க்ளாசிக் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள சரோஜா தேவி, தனது காலக்கட்டத்தில் முக்கிய காமெடி நட்சத்திரமாக விளங்கிய நாகேஷூடன் மிகுந்த நட்புடன் இருந்துள்ளார்.
க்ளாசிக் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அறியப்படும் சரோஜா தேவி, நடிகர் நாகேஷின் நிகழ்ச்சிக்காக தனது லண்டன் பயணத்தையே கேன்சல் செய்துவிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற சுவாரஸ்யமாக சம்பவம் நடந்துள்ளது.
1955-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான மகாகவி காலிதாஸா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சரோஜா தேவி, ஜெமினி கணேசன் சாவித்ரி இணைந்து நடித்த திருமணம் என்ற் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, நாடோடி மன்னன், அன்பே வா, எங்க வீட்டு பிள்ளை, பணத்தோட்டம் உள்ளிட்ட பல படங்களில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் நாயகியாக நடித்திருந்த சரோஜா தேவி, தனது காலக்கட்டத்தில் முக்கிய காமெடி நட்சத்திரமாக விளங்கிய நாகேஷூடன் மிகுந்த நட்புடன் இருந்துள்ளார். இதனிடையே நாகேஷ் தனது வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்து தகவல்களை புத்தகமாக எழுதியிருந்தார். சிரிந்து வாழ வேண்டும் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தின் வெளியீடடு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த புத்தக வெளியீட்டு விழாவை அன்றைய காலக்கட்டத்தில் சினிமாவில் பிரபலமான இருந்த நல்லி குப்புசாமி செட்டியார் நடத்தி கொடுக்க வேண்டும் என்று நாகேஷ் விருப்பப்பட்டுள்ளார். அதற்காக அவரிடம் கேட்டபோது அவரும் ஒப்புக்கொண்டு விழாவிற்கான ஏற்பாட்டை செய்ய தொடங்கினார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகை சரோஜா தேவிக்கு அழைப்பு விடுத்தார் நல்லி குப்புசாமி செட்டியார்.
க்ளாசிக் தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் நடிகர் நடிகைள் என தனது நட்பு வட்டாரத்தை பெரியதாக வைத்திருந்த நல்லி குப்புசாமி செட்டியாருக்கு நாகேஷ் சரோஜா தேவி இருவருமே நெருங்கிய நட்பில் இருந்துள்ளனர். அதேபோல் சரோஜா தேவி – நாகேஷ் இடையே நெருங்கிய நட்பு இருந்துள்ளது. இதன் காரணமாக நாகெஷ் விழாவுக்கு நல்லி குப்புசாமி அழைத்ததும் சரோஜா தேவி வருவதாக ஒப்புக்கொண்டார்.
ஆனால் அந்த விழா நடக்க இருந்த நாளில் லண்டன் செல்வதாக இருந்துள்ளார் சரோஜா தேவி. ஆனாலும் நாகேஷ் விழா அழைத்தது நல்லி குப்புசாமி செட்டியார் என்பதால் லண்டன் பயணத்தை கேன்சல் செய்துவிட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சரோஜா தேவி. நான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் இவர்கள் இருவரும் தான்.
நாகேஷூடன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். அவரின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அப்படிப்பட்ட சிறந்த நடிகரின் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க வேண்டும் என்று விரும்பியதாலும், நல்லி குப்புசாமி ஒரு விஷயத்தை சொல்லிவிட்டால் அதை எப்போதும் நான் தட்டமாட்டேன் அந்த அளவுக்கு நல்ல மனிதர். அதன் காரணமாகத்தான் அந்த விழாவில் கலந்துகொண்டேன் என்று சரோஜா தேவி கூறியதாக நடிகரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.