அமைச்சர்கள் அலுவலகம் தவிர பொதுமக்கள் கூடும் இடங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.இந்த கேமராக்களை இம்மாதம் 31ம் தேதிக்குள் நிறுவி பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்ப்டடு உள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் பாதுகாப்பினை அதிகரிக்கும் பொருட்டு, 64 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டன.புதுச்சேரி சட்டசபைக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க வருகின்றனர்.
அவர்களிடம் போலீசார் மற்றும் சட்டசபை பாதுகாவலர்கள் விசாரணை நடத்தி, சட்டசபை வளாகத்திற்குள் அனுப்பி வைக்கின்றனர்.
இதற்கிடையில் சட்டசபையின் பாதுகாப்பினை பலத்தப்படுத்தும் வகையில், சட்டசபை வளாகம் முழுவதும் 64 இடங்களில் சி.சி.டி.வி., மேமராக்கள் பொருத்தும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
அமைச்சர்கள் அலுவலகம் தவிர பொதுமக்கள் கூடும் இடங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.இந்த கேமராக்களை இம்மாதம் 31ம் தேதிக்குள் நிறுவி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சபாநாயகர் செல்வம் உத்தரவின்பேரில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.