கன்னியாகுமரி மாவட்டத்தின் 53ஆவது காவல்துறை கண்காணிப்பாளராக சுந்தரவதனம் இன்று (அக்.19) பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், மாவட்டத்தின் 53ஆவது எஸ்பி ஆகும்.
கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஹரிகரன் பிரசாத் கடலோர காவல் படை போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார்.இதையடுத்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வதனம் நியமனம் செய்யப்பட்டார்.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதம் இன்று (வியாழக்கிழமை) நாகர்கோவில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து 53ஆவது எஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன்பிரசாத் பொறுப்புகளை ஒப்படைத்து,கை குலுக்கி கொண்டனர்.புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனந்திற்கு ஏடிஎஸ்பிபிகள் டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “குமரி மாவட்டம் சுற்றுலாத்தலங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். இங்குள்ள சுற்றுலா தலங்களில் குற்றங்களை தடுக்கவும் போக்குவரத்தை சீர் செய்யவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும். குற்றச் சம்பவங்கள் மீது உடனடி வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
போதை பொருளை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வோம். குட்கா கஞ்சா அறவே இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டம் திகழ பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.பொதுமக்கள் இது தொடர்பாக ஏதாவது தகவல் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். தகவலை தெரிவிக்க தயங்க கூடாது.
பெண்கள் குழந்தைகள் மீதான குற்றங்கள் மீது புகார் அளிப்பதில் தயக்கம் காட்டக்கூடாது. பொதுமக்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எனது தொலைபேசி எண்ணில் தங்களது புகார்களை வாட்ஸ் அப் மூலமாக தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்களும் போலீசும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். பொது மக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் புகார்களை அளிக்கலாம்.
புதன்கிழமைகளில் புகார் அளிக்க வரும்போது அனைத்து துறை அதிகாரிகளும் இருப்பதால் அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.இவர், ஏற்கனவே கரூர் செங்கல்பட்டு சென்னை மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.