வந்தே பாரத் ரயில்களில் முழு பயணங்களுக்கு ஒரே குழுவை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரயிலில் பல்வேறு விதிகள் மாற்றப்பட்டு வருகின்றன. இதன் இயக்கம் தொடர்பாக பல முக்கிய விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட வந்தே பாரத் ரயில்களை சுத்தம் செய்வதில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டன. 15 நிமிடத்தில் வந்தே பாரத் ரயில்களை சுத்தம் செய்வதற்கான நடைமுறை கொண்டு வரப்பட்டது.
மொத்த ரயிலையும் 15 நிமிடத்தில் சுத்தம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான திறமையான பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில்தான் வந்தே பாரத் ரயில்களில் முழு பயணங்களுக்கு ஒரே குழுவை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஓட்டுநர் முதல் பணியாளர்கள் வரை அடங்கிய ஒரே குழு முழு பயணத்திற்கும் பணி செய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் வரை ஒரே குழு பணி செய்யும். அதன்படி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் இப்போது இடையில் திருச்சியில் குழு மாறும்.
ஓட்டுநர் முதல் பணியாளர்கள் வரை அடங்கிய ஒரே குழு முழு பயணத்திற்கும் பணி செய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் வரை ஒரே குழு பணி செய்யும். அதன்படி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் இப்போது இடையில் திருச்சியில் குழு மாறும்.
சமையல் செய்பவர்கள் குழு, ஓட்டுநர், சுத்தம் செய்பவர்கள், நடத்துனர்கள் மாற்றப்படுவார். ஆனால் இனி அப்படி இருக்காது. இடையே குழு மாறும் முறை தற்போது உள்ளது: இனி குழு மாற்றப்படாது. இனி முழு பயணத்திற்கும் ஒரே குழு இயங்கும். ஒரே குழு முழு பயணத்திற்கும் பணி செய்வதால் அசதி ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.