023-ம் ஆண்டின் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது குறித்து சமீபத்தில் நாக்ரி தளம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. புதிய பதவிகள், மாற்று பணியாளர்கள் அல்லது இரண்டும் கலந்தது என அடுத்து வரப்போகிற ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மிகவும் எதிர்பார்த்து கொண்டிருப்பதாக அந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற 92% ரெக்ரூட்டர்ஸ் கூறியுள்ளனர்.
வேலைவாய்ப்புச் சந்தை எப்படி இருக்கிறது என்பது பற்றிய பல விரிவான தகவல்களை இந்த கணக்கெடுப்பு விவரித்துள்ளது. அலுவலகங்களில் ஏற்கனவே வேளையில் இருக்கும் ஒருவருக்கு மாற்றாக இன்னொருவர் மற்றும் புதிய நபர்கள் என இரண்டு கலந்துதான் புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இருக்கும் என 47% ரெக்ரூட்டர்ஸ் கணித்துள்ளனர். மிகவும் ஸ்பெஷலான, உயர்ந்த புதிய பதவிகள் உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்ப்பதாக 26% ரெக்ரூட்டர்ஸ் கூறியுள்ளனர். அடுத்த ஆறு மாதங்களுக்கு புதிதாக பணியாளர்கள் யாரையும் தேர்ந்தெடுக்கும் திட்டம் இல்லை என 20% ரெக்ரூட்டர்ஸ் கூறியுள்ளனர்.
இந்தக் கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் வெறும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே, இந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பணிநீக்கம் அல்லது ஆட்குறைப்பு நடவடிக்கைகள் இருக்கும் என கணித்துள்ளனர்.
அடுத்த ஆறு மாதங்களில் பிசினஸ் டெவலப்மெண்ட், மார்கெட்டிங், ஆபரேஷன்ஸ் போன்ற பதவிகளில் அதிக அளவில் ஆட்சேர்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, நடுத்தர அணுபவம் கொண்ட பணியாளர்களையும் புதிதாக வேலைக்கு சேர்பவர்களையும் வேலைக்கு எடுக்க அதிக போட்டி இருக்கும் என்றும் இந்த கணக்கெடுப்பு கணித்துள்ளது.
இந்த கணக்கெடுப்பில் பணியை விட்டு விலகுபவர்களின் எண்ணிக்கை எந்தளவிற்கு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் பணியாளர்கள் வேலையை விட்டு விலகும் விகிதம் 15 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என 70% ரெக்ரூட்டர்ஸ் கூறியுள்ளனர். வேலைவாய்ப்புச் சந்தையில் நிச்சியமற்ற தன்மை நிலவுவதால், தற்போதைய பணியை தக்கவைக்கவே பலரும் விரும்புவது இதன் மூலம் தெரிய வருகிறது. எனினும், பிசினஸ் டெவலப்மெண்ட், மார்கெட்டிங், மனித வளம் போன்ற பணிகளில் அதிக பணி விலகல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.