சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து நேற்று வெளியான அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9.10.2023 மற்றும் 10.10.2023.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11.10.2023 மற்றும் 12.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35.36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாமைரி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) தலா 5. திரு.வி.கே.நகர் (சென்னை), கொட்டாரம் (கன்னியாகுமரி). குருந்தன்கோடு (ஈன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), ஆரணி (திருவண்ணாமலை) தலா 4. அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), கன்னியாகுமரி, சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை),செம்மேடு (விழுப்புரம்) தலா 1.