உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ அமைப்பை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமனும் பிசிசிஐ அமைப்பை விமர்சனம் செய்துள்ளார். இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய ஆப்கானிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.
3 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்களை எடுத்து ஆப்கானிஸ்தான் ஆடி வருகிறது. இந்திய அணியில் அஸ்வின் நீக்கப்பட்டு உள்ளார். ஷரத்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். டெல்லியில் இந்த மேட்ச் நடந்து வருகிறது. ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் , ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமர்சனம்: கடந்த உலகக் கோப்பை வரை.. 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது என்றாலே பெரிய அளவில் கொண்டாட்டமான மனநிலை இருக்கும். மக்கள் பலரும் இதற்காக காத்து இருப்பார்கள் . தொடர் தொடங்குகிறது என்றாலே பெரிய எதிர்பார்ப்பு மனநிலை இருக்கும். ஆனால் இந்த முறை அப்படி கொண்டாட்டமான மனநிலை இல்லை.
உதாரணமாக முதல் போட்டி நடந்த அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பெரிதாக கூட்டமே இல்லை. முதல் போட்டி நடந்த போதே பிசிசிஐ அமைப்பின் செயலாளராக இருக்கும் ஜெய் ஷா கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.மைதானத்தில் 10000 பேர் கூட இல்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டது. 1.5 லட்சம் பேர் இருக்க வேண்டிய மைதானத்தில் வெறும் 15000 பேர் கூட இல்லை.உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இந்த நிலைமை. அதுவும் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டியில் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால்தான் செயலாளர் ஜெய் ஷா கடுமையாக விமர்சனம் வைக்கப்பட்டது.
ஐசிசி உலகக் கோப்பை 50 ஓவர் தொடர் 2023க்கு பொறுப்பான பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா, இந்தியா நடத்தும் மிகப்பெரிய தொடரின் தொடக்க ஆட்டத்தில் தனது சொந்த மாநிலத்தில் 50% மைதானம் கூட நிரம்பியிருப்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. டிக்கெட் சரியாக விற்கப்படவில்லை. மிகக் குறைந்த அளவிலான டிக்கெட்டுகள் மட்டுமே உண்மையான ரசிகர்களுக்குக் கிடைத்தன. கடைசி வரை இவர்கள் டிக்கெட்டை விற்கவில்லை என்பது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
தர்மசாலா: அதேபோல் தர்மசாலா மைதானம் மோசமாக இருக்கிறது. மைதானத்தில் ஓடவே முடியவில்லை. ஈரமாக இருக்கிறது. புல் தரை மோசமாக உள்ளது. புல் தரை ஈரமாக சொத சொதவென்று இருக்கிறது. இதனால் அங்கே ஆட முடியவில்லை என்று கிரிக்கெட் வீரர்கள் பலர் கூறி இருந்தனர். இதன் காரணமாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்பட்டது.