ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியிப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில் அந்த நபர் அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத் என்பதும், அவர் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிவித்தார். அவரைக் கைது செய்த போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
முதல் தகவல் அறிக்கை வெளியீடு:
இந்நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியிப்பட்டுள்ளது. 'கருக்கா வினோத் 2 பெட்ரோல் பாட்டிலை ஆளுநர் மாளிகை முன்பு தூக்கி வீசினார் என்றும், தடுக்க வந்த காவலர் மீதும் பெட்ரோல் குண்டினை வீசிவிடுவதாக மிரட்டினார் என்றும் அந்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.