பிரதமர் மோடி செல்கிற மாநிலங்களில் எல்லாம் தமிழ்நாட்டில் ஆளும் திமுகவை விமர்சனம் செய்து வருகிறார். அவரின் தொடர் பேச்சுகள் விமர்சனங்களுக்கு பின் 3 முக்கிய காரணங்கள் உள்ளன.
பிரதமர் மோடி தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் பேசுகையில், தமிழ்நாட்டில் கோவில்கள் நிர்வகிக்கப்படும் விதம் பற்றி விமர்சனங்களை முன்வைத்தார். தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலடி தந்த முதல்வர் ஸ்டாலின், கோயில்களை தமிழ்நாடு அரசு அபகரித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்தார். பிரதமர் யாருக்காக பேசுகிறார்? யாருடைய குரலை எதிரொலிக்கிறார்?; கடந்த 2 ஆண்டுகளில் 1,000 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம்; இது தவறா?; வரலாற்று சிறப்புமிக்க 112 கோயில்களை சீர்செய்ய 7100 கோடி ஒதுக்கீடு செய்தது தவறா?; 2 ஆண்டுகளில் | T3,500 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன ம.பி., அந்தமான், தெலங்கானா என எங்கு போனாலும் தமிழ்நாட்டை பற்றித்தான் பேசுகிறார்; பிரதமரால் மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று பதிலடி கொடுத்தார்.
மோடி விமர்சனங்கள்; தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் பகுதியில் மட்டும் மோடி இப்படி பேசவில்லை. மோடி இதற்கு முன்பே திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். முன்னதாக பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்த போது அந்தமானில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் கலந்து கொள்ளும் நிலையில் திமுகவை மட்டும் குறிப்பிட்டு தனியாக தாக்கி பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.