கட்டிட முகப்பு துணை மேற்புற ஜாயின்ட்டில் விரிசல் விட்டுள்ளது . சுற்றுசுவர் இடிந்து பாதுகாப்பற்ற நிலையில் செயல்படும் இம்மருத்துவமனையில் புதர்மண்டி கிடக்குது மேலும் முகப்பு தூண் இரண்டும் விரிசல் விட்டுள்ளது
கோவை மாநகராட்சி 52-வது வார்டு கல்லூரி நகர் பகுதியில் அரசு நகர்புற நல்வாழ்வு மையம் ரூ. 25லட்சம் செலவில் கட்டப்பட்டு கடந்த 06.06.2023 அன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இந்நிலையில் கட்டிட முகப்பு துணை மேற்புற ஜாயின்ட்டில் விரிசல் விட்டுள்ளது . சுற்றுசுவர் இடிந்து பாதுகாப்பற்ற நிலையில் செயல்படும் இம்மருத்துவமனையில் புதர்மண்டி கிடக்குது மேலும் முகப்பு தூண் இரண்டும் விரிசல் விட்டுள்ளது.
பேட்ச் ஒர்க் பண்ணினாலும் விரிசல் நாளுக்கு நாள் பெரியதாகி எப்போதும் மொத்தமாக சரியும் நிலையில் மக்கள் உயிருக்கு அச்சம் தரும் வகையில் உள்ளதால் இக்கட்டிடம் விரைவில் புணரமைக்க வேண்டும். மேலும் விபத்துக்கு பின் அரசும் அதிகாரிகளும் விழித்துக் கொள்ளும் சூழ்நிலை இல்லாமல் உடனே இக்கட்டிடத்தின் பேட்ச் ஒர்க்கை சரி செய்து பொதுமக்களின் பாதுகாப்பான பயன்பாட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தகவல் கோரிக்கை வைத்தனர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.நான்கு மாதம் முன் கட்டப்பட கட்டிடம் தரமற்று பேட்ச் ஒர்க் செய்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.