400 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, நவம்பர் 12 முதல் சுரங்கப்பாதை கட்டுமானத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்பதற்கான மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஆரவாரம் மற்றும் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி செவ்வாயன்று உத்தரகாசியில் இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்தார்.
நவம்பர் 12 ஆம் தேதி முதல் உத்தரகாண்டில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதியில் தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர். அந்த சுரங்கப்பாதையில் 60 மீட்டருக்கும் அதிகமான உடைந்த பாறைகள், கான்கிரீட் மற்றும் முறுக்கப்பட்ட உலோகம் இருந்ததால் அவர்கள் வெளியேற முடியாம தடுத்ததால், ஆண்கள் சிக்கிக்கொண்டனர்.
சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஏற்பட்ட வேதனையான பின்னடைவைத் தொடர்ந்து, தொடர்ச்சியான மீட்பு நடவடிக்கை மூலம் தொழிலாளர்கள் வெளியே கொண்டு வரப்பட்டனர். முன்னதாக, சுரங்கப்பாதையின் இடிபாடுகளை உடைப்பதற்கான கனரக துரப்பணம் உடைந்ததால் மீட்பு முயற்சிகள் நிறுத்தப்பட்டன. இதனால் தொழிலாளர்களை ஆபத்தான முறைகளை பின்பற்றி, மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சில்க்யாரா-பார்கோட் சுரங்கப்பாதையில் இருந்து வெளியேவ் வந்த தொழிலாளர்களைப் பார்க்க தொழிலாளர்களின் உறவினர்களைத் தவிர, மத்திய மாநில அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங்கும் அந்த இடத்தில் இருந்தார்.தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வந்ததும், அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ முகாமில் அவர்கள் முதலில் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.