அப்போது, நீதிபதி ஹீமா கோலி, “கரு கலைக்க அனுமதி மறுத்துவிட்டார். நீதிபதி நாகரத்னா, “கருச்சிதைவு செய்வதில் உறுதியாக இருக்கும் பெண்ணின் முடிவை நீதிமன்றம் மதிக்க வேண்டும்” என்றார்.
26 வார கருவை கலைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குழந்தையை கொல்ல முடியாது என்று வியாழக்கிழமை (அக்.12) கூறியது.இந்த வழக்கு விசாரணையின்போது கருவின் இதயத்தை நிறுத்த எய்ம்ஸ் மருத்துவர்களிடம் நாங்கள் கூற விரும்புகிறீர்களா," என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனுதாரரின் வழக்கறிஞரை பார்த்து கேட்டனர்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை செய்துவருகிறது.இநத அமர்வில், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்த வழக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது ஒரு நீதிபதி கருக்கலைப்புக்கு அனுமதியும், மறுநீதிபதி கருக்கலைப்புக்கு அனுமதி மறுத்தும் விட்டார். எனினும் கருக்கலைப்பில் 27 வயது பெண் உறுதியாக காணப்பட்டார்.
அப்போது, நீதிபதி ஹீமா கோலி, “கரு கலைக்க அனுமதி மறுத்துவிட்டார். நீதிபதி நாகரத்னா, “கருச்சிதைவு செய்வதில் உறுதியாக இருக்கும் பெண்ணின் முடிவை நீதிமன்றம் மதிக்க வேண்டும்” என்றார்.24 வாரங்கள் வரை கருக்கலைப்பு இரண்டு மருத்துவர்களின் கருத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை அல்லது பாலுறவில் இருந்து தப்பிய பெண்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.
அதேபோல், சிறார்கள், உடல் அல்லது மனநல குறைபாடுகள் உள்ள பெண்கள் உள்ளிட்டோருக்கும் அனுமதிக்கப்படுகிறது.இந்தக் காலகட்டத்திற்கு மேல் கருக்கலைப்பு மருத்துவ குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் அனுமதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.