்

62

51. துறவி

12 January 2024
0
0
0

ராபர்ட் நியூமான் – ஜெர்மனி  "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான். அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியி

63

52. உயிர் ஆசை (பகுதி 1)

13 January 2024
1
0
0

ஜாக் லண்டன் – அமெரிக்கா  அவர்கள் இருவரும் நொண்டி, நொண்டி ஆற்றங்கரை வழியாகத் தள்ளாடி நடந்தார்கள். கத்தி போல ஊசியாக, தெத்துக்குத்தாகக் கிடந்த பருக்கைக் கற்கள் காலை வெட்டின. அவர்களிருவரும் சோர்ந்து விட்

64

52. உயிர் ஆசை (பகுதி 2)

13 January 2024
1
0
0

நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினா

65

52. உயிர் ஆசை (பகுதி 3)

13 January 2024
1
0
0

பாறை மீது படுத்துக் கிடந்தவன் சுயப் பிரக்ஞையுடன் விழித்துக் கொண்டான். சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. காட்டு மான்குட்டிகளின் சப்தமும் தூரத்தில் கேட்டது. சித்தத்தின் அடிவானத்தில் மழையும் காற்றும் பனியு

66

53. வீடு திரும்பல்

13 January 2024
1
0
0

பீட்டர் எக் – நார்வே  மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுத

67

54. ஏ படகுக்காரா!

13 January 2024
1
0
0

மிக்கெய்ல் ஷோலொகோவ்  அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில் லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான்

68

55. யாத்திரை

13 January 2024
1
0
0

ஜான் கால்ஸ்வொர்த்தி  நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை

69

56. எமனை ஏமாற்ற...

13 January 2024
1
0
0

மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள

70

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

13 January 2024
1
0
0

தாமஸ் வுல்ப் – அமெரிக்கா  ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத

71

57. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்(பகுதி 2)

13 January 2024
1
0
0

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்

72

58. தர்ம தேவதையின் துரும்பு

13 January 2024
1
0
0

ஷேக்ஸ்பியர்  குரலிலே அதிகார தோரணையும் அதனுடன் பயமும் கலந்திருந்தது. கடுங்குளிரிலே, இருட்டின் திரைக்குள்ளே, ஈட்டிபோலப் பாய்ந்தது அக்குரல். 'நீ யார்? முதலில் அதைச் சொல்' என்று பதில் கேள்வி பிறந்தது, தி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்