பி.எஸ்.என்.எல் அடுத்தாண்டு, 2024-ல் 4ஜி சேவையை வழங்க உள்ள நிலையில், பலரும் இந்த சேவையை தேர்ந்தெடுப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்பு துறை ப்ரீபெய்ட், போஸ்பெய்ட், ப்ராட் பேண்ட் சேவைகள் எனப் பலவற்றை வழங்கி வருகிறது.
எனினும் பி.எஸ்.என்.எல் மொபைல் நெட்வொர்க் 2ஜி சேவைகளை மட்டுமே வழங்கி வருவதால் பயனர் இதில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை.எனினும் தற்போது, அடுத்தாண்டு 2024-ல் 4ஜி சேவையை வழங்க உள்ளது. மக்கள் பலரும் இந்த சேவையை தேர்ந்தெடுப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், வருடாந்திர திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பாக மற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் இருந்து விலை குறைந்தாக இருக்கும்.அந்த வகையில் 2024-ல் பி.எஸ்.என்.எல் வழங்கும் வருடாந்திர மொபைல் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.