பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை முதலில் அகற்றுவோம் என அண்ணாமலை பேச்சு; கனிமொழி எம்.பி பதிலடி
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை முதலில் அகற்றுவோம் என அண்ணாமலை தெரிவித்ததற்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை முதலில் அகற்றுவோம் என அண்ணாமலை தெரிவித்ததற்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை முதலில் அகற்றுவோம் என அண்ணாமலை தெரிவித்ததற்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில், தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் சங்கத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு, தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் சங்கத்தை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்வில் உரையாற்றி பின்பு பத்திரிகையாளரை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறை இருக்காது என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து தெரிவிக்கையில், அவர் ஆட்சிக்கு வந்தால் தானே, அது ஒருபோதும் நடக்காது அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.