விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க சின்னத்திரை மற்றும் பெரியதிரையில் நடிக்கும் முக்கிய நடிகர் இணைந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க சின்னத்திரை மற்றும் பெரியதிரையில் நடிக்கும் முக்கிய நடிகர் இணைந்துள்ளார்.விஜய் டிவியில் கடந்த 2018-ம் ஆண்டுமுதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் கூட்டுக் குடும்பத்தின் நன்மைகளையும் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் கதையாகக் கொண்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், ஹேமா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியளின் கிளைமாக்ஸ் காட்சிகள் இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ளது.இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அக்டோபர் 30-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 சீரியலில் மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்டாலின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும் தொடர்ந்து நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தனம் கதாபாத்திரத்தில் நிரோஷா நடிக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் அண்ணன் - தம்பி பாசத்தை மையமாக எடுக்கப்பட்ட நிலையில், இரண்டாவது பாகம் தந்தை மகன்கள் பாசத்தை மையமாகக் கொண்ட கதை எனபது தெரிகிறது.