நிகழ்ச்சியின் முதல் நாளே படிப்பு தொடர்பாக ஜோவிகா – விசித்ரா இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் நிகழச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில். இந்த வாரத்திற்கான நாமினேஷனில், நடிகை ரவீனா அழகி ஆனால் அவருக்கு மூளை இல்லை என்று பேசியது தொடர்பான ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கிங்கியது. நடிகை விசித்ரா, ரவீனா, விணுஷா தேவி, ஜோவிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சி முதல் நாளில் இருந்தே பாரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
படிப்பு தொடர்பாக ஜோவிகா – விசித்ரா இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து முதல் வாரத்தில் அனன்யா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், எழுத்தாளரும் நடிகருமான பவா செல்லதுரை தன்னால் இனி இங்கு இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
வழக்கத்திற்கு மாறாக இரு வீடுகள், இரு நாமினேஷன் என பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் குறித்த ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் பலரும் மாயாவை நாமினேட் செய்வதாக கூறியுள்ளனர். அதேபோல் தனது முடிவை அறிவித்த நடிகை ரவீனா, அவர் அழகாக இருக்கிறார் ஆனால் மூளை இல்லை என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.ரவீனா அப்படி யாரை சொன்னார் என்பது குறித்து ப்ரமோவில் குறிப்பிடாத நிலையில், தற்போது இந்த ப்ரமோ வைரலாகி வருகிறது.