ரூ.500க்கும் குறைவான விலையில் ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் என்டர்டெயின்மென்ட் திட்டம் பற்றி இங்கு பார்ப்போம்.
ஏர்டெல், இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ப்ரீபெய்ட், போஸ்பெய்ட் என திட்டங்களை வழங்கி வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, 5ஜி டேட்டா மற்றும் ஓ.டி.டி தளங்களுக்கான வசதி எனப் பல்வேறு பலன்களை வழங்குகிறது. அந்த வகையில் ரூ.500க்கும் குறைவான விலையில் ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் என்டர்டெயின்மென்ட் திட்டம் பற்றி இங்கு பார்ப்போம்.
பார்தி ஏர்டெல்லின் ரூ.148 திட்டமானது 15ஜிபி டேட்டாவுடன் வருகிறது மற்றும் பயனரின் பேஸ் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி இருக்கும் வரை இந்த டேட்டாவை பயன்படுத்தலாம். இது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். இது Airtel Xstream Playக்கான சந்தாவுடன் வருகிறது (15+ OTTகளுக்கு மேல்).
ரூ.399 திட்டம்
ரூ.399 திட்டத்தில், பயனர்கள் 28 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவற்றைப் பெறுவார்கள்.
இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளேயின் OTT நன்மையுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் உள்ளது. Apollo 24|7 Circle, free Hellotunes மற்றும் Wynk Music போன்ற பல நன்மைகள் உள்ளன.
பட்டியலில் உள்ள அடுத்த திட்டம் ரூ.499 திட்டமாகும். இந்தத் திட்டத்தில், பயனர்கள் மீண்டும் 28 நாட்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவற்றைப் பெறுகிறார்கள்.
அதே போல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே, 3 மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் வெர்ஷன் சந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவை இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் ஆகும்.
கடைசியாக, ரூ.359 திட்டம் உள்ளது. இதன் மூலம், பயனர்கள் தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 1 மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவற்றைப் பெறுகிறார்கள்.
உங்கள் பகுதியில் 5ஜி கிடைக்கும் என்றால் 5ஜி அன்லிமிடெட் டேட்டா பெறலாம். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே, அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவை இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளாகப் பெறலாம்.