அணு விஞ்ஞானி, மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத், ராமநாதபுரம் சென்றார்.
அங்கு எம்.பி. நவாஸ் கனி, அப்துல் கலாம் குடும்பத்தினர் ஆகியோரை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மாரத்தான் போட்டியையும் தொடங்கிவைத்தார்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஏ.பி.ஜே அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தினார்கள்.இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏ.பி.ஜே அப்துல் கலாம் திருவுருவ சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “பெருமைமிகு அரசுப் பள்ளியில் பயின்று தனது அறிவுத்திறத்தால் நாட்டின் முதல் குடிமகனான அறிவியலாளர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில், அவர் பயின்று - பயிற்றுவித்த அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையைத் திறந்து.
படித்து முன்னேறும் இந்த இளைஞர் பட்டாளத்தின் தன்னம்பிக்கை, அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றும்! அறிவியல் பார்வையோடு உலக அரங்கில் இந்தியா சிறந்து விளங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் 2022-2007 வரை நாட்டின் 11வது குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்தார். இவர் 2015ஆம் ஆ்ணடு ஜூலை 27ஆம் தேதி ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் மறைந்தார்.