சென்னை: பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவாரம் தொடர் சிகிச்சையில் இருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சக்தி சரவணன்(10) பலியானார். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிறுவன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிழந்தார். ஒரு வாரம் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த சிறுவன், சிகிச்சை பலளின்றி பலியானார்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின வழிகாட்டுதலின் படி டெங்கு பரவலைக் குறைக்க எல்லா மாநிலங்களும் தீவிர நடிவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான தனி மருத்துவ பிரிவும் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அக்டோபர் 1ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் கொசு மற்றும் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சக்தி சரவணன் என்ற 10 வயது சிறுவன் இன்று காலையில் உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிறுவன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ரத்த அணுக்கள் குறைந்து வந்ததாக தெரிகிறது.
ஒரு வாரம் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த சிறுவன், இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த மாதம் தருமபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் ஏற்கனவே 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தது நினைவிருக்கலாம்.