அரபிக்கடலில் உருவாகி உள்ள தேஜ் புயலானது இன்று மிகத்தீவிர புயலாக உருவெடுக்கிறது,அரபிக்கடலில் உருவாகி உள்ள தேஜ் புயலானது இன்று மிகத்தீவிர புயலாக உருவெடுக்கிறது.அக்டோபர் 19ம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அன்று நள்ளிரவிலேயே ஆழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. தென்மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டு உள்ளது.இந்நிலையில் நேற்று இந்த புயல் தீவிர புயலாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் இந்த புயலானது அதிதீவிர புயலாக மாறி, வருகின்ற 25ம் தேதி அதிகாலை ஓமன் மற்றும் ஏமன் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தென்மேற்கு அரபிக் கடலில், நிலைகொண்டுள்ள இந்த அதிதீவிர தேஜ் புயல், இன்று மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறுகிறது. இது நாளை மறுநாள் அதிகாலை ஓமன் மற்றும் ஏமனுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என்று கூறப்படுகிறது. ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் உள்ளது.
வங்கதேசத்தின் சிட்டகாங்- கேபுரா இடையே அக்டோபர் 25 மாலையில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இன்று தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் மயிலாடுதுறை, தேனி, தென்காசி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.