பலகட்ட சிக்கல்களை கடந்து லியோ படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கில் காலை 4 மணிக்கே திரையிடப்பட்டது
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில், படம் உடனடியான ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்தள்ள படம் லியோ. த்ரிஷா நாயகியாக நடித்தள்ள இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம்மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித் தயாரித்துள்ளார்.
பலகட்ட சிக்கல்களை கடந்து லியோ படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கில் காலை 4 மணிக்கே திரையிடப்பட்ட லியோ திரைப்படம் தமிழகத்தில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. வெளியானது முதலே விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் லியோ திரைப்படத்திற்கு பலரும் பாசிட்டீவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
லியோ படம் வரவேற்பை பெற்று வருவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தாலும், அதிர்ச்சியளிக்கும் விதமாக, லியோ படத்தின் 2-வது காட்சி முடிவதற்கு முன்பே படம் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் தங்களது கணக்குகளுக்கு அதிக ஃபாலேயர்கள் மற்றும் வரவேற்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தியேட்டரில் இருந்து பலரும் லைவ் ஸ்ட்ரீமிங் செய்துள்ளனர். இந்த சம்பவம் படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம், இணையத்தில் லீக் ஆகியுள்ள லியோ படத்தின் வீடியோவை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் இந்த படங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், இது தொடர்பான லிங்க்கள் குறித்து புகார் அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். படத்தின் முக்கிய ஸ்பாயிலர்களை உடைக்கும் வகையில் சில காட்சிகளும் வெளியாகியுள்ளது.