மயிலாப்பூர் கபாலீசுவரர் திருமண மண்டபத்தில், திருக்கோயில்கள் சார்பில் நவராத்திரி பெருவிழா கொலுவுடன் அக்டோபர் 15 முதல் 24 வரை கொண்டாடப்படுகிறது.
சென்னை மயிலாப்பூரில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்பட்ட நவராத்திரி விழாவை, முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது எடுத்த புகைப்படங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் திருமண மண்டபத்தில், திருக்கோயில்கள் சார்பில் நவராத்திரி பெருவிழா கொலுவுடன் அக்டோபர் 15 முதல் 24 வரை கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு நாள் நிகழ்வின்போதும், மாலை சிறப்பு வழிபாடும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.