கலைஞர் உயிரிழந்தபோது அழகிரி ரொம்ப உடைந்துவிட்டார்; காந்தி அழகிரிக்கும் துர்கா ஸ்டாலினுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை; அழகிரி மகள் கயல்விழி பேட்டி
கட்சியை விட்டு நீக்கியபோது, அழகிரி உடைந்துவிட்டார், கலைஞர் இப்படி செய்வார் என எதிர்ப்பார்க்கலை. இன்னும் அந்த வருத்தம் இருக்கு என அழகிரி மகள் கயல்விழி தெரிவித்துள்ளார்.மு.க.அழகிரி மகள் கயல்விழி ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்கு அழகிரி குறித்தும், கலைஞர் குடும்பம் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
அதில், தாத்தாவுக்கும் (கலைஞர் கருணாநிதி) அப்பாவுக்குமான (அழகிரி) உறவு சிறப்பாக இருந்தது. அழகிரியை கட்சியை விட்டு நீக்கியபோது, அழகிரி கோபாலபுரம் சென்று கருணாநிதியை பார்த்தார். அப்போது இருவரும் ரொம்ப எமோஷ்னல் ஆகி கட்டிபிடித்து அழுதாங்க. கட்சியை விட்டு நீக்கியபோது, அழகிரி உடைந்துவிட்டார், கலைஞர் இப்படி செய்வார் என எதிர்ப்பார்க்கலை. இன்னும் அந்த வருத்தம் இருக்கு.
மீண்டும் கட்சியில் சேர அழகிரிக்கு ஆசையிருக்கு. அ.தி.மு.க கோட்டையாக இருந்த தென்மண்டலத்தை கைப்பற்றி தி.மு.க கோட்டையாக மாற்றியவர் அழகிரி. கலைஞர் உயிரிழந்தபோது அழகிரி ரொம்ப உடைந்துவிட்டார். மீண்டும் கலைஞரோடு சுமுக உறவில் ஈடுபட முயன்ற நேரத்தில், அவர் உயிரிழந்ததால், கடைசி நேரத்தில் அதை முடியாததால் அழகிரிக்கு நிறைய வருத்தம் இருக்கு.
தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் அழகிரிக்கு சந்தோஷம் தான். அழகிரியை பொறுத்தவரை எப்போதும் தலைவர் என்றால் கலைஞர் தான். வேறு எந்த கட்சியிலும் சேர அழகிரி விரும்பவில்லை.ரஜினியோடு அழகிரி எப்போதும் நல்ல நண்பராக இருந்து வருகிறார். அம்மாவுக்கும் (காந்தி அழகிரி) சித்திக்கும் (துர்கா ஸ்டாலின்) நல்ல உறவு இருந்து வருகிறது. வெளியில் சொல்வது போல் எந்தப் பிரச்சனையும் இல்லை.
அழகிரி அம்மா தயாளு அம்மாள் என்றால் உயிர். தயாளு அம்மாளுக்கு ஆப்ரேஷன் செய்து கண்விழித்த பிறகு அழகிரியைத் தான் அழைத்தார். அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் நெருக்கம்.அழகிரிக்கு தேசிய அரசியலை விட மாநில அரசியலிலே ஆர்வம் அதிகமாக இருந்தது. அவர் ஆங்கிலம் தெரியாமல் திணறுகிறார் என்று எல்லாரும் சொன்னாங்க. ஆனால் அழகிரி அமைச்சராக சிறப்பாக பணியாற்றி வந்ததை நிறைய பேர் பாராட்டியிருக்காங்க. இவ்வாறு கயல்விழி பேசியுள்ளார்.