எதையும் புரிந்துகொள்ளாமல், முட்டையைக் காண்பிப்பது, செங்கல்லைக் காண்பிப்பது என்று மக்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து என்று அமைச்சர் உதயநிதியை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சாடினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் முதுகலை படிப்புக்கான தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் சதவீதமாகக் குறைத்த மத்திய அரசைக் கண்டித்து ‘நீட்’ என்று எழுதப்பட்ட முட்டையைக் காட்டியதையடுத்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உதயநிதியின் செயலுக்கு எதையும் புரிந்துகொள்ளாமல் செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
எதையும் புரிந்துகொள்ளாமல், முட்டையைக் காண்பிப்பது, செங்கல்லைக் காண்பிப்பது என்று மக்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து என்று அமைச்சர் உதயநிதியை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சாடினார்.
நீட் தேர்வுக்கு எதிராக முட்டையைக் காட்டிப் பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை கடுமையாக சாடியுள்ளார். நீட் முதுகலை படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் சதவீதத்தை மத்திய அரசு பூஜ்ஜிய சதவீதமாகக் குறைத்தது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘நீட்’ என்று எழுதப்பட்ட முட்டையைக் காட்டி நீட் தேர்வுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்.
மாணவர்கள் முதுகலை நீட் தேர்வில் இடம் கிடைக்க வேண்டுமானால் தேர்வுக்கு சென்றால் மட்டும் போதும், பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றாலும் பரவாயில்லை என்று தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக முட்டையைக் காட்டிப் பிரசாரம் செய்தது குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், இந்த கல்வியாண்டுக்கு மட்டுமே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், உடற்கூறியல் மற்றும் உடலியல் போன்ற பாடங்களுக்கான மீதமுள்ள இடங்களை நிரப்ப மத்திய அரசு மூன்றாவது சுற்று கவுன்சிலிங்கின் போது முடிவெடுத்துள்ளது. பூஜ்ஜிய மதிப்பெண் எடுத்தால், எல்.கே.ஜி.யில் கூட சேர முடியாது, ஆனால், பூஜ்ஜியம் பெற்றாலும், மருத்துவ சீட் கிடைக்கும் உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார்” என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கத்தை நடத்தியது. அதில் தமிழக முதல்வரும் தி.மு.க செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் முதலில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தி.மு.க தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தி.மு.க நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது, “ஆட்சிக்கு வந்த உடனே முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்துக்கு போடப்படும் என்று சொன்னார்கள். முதல் கையெழுத்து நீட்டுக்கு எதிராகப் போட்டுவிட்டு தலையெழுத்தையே மாற்றுவேன் என்று சொன்னவர்கள், இன்று நீட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள். இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, மற்ற நேரத்தில் எல்லாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிவிட்டது என்று கூறுகிறார்கள். இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஆளும் கட்சியாக இருந்துகொண்டு அதை எதிர்த்து ஒரு கையெழுத்து இயக்கம் நடத்துகிறீர்கள். இதற்கு முன்னாள் மத்திய அரசில் இருந்தபோதுகூட அவர்கள் எந்த முயற்சியையும் செய்யவில்லை. அதனால், இது ஒரு கண் துடைப்புதான். இன்னொரு விஷய்ம் மறுபடியும், மறுபடியும் நான் சொல்கிறேன், நீட் தேர்வுக்கு தயார் செய்துகொண்டிருக்கும் மாணவர்களுக்கு தயவு செய்து அவநம்பிக்கையை ஏற்படுத்தாதீர்கள். அவர்கள் பாட்டுக்கு படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு மருத்துவக் கல்லூரிகள் வைத்திருப்பவர்கள் வீட்டில் இருந்து (ஐ.டி. ரெய்டில்) எவ்வளவு எடுத்தார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால், இதில் தயவு செய்து அரசியல் பண்ண வேண்டாம். முட்டை மார்க் வாங்கினால் எல்.கே.ஜி-யில் கூட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், முட்டை மார்க் வாங்கினால் மருத்துவக் கல்வியில் இடம் என்று சொல்கிறார். மருத்துவ உயர் கல்வியில் 3-வது கவுன்சிலிங்கில் மட்டும் மீதம் இருந்த இடத்துக்கு அதுவும் உடற்கூறியல், உடலியல் போன்ற படிப்புக்கு கொடுக்கப்பட்ட ஒரு தளர்வு, அதுவும் இந்த ஆண்டுக்கு மட்டும்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த இடங்கள் காலியாக இருக்கக் கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்டது. இதை எதையுமே புரிந்துகொள்ளாமல் முட்டையைக் காண்பிப்பது, செங்கல்லைக் காண்பிப்பது என்று மக்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து” என்று கூறினார்.