பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
சென்னையில் இன்று (அக்டோபர் 18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக முகலிவாக்கம், அம்பத்தூர், செங்குன்றம் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
முகலிவாக்கம்
லலிதாம்பாள் நகர், குமுதம் நகர், ஐயப்பன் கோவில், டி.வி. நகர், பூந்தமல்லி மெயின் ரோடு நந்தம்பாக்கம் சி.ஆர்.ஆர் புரம், எல்& டி காலனி, எம்.ஜி.ஆர் நகர், காஸா ஐரின், ஸ்ரீராம் கார்டன், இந்திரா நகர், தர்மராஜபுரம் ராமாபுரம் காலசத்தம்மன் கோவில், அஷ்வின் அம்ரிஷா, செல்லாம்மாள் நகர், முகாம்பிகை தெரு, வள்ளுவ சாலை புழுதிவாக்கம் செங்காளியம்மன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, சாரதி நகர், மூவரசம்பேட்டை கணேஷ் நகர், மேடவாக்கம் மெயின் ரோடு, ஐயப்பா நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர்
அய்யப்பாக்கம் ஐ.சி.எப். காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, திருவேற்காடு மெயின் ரோடு, அத்திபட்டு வானகரம் ரோடு, தினேஷ் தெரு, ரோஜா தெரு, பச்சையப்பா நகர், அக்ரஹாரம், எழில் நகர், அன்னனூர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
செங்குன்றம்
சோத்துபெரும்பேடு செக்கஞ்சேரி, நெற்குன்றம், புதுக்குப்பம், கன்னியம்பாளையம், மாபிஸ்கான்பேட் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.