நடப்பு ஆசிய போட்டிகள் நிறைவு பெற இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், இந்தியா 100 பதக்கங்களை வென்று குவிக்க வாய்ப்புள்ளது. அப்படி நடக்க இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த போட்டி தொடரின் 12-வது நாளான இன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா பதக்கங்களை அள்ளி வருகிறது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டு தொடரில் 21 தங்கம், 32 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 86 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில், ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்தியா 100 பதக்கம் வெல்லுமா? என்கிற ஆவல் கோடிக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் குடிகொண்டுள்ளது.
ஏற்கனவே இந்தியா கடந்த 2018 ஆசிய விளையாட்டு போட்டியில் குவித்த 70 பதக்கம் சாதனையை முந்தியுள்ளது. நடப்பு ஆசிய போட்டிகள் நிறைவு பெற இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், இந்தியா 100 பதக்கங்களை வென்று குவிக்க வாய்ப்புள்ளது.