சென்னை: சாதிப்பதற்கு உடல் ஒரு தடையாக இருக்கக் கூடாது. அதை மனதில் வைத்து இரண்டு இளம் மாற்றுத்திறனாளி வீரர்களுக்குக் கிட்டத்தட்ட 14.50 லட்ச ரூபாய் செலவில் செயற்கைக் கால் உபகரணத்தை வழங்கி உள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கே.ராஜேஷ் மற்றும் கே.கலைச்செல்வன் ஆகிய இரண்டு மாற்றுத்திறனாளி வீரர்களும் ஏதோ ஒரு விபத்துக் காரணமாக தங்களின் கால்களை இழந்தவர்கள். காலை இழந்தபிறகும் தங்களின் விளையாட்டுத்துறை மீது வைத்திருந்த இலட்சியக் கனவை இழந்திடக்கூடாது என்று போராடி வந்துள்ளார்கள் இந்த இருவரும்.
ஆகவே பல கட்டப் போராட்டங்கள் மூலம் தங்களின் தடகள கனவைக் கருகவிட்டுவிடாமல் தொடர்ந்து விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால், அவர்களின் பொருளாதாரத்தில் வாங்கிய செயற்கை கால் உபகரணங்களால், இலக்கை எட்டிப் பிடிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நிலவி உள்ளன. அந்த வேளையில்தான் தங்களின் லட்சிய கனவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். என்ன நடந்தது இந்த வீரர்கள் வாழ்க்கையில்? உதயநிதி செய்த உதவியால் நடந்துள்ள மாற்றம் என்ன? இதற்கான எல்லா பதில்களையும் அவர்களே தந்தார்கள்.
"என் பெயர் கலைச்செல்வன். நான் ஒரு பாராலிம்பிக்ஸ் வீரர். திருச்சியில்தான் தங்கி பயிற்சி எடுத்துவருகிறேன். எனக்கு ஐந்து வயது இருக்கும்போது ஒரு விபத்தில் சிக்கி என் காலை இழந்துவிட்டேன். ஆனாலும் எனக்கு ஓட்டத்தின் மீதுள்ள ஆர்வம் குறையவே இல்லை. ஆகவே தொடர்ந்து அதற்கான போட்டிகளில் பங்கெடுத்து விளையாடி வந்தேன். இதற்கு முன்னதாக 100 மீட்டர் தூரத்தை 11.09 செகண்ட்டில் கடந்திருக்கிறேன்" என்கிறார் இவர். இவரைப் போலவே உதயநிதி மூலம் உதவி பெற்ற மற்றொருவர் என்ன சொல்கிறார்? அதைக் கேட்டோம். அவர், "என் பெயர் ராஜேஷ். நானும் ஒரு பாராலிம்பிக்ஸ் வீரர்தான். சென்னையில்தான் நான் வசித்துவருகிறேன். கந்த 6 வருடங்களாக பாராலிம்பிக்ஸ் ஸ்போர்ட்சில் ஈடுபட்டு வருகிறேன்.
நான் ஓடுவதைப் பார்த்துவிட்டு, என் பயிற்சியாளர் 'உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. தீவிரமாகப் பயிற்சி எடு' என்றார். இதற்கு முன்னால் எனக்கு ஒரு ஈவெண்ட் மூலமாகச் செயற்கை கால் உபகரணம் கிடைத்தது. அதில் என்ன பிரச்சினை என்றால், அது அந்தளவு தரமானதாக இல்லை. ஓரளவுக்குத்தான் அந்த ப்ளேட்டை வைத்து ஓட முடிந்தது. அதில் அப்டேட் வெர்ஷன் தேவைப்பட்டதால், மேற்கொண்டு போட்டிகளில் கலந்துகொள்வதில் தடைகள் இருந்தன" என்கிறார். இந்த இருவருக்கும் உதவியது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "திறமையாளர்களின் கனவுக்கும் - சாதனைக்கும் தடையேதும் இருக்கக் கூடாது என்பதே நம் திராவிட மாடல் அரசின் லட்சியம்.