நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல், போக்குவரத்து சனிக்கிழமை தொடங்கியது. இந்நிலையில் போதிய அளவில் பயணிகள் முன்பதிவு செய்யவில்லை என்பதால் இன்று கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல், போக்குவரத்து சனிக்கிழமை தொடங்கியது. இந்நிலையில் போதிய அளவில் பயணிகள் முன்பதிவு செய்யவில்லை என்பதால் இன்று கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த கப்பல் தீ விபத்தால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாகை – இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை நேற்று காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் அமைச்சர் ஏ.வ.வெலு, கப்பல் போக்குவரத்தை தொடர்ந்து நடத்தவும், பயணிகளுக்கான கட்டணத்தை ரூ. 7600-ல் 50 % மத்திய அரசு பயணிகளுக்கு மானியமாக வழங்க ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
7 பேர் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ததால் இன்றைய பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நாளை மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.